Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

Spartacus (1960) பாட்டாளி வர்கதிற்காக பாடுபட்ட மிகச்சிறந்த வீரன்


பண்டையகால வரலாற்றில் பாட்டாளி வர்கதிற்காக பாடுபட்ட மிகச்சிறந்த வீரன் , என்று போற்றப்படும் Spartacus என்ற அடிமை. வீரனான கதைதான் இந்த திரைப்படம் ..
பல மொழிகளில் மொழிமாற்றம் செயப்பட்ட , அதிகம் விற்பனை செய்ப்பட்ட Spartacus என்ற நாவலை படமாக இயக்கி இருக்கிறார் குப்ரிக் . ஹாலிவுட் ல் ஒரு ஆகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக போற்றபடுபவர் குப்ரிக் , அவர் இயக்கத்தில் நான் பார்க்கும் முதல் படம் தான் இது ..
கம்பீர உடல் அமைப்பு ஏற்ற மாதிரி பொருந்துகிற நடிகர் . அடிமை பட்டு கிடந்த இவர் .. ஒருநாள் தன்னுடைய சக ஆளிடம் சண்டை இட நேரிடுகிறது. அதில் ஒன்று சாகடிக்க வேண்டும் இல்லை சாகவேண்டும் என்ற நிபத்தனை , தேர்வு செயப்பட்ட வனுடன் மோதி தோல்வியின் விழும்பில் இருக்கிறார் , ஆனால் இவரை கொள்ளாமல் இவர்களை ஏவி விட்டர்களை கொள்ள முற்படும் பொது அவரை கொன்று விடுகின்றனர் , தன்னுடைய நண்பர்களில் ஒருவன் எனக்காக அவன் உயிரை வி்டுகிறான். பொறுத்தது போதும் Spartacus கோபம் அதிகரிக்க , ஒருநாள் அங்கிருந்து அத்தனை அடிமைகளும் தப்பித்து தனக்கென தனி இடத்தில் வசிக்கின்றன , அந்த கூட்டத்திற்கு Spartacus தலைமை பொறுப்பில் அத்தனை பேருக்கும் சண்டை கற்று கொடுக்கிறார் ,


Spartacus தலைமையிலான வீரர்களுக்கும் , ரோம நாட்டு படை வீரர்களுக்கும் போர் ஆரம்பம் ஆகிறது ?? இதில் Spartacus அணி வென்றால் அவர்கள் மேலும் அவர்களுடன் அடிமை பட்டு கிடக்கின்ற அவர்கள் நாட்டு மக்களை மீட்டெடுத்து தன் சொந்த நாட்டிற்கு செல்லலாம் , தோற்றால் ஒட்டுமொத்தமாக அத்தனை பேர் உயிரையும் இழக்க நேரிடும் இறுதியில் என்ன ஆனது என்பது மீதி கதை ?? நிச்சயமாக நீங்கள் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக நான் முக்கியமான கதாபாத்திரம் திருப்பு முனைகளை பற்றி சொல்லவில்லை எல்லாம் காரணம் இருக்கு .. வசனங்கள் அனைத்தும் மிரள வைக்கிறது,  இசையில்  மூழ்கடிக்க  செய்யும்  அதிலும்  கூட்டமே  ஸ்பார்டகஸ்  ஸ்பார்டகஸ்  என்று  கத்தும்  போது நம்மையும்  அறியாமல் ஒரு  அதீத  அனுபவம் கிடைக்கும் , ஜெயில்  இருந்து  தப்பிக்கும்  காட்சிகள்  என  ஒவ்வொரு  சீனும்  சிறப்பு  அட்டகாசமான திரைப்படம்,நிறைய  விருதுகளை  அள்ளி  குவித்து  இருக்கிறது  , பார்த்தவர்கள்  தங்கள்   கருத்துக்களை  பகிர்ந்துகொள்ளுங்கள்  , பார்க்காதவர்கள்  பார்த்துவிட்டு  வாருங்கள்  படத்தை  பற்றி  பேசுவோம் 
பாருங்கள் நன்றி

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger