Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

My Sassy Girl (2001) எத்தனை பேருக்கு அமையும் இந்த வாழ்க்கை

எத்தனை   பேருக்கு  வாழ்வில்  இப்படி  ஒரு  வாய்ப்பு  அமைந்து விடபோகிறது    என்று  தெரியவில்லை , ஒருவரின்  வாழ்கையில்  எதிர்பாரதவிதமாக  அமைந்ததே  தான்  இந்த  திரைப்படம், உண்மை  கதையும் கூட .. முதல்  பாதியில் சிரிப்பும்  , சிறப்பும்மாய் , இரண்டாம்  பாதி  அதோடு  சேர்த்து  கொஞ்சம்  சென்டிமென்ட்  உடனும் , இறுதியில் அழாகானதொரு   கதையச்  சொல்லி  , அதில் நம்  அனைவரையும்  பயணிக்க  வைத்து  கதையை  முடிக்கிறார்கள்.. 





 இதுபோன்ற  படங்கள்   நாலு  மணி  நேரம்  ஓடினாலும்  சலிக்கமால்  பார்க்கலாம் .  இந்த  படத்திற்கு  ஏற்ற  மாதிரி  எனக்கு கிளைமேட்  இங்கு  மழை   பெய்துகொண்டு  இருக்கிறது , ஜன்னல்களுக்கு  அருகில்  சாரல்  துளிகள்  மேலே  விழுந்துகொண்டிருக்கும்  ஒரு  உன்னத காலை  பொழுதில்  தொடங்கி  முடியும்  வரை  நல்ல  பீல்  குட்  மூவி . <3 nbsp="" p="">

நேற்று  பார்த்த  Unforgettable(2016)  , என்னை  மிகவும்  வெகுவாக  கவர்ந்தது அதோடு  சேர்த்து  இந்த  படமும் நல்ல  ஒரு  Feel   ஐ  கொடுத்துவிட்டது , பரிந்துரைதவர்களுக்கு  மிக்க  நன்றி . எந்த  ஒரு  எதிர்பார்ப்பும்  இல்லாமல்  பார்த்த  எனக்கு , இந்த  படம்  மனதிற்குள்  ஒரு  கோட்டை  கட்டிவிட்டது , ஆகையால்  கதையை  சொல்வதில்  துளி  விருப்பம்  இல்லை , பார்க்கவேண்டும்  என்று  சொல்லிவிட்டேன்  ஏன்   பார்க்கவேண்டும்  என்பதை  சொல்லி  விடுகின்றேன் .

 ஒருநாள்  ரயில்  நிலையத்தில்  போதையில்  தள்ளாடி  கொண்டிருக்கும்  ஒரு  பெண்ணிற்கு  எதார்த்தமாக  உதவி  செய்ய  போன   ஹீரோவும்  ஹீரோயினும்  பயணிக்கும்  ஒரு  பயணம்  தான்  இந்த  படம்  ..  இந்த  படத்தில்  ஒவ்வொரு  காட்சியிலும்  என்னை  வெகுவாக  கவர்ந்திழுக்க செய்கிறாள் அந்த  பெண்  , அவர் 80 % கலக்குகிறார் , என்றால் இவங்க 90%. . அவள்  மட்டும்  நடிக்க  வில்லை  கண்  மூக்கு  வாய் கை  கால்  எல்லாமே  ஒட்டுமொத்தமாக அசத்துகிறது .

ஒவ்வொரு  காட்சியும் , பின்னணி   இசையும் செய்யும்  சேட்டைகளும் , என  அடுக்கி  கொண்டே  போகலாம் , ஆரம்பத்திலே  சொலிட்டேன்  எனக்கு  கதையயை  சொல்வதில்  துளி  விருப்பமும்  இல்லை , உலகத்தில்  சினிமாவை  ரசிக்கும்  ஒவ்வொருவரும்  காண  வேண்டிய  ஒரு  அற்புதமான  திரைப்படம் . உடனடியாக  பார்த்து  முடிக்கவும்  நன்றி , மீண்டும்  உடனே  பார்க்கவேண்டும்   என்று  தோன்றுகிறது .

படத்தில்  உள்ள  நிறைய  காட்சிககளை   ஏற்கனவே  இதற்க்கு  முன்னால்  வேறு  எங்கோ   மற்றவர்களின்  நடிப்பில்  பார்த்த  மாதிரி  நினைவு  துணுக்குகள்  வந்து  போயின  , ஒரு  படம்  அல்ல  பல  படங்களில் , அதுபற்றி  எல்லாம்  பேசி  என்னுடைய   நேர்த்தி  வீணடித்து  கொள்ள  வில்லை .

 இது  101% அடிச்சு  சொல்லுவேன் பெஸ்ட் , வொர்த் , சலிப்பே  இல்லாமல்  அசத்திக்கொண்டே  நம்மையும்  அவர்களோடு  அழைத்து செல்லும் .
ஏற்கனவே  நிறைய  பேரு  பார்த்து  இருப்பீங்கன்னு  நினைக்கிறன் , ஒருவேலை  பார்க்கமால்  ஒருவர்  இருந்தாலும்  பார்த்துவிட  வேண்டும்  என்பதற்காக  இந்த  அறிமுக  பதிவு , நன்றி  

சிவஷங்கர் 

3 உங்கள் கருத்து:

இந்த படம் release ஆகி 15 வருடங்களுக்கு மேலே ஆகின்றது..
ஆனால் இப்பொழுது பார்த்தாலம் புதிதாக பார்ப்பது போல் இருக்கும்..
பல தமிழ் படங்களுக்கு inspiration ஆகவும் base ஆகவும் அமைந்துள்ளது..

அந்த மலைகளில் நின்றுக்கொண்டு heroine மறுப்பக்கம் இருக்கும் heroவிடம் மனதுடைந்து கத்தும் sceneல் கண்டிப்பாக நமக்கு அழுகை வந்துவிடம்..

அனைவரும் கட்டாயம் பார்க வேண்டிய படம் :) :)

A millionaire's first love (korean)
Il mare (korean)
A moment to remember (korean)
Amelie (french)

மேலே இருக்கும் சில படங்களும் நன்றாக படைக்கப்பட்டவை..
பார்த்துவிட்டு உங்கள் கருத்தை பகிரவும் :) :)


நன்றி சகோ கண்டிப்பாக பார்க்கிறேன் ,

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger