Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

Gangs of Wasseypur (2012) ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு முரட்டு திரைப்படம்

 பார்ட் 1 "ஆரம்பமும் அதகளமும்"


⚔ ஆரம்பத்தில் இருந்தே துப்பாக்கி சத்தமும், வெடிக்கும் குண்டு சத்தமும் , தெறிக்கும் ரத்தமுமாய் படம் நகர்கிறது, இரண்டு பேருக்கு நடுவில் இருக்கும் பிரச்சனை வெறித்தனமாகுவது தான் கதை, சாதரான கதையை வைத்துகொண்டு திரைக்கதையிலும், காதாபதிரங்களின் நடிப்பிலும் பட்டய கிளப்பி இயக்கி இருக்கிறார் அனுராக் <3 span="">

⚔ வழக்கமான படங்களில் ஒரு கதையவைத்துகொண்டு எப்படி மிதிச்சாலும் நகராத மிதிவண்டி போல நகர்த்தி அதுல நாலு, அஞ்சி பாட்ட வச்சி முடிப்பாங்க. பாதியிலே பிஞ்சுகிட்டு போற மிதிவண்டி செயின் மாறி சில படங்கள் உண்டு, அத்தனையும் நொறுக்கி தள்ளிய படம் இது.
தந்தை மகன் வழி வழியா வர மூன்று தலைமுறைக்கு இடைல நடக்குற கதைதான்.

⚔ சர்தார் பாய் (Manoj Bajpayee) இவர் நடிக்கவில்லை இவர் கண், கை, கால்,உடம்பு ஒட்டுமொத்தமா நடிக்கிறது , இவர் நடித்த நிறைய படங்கள் எனக்கு பிடிக்கும் பார்க்க தவறிய படங்களை எப்படியாச்சும் பார்த்திட வேண்டும். பக்கமாக aligrah ஓரினச்சேர்க்கையாளர் படம் பார்த்தேன், கதையில் நடிப்பில் வாழ்ந்திருக்கிறார்.

⚔ இதில் நான் அதிகாமாக ரசித்த காட்சி நிறைய இருக்கிறது அதை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்,அதகளமான காட்சி ஒன்று அதை மட்டும் சொலிக்க விரும்புறேன். கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் மீண்டும் மீண்டும் பார்த்தேன்,

⚔ உடம்புல ஒருபக்கம் மட்டும் இருபது தோட்டா மேல போயிருக்கும், தலைல வலது புறம் மூளைக்கு நேரா ஒரு தோட்டா சொருகிருச்சி அப்படி இருந்து எனக்கு சாவே இல்லடா ன்னு சொல்லுற மாறி ஒரு BGM ஓட வெளில எந்திருச்சி வராரு பாருங்க அதகளம்.

⚔ படத்தோட ஒளிபதிவு பெர்பெக்ட் அதுதான் என்னை மீண்டும் ஒருமுறை பார்க்க ஆர்வத்தை தூண்டுகிறது, இப்படி பட்ட படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம், குறிப்பா BGM ஆரம்பத்துல இருந்தே படத்தின் பின்னணி இசையும்,சின்ன சின்ன சத்தங்களும் பின்னிட்டாங்க, அதிலும் ரீமா சென்நிற்காக தனி இசை <3 span="">
ஒரு படத்திற்கான ஒட்டுமொத்த பொறுப்பும் இயக்குனர் தான் , அவர்தான் அந்த படத்தின் முதுகெலும்பு மிரட்டி இருக்கிறார் .

⚔ படத்தை பற்றி விரிவாக படிக்க நினைப்பவர்கள் கருந்தேள் ப்ளாக் ல படிங்க நிறைய பேரு அவங்க அவங்க கருத்துக்களை பகிர்ந்திருப்பங்க

⚔ வழக்கமா நீங்க சொல்லுற மாறி இப்பதான் படத்தை பார்த்தியா ன்னு கேர்க்கமா உங்களோட அனுபவத்தையும் கருத்துக்களையும் பகிர்ந்தால் நலம்.. லைக் மட்டும் போடாதிங்க கமெண்ட் உம் பண்ணுகபார்க்காதவர்கள் விரைவில் பாருங்கள் , நண்பர்களுக்கும் பார்க்க சொல்லி பகிருங்கள்.



⚔ குறிப்பு: படத்தின் நேரம் அதிகம் என்பதால் இரண்டாக பிரித்து பாகம் 1 பாகம் 2 ன்னு ஒரே ஆண்டில் வெளிவிட்டார்கள், திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது நிறைய விருதுகளுக்கு பரிந்துரையும் செய்ய பட்டது விருதும் வாங்கியது , இரண்டாம் பாகமும் பார்த்துவிட்டேன்

நன்றி
#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger