Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

Celluloid Man (2012) திரைப்படக் காதலர் பி.கே. நாயர்

                   செல்லுலாயிட் மேன்

பரமேஸ் கிருஷ்ணன் நாயர்  கேரளா  மாநிலத்தில்  பிறந்த  இவருக்கு  சினிமா  மேல்  அளவு  கடந்த  ஈர்ப்பு  , ஈர்ப்பு   என்பதை  விட  காதல்  என்று  சொல்வதே  சரியாக  பொருந்தும்.    அவருடைய  சிறுவயதில்  திரைப்படங்களில்  மேல்  எழுந்த  காதல்  தான்  ,  பின்னர்  திரைப்பட  கழகம் , குழுமம்  என்றாக  உருவானது .  திரைப்படங்களை  சேகரிப்பதிலும்   இவருக்கு  காதல்  அதிகம் தான் . 







நினைத்து  பாருங்கள்  நமது  இந்திய  படைப்புக்கள்   எத்தனை   நம்மிடம்  இருக்கிறது  என்று ,  சினிமா  தயாரிக்க  பட்ட  காலங்களில்  இருந்து  பல  படங்கள்  வெளிவந்துள்ளதுன.  அதில்  சொற்பமே  இந்திய  சினிமாவிடம்  உள்ளது ..   பிறகு  இவர்  சேகரித்த  படங்கள்  அதிகம் . இந்திய  படங்கள்  மட்டுமல்லாது  பல  உலக  படங்களையும்  தேடி  தேடி  சேகரித்து  இருக்கிறார் , இந்த   படத்தின்  முன்னோட்டதினை  பாருங்கள்  அதிலே  தெரியும் . 

 பாதுகாப்பது  மட்டும்  இல்லாமல்  நிறைய  பேருக்கு  திரையிட்டு  காட்டி  இருக்கிறார் . ஒவ்வொரு  முறையும்  திரைப்படம்  பார்க்கும்  பொழுது  அதிலிருந்து  கருத்துக்களை  ஒரு  நோட் ல்  எழுதி  கொண்டு  இருப்பார் .. இந்த  ஆவன  படத்தில்  அவரை  பற்றி  பிரபலங்கள்  சொல்லும்   கருத்துக்கள்  ஒவ்வொன்றும்  சினிமா  விரும்பிகளை  ஈர்க்க  செய்கிறது ..


தமிழில்  பழைய  அறிய  திரைப்படங்களை  சேகரிக்க  வேண்டும்  என்று  வலியுறுத்தி  உள்ளார் . வருத்தமான  செய்தி  என்வென்றால்  இவர்  இந்த  வருடம்  மார்ச்  மாதம் இறைவனை  நோக்கி  சென்று  விட்டார் , சினிமா  படங்களை  விரும்பும்  ஒவ்வொருவரும்  இவரை  பற்றி  தெரிந்துகொள்ள்  வேண்டும்  என்று  சொல்ல  விரும்புகிறேன் . 


நேரத்தை  அமைத்து  கொண்டு  இந்த  டாகுமெண்டரி ஐ  விரைவில்  பார்த்துவிடுங்கள் , இதில்  நிறைய  அறிய  படங்களின்  சில  சில  காட்சிகள்  இடம்பெற்றுள்ளன , நான்  திருப்பூர்  திரைப்பட  விழாவில்  பார்த்தேன் , DVD அல்லது வேறுஎங்காவது  பார்க்க  வாய்ப்பு  கிடைத்தால்  தவறாமல்  பயன்படுத்தி  கொள்ளவும் . பல  திரைப்படவிழாவில்  கலந்து  கொண்டுள்ளது .


இந்த  ஆவண  படத்தில்  இருந்து  நிறைய  தெரிந்து கொண்டேன்  , அவருடைய  வாழ்க்கை  வரலாறு  படம் வரவேண்டும் , திரைபடத்தின்  மேல்  காதலை  வளர்க்க  செய்யுங்கள் 
நன்றி 



0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger