Gangs of Wasseypur (2012) அதிரடி யுத்தம் அதற்கு மேல் தெறிக்கும் ரத்தம்
பார்ட் 2 "ஆரம்பமும் அதகளமும்"
⚔ முதல் பாகத்தில் தந்தை இறக்க, வெறியை தீர்த்துக்கொள்ள களம் இறங்குகிறார் மூத்த மகன், அவரையும் இழக்க பின்பு வெறித்தனத்துடன் கூடிய பைசல் (சித்திக்) களம் இறங்குகிறார்.. இழக்கிறார் ஒவ்வொருவருராக இருந்தாலும் பழிக்கு பழி தான்.
⚔ வேகம் அதிகரிக்கிறது, முதல் பாகத்தின் தலைப்பு போடுவதற்கு ஒரு ஆரம்ப காட்சி இருக்கும் அதை எதுக்கு நினைத்துகொண்டு பார்த்திருப்போம் இதில் அதற்க்கான அர்த்தத்தையும். கதையை தெளிவாக சொல்லி விடுவார்கள்,
⚔ இவனை அவன் கொள்ள அங்கிருந்து நான்கு பேர் வந்து இவனை கொள்ள மீண்டும் இவன் மகன் அவனை கொள்ள சென்று கொண்டிருந்த கதையில் ஒருவழியா சித்திக் மெயின் ஆரம்ப வில்லனை ஆசை தீர சுட்டு கொல்லுறான், துப்பாக்கில குண்டு தீரும் அளவு சுடுறான்,ஒவ்வொரு துப்பாக்கியிலும் சுடுறான், வெறி தீர.
⚔ இதில் எனக்கு மூன்று காட்சிகள் மிகவும் பிடித்திருந்தது, சித்திக் ஜெயில் சென்று வெளி வரும் காட்சி, கடைசி மெயின் வில்லனை ஆசை தீரும் சுடும் காட்சி,மொத்தத்தில் இந்த படம் வெறித்தனமான பக்கா படம்
⚔ BGM பின்னி பெடல் எடுத்து இருக்காங்க, வரைக்கூடிய அதனை பாடல்களும் சரி, பழைய பாடல்களும் சரி மீண்டும் மீண்டும் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன
⚔ எனக்கு மீண்டும் ஒருமுறை நேரத்தை அமைத்துக்கொண்டு இந்த படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரித்து விட்டது, இன்னொரு நல்ல செய்தி என்னவென்றால் இந்தப்படம் imdb டாப் 250 ல், 250 இடம் பிடித்திருகிறது, இப்படி பட்ட படங்களை இறப்பதற்கு முன்பு கட்டயாம் பார்த்திருக்க வேண்டிய லிஸ்ட் ல் வைத்திருக்க வேண்டும் எனக்கு மிகவும் பிடித்திருகிறது நான்அந்த லிஸ்ட் ல் தான் வைத்திருக்கேன்.
⚔ வழக்கமா நீங்க சொல்லுற மாறி இப்பதான் படத்தை பார்த்தியா ன்னு கேர்க்கமா உங்களோட அனுபவத்தையும் கருத்துக்களையும் பகிர்ந்தால் நலம்.. லைக் மட்டும் போடாதிங்க கமெண்ட் உம் பண்ணுகபார்க்காதவர்கள் விரைவில் பாருங்கள் , நண்பர்களுக்கும் பார்க்க சொல்லி பகிருங்கள்.
⚔ குறிப்பு: படத்தின் நேரம் அதிகம் என்பதால் இரண்டாக பிரித்து பாகம் 1 பாகம் 2 ன்னு ஒரே ஆண்டில் வெளிவிட்டார்கள், திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது நிறைய விருதுகளுக்கு பரிந்துரையும் செய்ய பட்டது விருதும் வாங்கியது , இரண்டாம் பாகமும் பார்த்துவிட்டேன்
நன்றி
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment