Dheepan (2015) போராளியின் வாழ்க்கையும் போராட்டமும்
இலங்கையில் இனபோரட்டம் நடந்து கொண்டு இருக்கிறது , அங்கிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு மூன்று பேர் வேறோருவர்களுடைய பார்போர்ட் மூலம் வருன்கின்றனர் , இந்த மூன்று பேருக்கும் முன் பின் யாரையுமே தெரியாது .
சிவதாசன் என்பவர் தீபன் என்பவரின் பெயரிலும் , யாழினி அவன் மனைவியாகவும் அவங்களுக்கு குழந்தையாகவும் சிறுமி ஒருத்தி மூவரும் இங்கிருந்து அங்கு செல்கின்றனர் .
யாழினி அவள் தன்னோட உறவினர் இருக்கும் லண்டன் க்கு செல்வதாக சொல்கிறாள் , இருந்தும் அங்கே வசிகின்றனர் , அவனுக்கு ஒரு வேலையும் கிடைகிறது , அவளுக்கு ஒரு வீட்டில் வேலை கிடைகிறது .
இலங்கையில் தான் இனப்போர் அது இதுன்னு போராட்டத்தை கடந்த அவங்களுக்கு, அங்கயும் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது இறுதியில் என்ன ஆனது என்பது மீதிகதை ,
யாதர்த்த நடிப்பின் மூவரும் நம்மை கவர்கின்றனர் , படம் முடிந்த பிறகும் பல காட்சிகள் நினைவில் இருக்கும் , 99% இலங்கை தமிழ் தான் பேசுவார்கள் ஆகவே பார்பவர்களுக்கு சப் டைட்டில் பிரச்சனை இருக்காது . . கொஞ்ச தான் பிரெஞ்சு ஆங்கிலம் லாம்.
நிச்சயமாக பார்த்தே ஆக வேண்டுமா என்று சொல்லும் அளவுக்கு இல்லாவிட்டாலும் , ஒரு இயல்பான கதையாக பார்க்க வேண்டும் . இந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கு இந்த படம் ஒரு முக்கிய படமாக அமைந்ததாகவும் , நிறைய பாராட்டுக்குள் குவிந்ததாகவும் தெரிவித்தார் .
நன்றி
0 உங்கள் கருத்து:
Post a Comment