ARQ (2016) திரைப்படத்தின் திரைக்கதை இப்படி தான் இருக்க வேண்டும் .
வெகுநாளுக்கு பிறகு இன்னும் ஒரு மணி நேரம் சேர்த்து ஓடக்கூடாதா? என்று என்னுடைய எதிர்பார்ப்பை எகிற வைத்த SCI-FI THRILLER திரைப்படம் தான் ARQ, இதனை இயக்கிய இயக்குனருக்கு இதுதான் முதல் திரைப்படம் என்று கூகுல் சொல்லுகிறது. இதற்கு முன்பு ஒரு சீரீஸ்க்கு ஸ்க்ரீன் ரைட்டர் ஆகவும் , ஒரு குரும்படத்தை இயக்கி இருப்பதாகவும் தெரிய வருகிறது . சிறந்த ஸ்க்ரீன் ரைட்டர் என்ற விருதை வாங்கி இருக்கிறார் அந்த சீரீஸ்காக ,
ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எப்படி இருக்க வேண்டும்? என்பதை சொல்லி கொடுக்கும் திரைப்படம்தான் தான் இது . அமாம் இது Time-loop சார்ந்தது , ஒருசிலருக்கு காலத்தை கடந்து பயணம் செய்யும் திரைப்படங்கள் மிகவும் கவர்ந்திருக்கும் , ஒரு சிலருக்கு ஒருவனுக்கு நடந்ததோ , அல்லது நடக்கும் நிகழ்வோ. திரும்ப , திரும்ப மீண்டும் மீண்டும், தொடர்ந்து நடந்து பார்க்கும் நம்மை கொளப்பி, பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு இழுத்து சென்று, இதுதான் நடக்கும். என்று இறுதியில் முடிப்பார்கள். அப்படிப்பட்ட விரும்பிகள் தான் எனக்கு தெரிந்து அதிகம். நானும் அதற்கு ரசிகன் தான் . இந்த வகையை Time Loop என்று சொல்லுவார்கள். டைம் ட்ராவல், டைம் லூப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள? கூகுளை நாடவும் . நான் விரைவில் அதுபற்றி எழுதுகிறேன் . இப்போ படத்திற்கு வருவோம் .
எதற்காக இவனை அவர்கள் பிடிக்க வேண்டும் , ஏன் அடிக்க வேண்டும் . என வெறும் ஒன்றரை மணி நேரம் ஆரம்பத்தில் இருந்த அதே விறுவிறுப்போடு , அடுத்த ஒவ்வொரு நிமிசமும் ட்விஸ்ட் ட்விஸ்ட் ட்விஸ்ட் ட்விஸ்ட் ட்விஸ்ட் ன்னு இறுதி வரை நம்மையும் அழைத்து செல்வார்கள் .. இதனை மட்டும் தெரிந்துகொண்டு படம் பார்ப்பவர்களுக்கு செமத்தியான விருந்து .
ஆகோ!! ஓகோ!! அட்டகாசம்!! அகில உலக சிறந்த படம் என்றெல்லாம் புகழும் அளவுக்கு இல்லா விட்டாலும் , கொடுமை, மொக்கை , சுமார் என்று மாபெரும் உலக சினிமா ரசிகர்கள் இருந்தால் இந்த படத்தை skip செய்து விடவும் . இது போன்ற படங்களை தொடர்ந்து பார்பவர்களுக்கு வருஷம் ஒரு படம் வந்து தங்களுடைய எதிர்பார்புகளை பூர்த்தி செய்து விடும், அந்த வகையில் இந்த வருஷம் இது .
சினிமா துறையில் நுழைய முயற்சிக்கும் ரைட்டர் , ஸ்க்ரீன் ரைட்டர் , இயக்குனர் , மற்றும் சிலருக்கு இந்த படம் பயனுள்ள வகையில் அதே சமயம் உங்கள் நேரத்தை வீணாக்காமல் இருக்கும் . ஒரு வொர்த் ஆன திரைப்படம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இது ஒரு ஒரிஜினல் NETFLIX திரைப்படம் என்பதால் இதனை அங்குதான் பார்க்க முடியும் என்று நினைக்கிறன். நான் அதில் தான் பார்த்தேன். முடிந்தால் முயற்சித்து பாருங்கள் இணையத்தில் எங்காவது கிடைத்தால் பார்த்து மகிழுங்கள் .மறக்காமல் தங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள் .
படத்திற்க்கான முன்னோட்டம் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்
நன்றி
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment