Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

Wild Tales (2014) வக்கிர உணர்வும் பழிவாங்கும் வெறியும்


ஆமா  இந்த  திரைப்படம்  யாரு??  யாரு??  பாக்கணும் ..  எல்லாரும் . உறுதியாக  பாக்கணும் ,   கண்டிப்பாக  பார்க்கவேண்டும்  என்று  சொல்லிவிட்டேன்  ஏன்  பார்க்கவேண்டும்  என்பதனையும்  சொல்லி  விடுகிறேன் .





 நம்மை  வெகுவாக  கவர்வது  குறும்படங்கள்  தான்  எத்தனையோ  படங்கள்  இருந்தாலும்  ,  என்னை  அதிகமாக  கவர்பவை  குறும்படங்கள்  தான்  அதில்  எந்த   மாற்றுகருத்தும்  இல்லை  , அப்படி  அசத்தலான  ஆறு  குறும்படங்கள்  சேர்ந்த  ஓரு தொகுப்பு தான்  இந்த   திரைப்படம்  WILD TALES.

ப்ளாக்காமெடி த்ரில்லர்  வகையில் Damián Szifron  
 இயக்குனர்,  நம்மில்  மறைந்து  இருக்கும்  பல  வக்கிர  எண்ணங்களையும் , பழிவாங்கும்  எண்ணங்களையும்.  வெவ்வேறு  கோணங்களில் வித  விதமான  தொடர்பான  ஆறு  கதைகளின்  மூலம்   தெளிவு படுத்திக்காட்டுகிறார் .   அதிலும்  மூன்றாவது  கதை  மாஸ்டர்  பீஸ் .. தலைபிற்கும்  கதைக்கும்  பொருந்துகின்ற  மாதிரி  மிரட்டலான  கதாபாத்திரங்கள்  தான் , 

1.PASTERNAK
 யார்  இந்த  PASTERNAK ??  முதலில்  விமானத்தில்  ஒரு  பெண்ணுக்கும்  இன்னொரு  இசை  விமர்சகருக்கும் ஒரு  சிறு  கலந்துரை , 

பிறகு  விமானத்தில்  வரும்  அத்தனை  பேரும்   அதில்  கலந்து  கொள்கின்றனர் ..  தீடீர்  ன்னு  ஒரு  ஷாக்  அது  என்ன  ஷாக் ?  என்ன  கலந்துரை  ?  ஏன்?  என்ற  கேள்விகளுக்கு  பதில்  முதல்  பத்துநிமிடத்தில்   உள்ளது   இது இசையில்  பின்னி  பெடல்  எடுத்து  இருப்பாங்க ..

2.THE RATS 
ஆளே  இல்லாத   ரெஸ்டாரன்ட்  க்கு  ஒருவன்  வருகிறான் , இவன்.  அங்கு  வேலைபார்க்கும்  பெண்ணின்  குடும்பத்திற்கு  விரோதி. என்பதை  அவள்  பார்த்த  வுடன்  கண்டுனர்கிறாள்  , அதனை  அவள்   சமையல்  செய்பவளிடம்  சொல்கிறாள் , பிறகு  சமயலாலி   ஒரு  திட்டம்  தீட்டுகிறாள்????   
என்ன  திட்டம்  தீட்டினார்கள் ??  என்ன  நடந்தது  என்பது  மிரளவைக்கும்  மீதி கதை .   சமையல்  செய்கிற  மேடம் தான்  மிரட்டல்  . 
மூன்று  முறை  சிரித்தேன்(நீங்களும்  பாக்கும்  பொது  சிரிப்பீங்க)  , பிறகு  விறுவிறுப்பை  கிளப்பி  விட்டார்கள் , 


3. THE STRONGEST
மாஸ்டர்  பீஸ்  என்னை  வெகுவாக  கவர்ந்த  கதை .  ஒரு  ஹைவே  ரோடு  அதுல  ரெண்டு  காரு , அதுக்குள்ள  ரெண்டு  பேரு , இவங்களுள்ள  வீம்பு இறுதியில்  என்ன  ஆனது ??  
இதை  மட்டுமே  சொல்ல  விரும்புகின்றேன்  வேறெதையும்  தெரிந்துகொள்ளாதீர்கள் . 

 நாம்  பயணம்  செய்யும்  பொது  நிறைய  சேஷ்டைகளை   செய்வோம்.   . உதாரனத்திற்கு  ஒருவனை  முந்தி  விட்டு  நான்தான்  எல்லாம்,  கைய   ஆட்டி  காமிகிறது    , எதோ  ஒரு  கெத்தா   ஒரு  வேலைய  காற்றது , அப்படி  ரோட்டில்  நடக்கும்  ஒரு  கதை  தான்  , நிச்சயமாக  சொல்லுறேன்  நீங்க  பார்க்கும்  முன்பு  என்ன  வேணாலும்  யூகித்து  கொள்ளுங்கள்  ஆனால்  அது  நடக்காது  , இது  முழுக்க  முழுக்க  வேறு  பார்த்து  உணரவும் :) 

4.LITTLE BOMB
தன்னோட  மகளின்  பிறந்தநாளுக்கு  சரியான  நேரத்தில்  செல்லமுடியவில்லை, அதற்கு  முக்கிய  காரனமாய்  ஒரு  பிரச்சனை அமைகிறது ,  பல  பிரச்சனை  வர  , ஒருகட்டத்தில்  பொங்கி  எழுகிறார்  , ? அதென்ன   பிரச்னை ? சத்தியமா  இதுவும்  நீங்க  யூகிக்க  மாதிரி  இல்லை   வேறு  ஒரு  நல்ல  கதை .  பாருங்கள் 

5. THE PROPOSAL
கர்ப்பிணி  பெண்  ஒருத்தரை  காரில்  இடித்து  விடுகிறார்  ஒருவர் , இடித்து  விட்டு  நிக்காமல்  சென்று  விடுகிறான் .  இடித்தவனை  போலிஸ்  தேடுகிறது  என்ன  ஆனது என்பதை  பார்த்து  தெரிந்துகொள்ளுங்கள் , இதில்  நடித்திருக்கும்  அப்பா  கதாபாத்திரம்  அட்டகாசம் , வழக்கமாக  ஒரு  பணக்கார  வீட்டு  பையன்  இப்படி  செய்திட்டான்  என்ன  நடக்கும் அப்படின்னு  நினச்சி  தான்  பார்த்தேன் நடந்தது என்னவோ  அதான்  அனா   கதைபடுத்த  பட்டிருக்கும்  விதமும்  இறுதியும்  கண்ணில்  தண்ணீர்  வரவைத்து  விட்டது . 

6. UNTIL DEATH TO US PART 
இந்த  கதை  தான்  கொஞ்சம்  இழுத்த  மாதிரி  இருக்கு ன்னு  பார்த்தேன்  ஆத்தாடி  ஆத்தாடி  குரும்படத்துகுள்ள எம்புட்டு  வேலை  காட்றாங்க .  சிரிக்கிறதா  சீரீசா  பாக்குறதா  , எங்க  போய்  எங்க   வந்து  விடுவாங்க  கதைய . பக்கவா  இருக்கிறது  நடிகையின்  தேர்வு , மூன்றாவது  படம்  என்னை  வெகுவாக  கவர்ந்தது  மீதி  அனைத்துமே  அட்டகாசம் . 

ஆக  ஆறு  கதைகளிலும்  எதையுமே  உங்களால்  யூகிக்க  முடியாது  அந்த  அளவில்  தான்  இருக்கும்  , மிரட்டலான  இசை , அட்டகாசமான  நடிப்பு . மிக  சிறந்த  இயக்கம் , கண்டிப்பாக,  நிச்சயமாக,உறுதியாக , உடனடியாக   இன்னும்  என்ன  என்ன  இருக்கு  ஆ!!!  இறப்பதக்குள் பார்த்துவிட  வேண்டிய  கட்டாயமான  திரைப்படம் . 

திரைப்பட  விழாக்களிலும்  மற்றும்  சிறந்த  அயல்  நாட்டு  திரைப்பட  பிரிவில்  கலந்துகொண்ட  , மேலும்  பல  விருதுகளை  அள்ளிய  திரைப்படம் பத்துக்கு  பத்து  கண்ண  மூடிக்கொண்டு  போடலாம் . பார்த்தவர்கள்  தங்கள்  கருத்துகளை  சொல்லுங்கள் , பார்க்காதவர்கள்  உடனடியாக  பாருங்கள் . 
நன்றி . 










2 உங்கள் கருத்து:

Panda said...

நல்ல பகிர்வு..எனக்கு மிகவும் பிடித்தது pasternak இல் கடைசியாக அவன் அம்மா அப்பாவை நோக்கி வரும் விமான காட்சியே <3

அவன் பிறந்ததில் இருந்து , அவன் கூட அருகில் விமானத்தில் அமர்ந்து இருந்த பயணி வரை , ஒட்டுமொத்தமாக இப்படி செய்ய என்ன காரணமா ?? இருக்கும் ன்னு பல கேள்வி எழுந்தது என் மனதில் நானும் எனக்கே ஒரு பதிலை சொல்லிக்கொண்டு அடுத்த படத்திற்கு கடந்து விட்டேன் , இதுவரை யாருமே யோசிக்காத யோசனையா இருந்தது பத்து நிமிடம் பக்கவான படம்

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger