Warm Bodies இது ஒரு விதமான காதல் ???
நம்ப கம்ப்யூட்டர் ல சில படங்களை அழிக்கவே மனசு வராது அப்படிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று என்னுடைய வாழ்கையில் மறக்க முடியாத படங்களுள் இன்னும் இருக்கிறது ..
பலமுறை இந்த திரைபடத்தை பார்த்துள்ளேன் மிகவும் அருமையான கதை ..
அதிகம் மொக்கை வசனங்கள் கிடையாது .. ஹீரோ அதிகமாக R பயன்படுத்தும் வார்த்தை R, , ஆகவே காதல் திரைப்படங்களை விரும்பாத நான் இதை பார்த்த பிறகு ஒரு சில படங்களை பார்க்க ஆரம்பித்தேன் .
இந்த படம் நகைச்சுவை மற்றும் சிறந்த காதல் திரைப்பட வகையை சார்ந்தது .......!!!!
நம்பளுக்கு ஹாலிவுட் ல ஹாரர் அப்டினாலே ரொம்ப விருப்பம் .. அதுலயும் இந்த சாம்பீஸ் தான் பிரபலமானது ...அப்படிப்பட்ட Zombies படங்களை நான் சிறு வயது முதல் ள்ள இருந்து பார்த்து வருகின்றேன் .. இதுல ஒரு ஜோம்பிக்கு பெண் மேல் வரும் காதலால் என்ன ஆகிறது என்பதுதான் கதை .
....
இந்த படத்தோட கதை என்னன்னா ??
வழக்கம் போல ஊர் முழுக்க வைரஸ் தாக்கி . நறைய மக்கள் இறந்து போய் ஜோம்பி மாறி அகிர்றாங்க ..அப்புறம் இதை தடுப்பதற்கான மருந்து எல்லாம் ஜோம்பி இருக்குற சைடு ல இருக்கு. அவங்க அந்த மருந்த எடுக்க ஆறு பேர் கொண்ட குழு ஒன்றை அனுப்பி வைக்கிறாங்க ..
அதுக்கு தலைமை தாங்குறது நம்ப ஹீரோய்ன், கொள்ள அழகு ..இவங்கள பாத்தா குழில இருக்க பேய்க்கு குட காதல் வருமுங்க ..
அவங்க கண்ணு மேக்னேடிக் ஐஸ் ,, அங்க போன உடனே வழக்கம் போல ஒரு மூணு நாலு பேரு இறந்து போறாங்க. சாம்பி வேட்டை ஆடிருது ,,நம்ப ஹீரோ க்கு இந்த பொண்ணு மேல காதல் வந்து .. அந்த பொண்ண மட்டும் காப்பாற்றி தான் இருக்கும் இடத்தில வைத்து கொள்ளுறார் . இறுதியில் அவள் அங்கிருந்து தப்பிக்கிறாள் , ஹீரோ க்கு காதல் வந்ததே என்ன ஆனது ?? ஜோம்பி அட்டுழியம் என்ன ஆனது ...
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment