Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

Bad Guy (2001) உடல்மொழி மூலம் ஒரு கதை சொல்லி 18+

இந்த  திரைபடத்தை  பார்த்த  பிறகு  இதனை  பற்றி  எழுதவேண்டுமா என்று  நினைத்தேன் . ஏனென்றால்  முதல்  முறை  பார்த்து  முடித்த  பிறகு.  சரி  எல்லா  படங்கள்  மாதிரி  இதுவும்  ஒரு  கதை  ன்னு  விட்டுட்டேன் , பிறகு  இந்த  படத்தை  பார்த்த மற்றொருவரிடமும்  கேட்டேன்  அவரும்  பார்த்தேன்  , அப்படி  ஒன்றும் ஈர்க்க வில்லை  என்றார் . சரி  இன்னொருவரிடம்  கேட்டேன்  அவர்  அத  விடுங்க  அந்த  இயக்குனரோட  இன்னொரு  படம்  அட்டகாசமாக  இருக்கும்  ன்னு  அந்த  கதைக்கு  வந்துட்டார், மேலும்  ஒருசிலர்  நல்ல  படமென்றும்.  செம்ம  படமென்றும் . நிறுத்தி  கொண்டார்கள் , ஒருசிலர்  ஏனோ  புடிக்கலை ன்னு  சொன்னாக  , ஆக  இந்த  திரைபடத்தை  பலர்  விரும்பாததற்கு  புரிதல்  ஒன்றே  காரணாம் ,



 எனக்குமே  ஒரே  முறை  பார்த்த  பிறகு  புரிந்திவிட்டதா  என்ன? அதனை  புரிந்துகொள்ள  தான்  மற்றவர்களிடம்  கேட்டேன்  ஆக  எனக்கு  போதிய  பதில்  கிடைக்கததால். நான்  இரண்டாவது  முறை  பார்த்தேன் . இரண்டாவது  முறை  பார்த்த  பிறகுதான்  ஓரளவுக்கு  புரிந்தது , சொல்லபோனால்  இன்னும்  இரண்டு  முறை  பார்த்தாலும்,  பல  புதுபுது  விடயங்கள்  கிடைக்கலாம்   , கண்டிப்பாக  எழுதவேண்டும்  என்று  என்  இன்னொருவன்  சொன்னான் , எல்லோரும்  தங்களுடைய  மனதை  தொட்டு ஒரு  முறை  உங்களிடமே  கேட்டு  கொள்ளுங்கள் . நாம் எல்லோரும்  நல்லவன்  தானா ?  உடனே  ஆம்  நல்லவந்தான்  என்று  சொல்லிக்கொண்டு  அடுத்தது  போயிருங்க.



    இதுவரை  நீங்க  நல்லதை  மட்டுமே  யோசிக்கிற,  நல்லது  மட்டுமே  செய்ற,  சுயநலமில்லாத,  கள்ளங்கவடமற்ற, கெட்டதை   பற்றி  கொஞ்சம்  கூட பேசாத , தெரியாத , காதல் இல்லாம , காமம்  பற்றி  யோசிக்காம , தவறான  எண்ணத்துல (  பேசாம , பார்க்காம ) ,, எல்லோரிடமும்  நல்ல  மதிப்பும்.  மரியாதையும்.  பெற்றவராக  இருந்தால்  தயவுசெய்து  அந்த  முகமூடியை  கலட்டி  வையுங்கள்.  உண்மை  என்னவென்றால்  இப்படி  இதுவரை  யாருமே  இல்லை  என்பதுதான் கசகசப்பான   உண்மை ..  இல்லை  என்னால்  நிரூபிக்க  முடியும் என்றால்  நீங்க  தான்   இந்த  பூமிலேயே  ஒருவராக  இருக்க  முடியும் . மனதை  தொட்டு  கேட்டது  போதும் கையை  நெஞ்சிலிருந்து  எடுங்கள் ,  மனதை  தொடதவர்கள்  புரிந்துகொள்ளுங்கள்  நீங்கலும்  எப்படின்னு , சரி  படத்தை  பற்றி  பேசுவோம் .


நம்மில்  பலருக்கு  தெரிந்த  இயக்குனர்  கிம்  கி  டுக்   , உடல்  மொழிகள்  மூலம்  கதைகளை  சொல்லுபவர் , அவர்  சொல்லும்  கதையில்  நிச்சயமாக  பல  உண்மைகள் மறைந்து   இருக்கும் , இருக்கும்  என்று   சொல்வதை  விட  நிறைந்து  இருக்கும்  என்று  சொல்வதே மிக  சரியாக  பொருந்தும் .பல  திரைப்படங்களில்  மௌனத்தை  முன்னிறுத்தி  கதை  நகரும் , இதுல  ஹீரோ  அதிகம்  பேசமாட்டார் . இவரை  கிம்  கி  டுக்  படங்களில்  பார்த்திருக்கிறேன்  நடிப்பை  கற்றுக்கொள்ள  இவருடைய  படத்தை  கட்டாயம்  பார்க்கலாம் . இவர்  ஒரு  படம்  இயக்கி  இருப்பதாக  கேள்வி  பட்டேன் .. என்ன என்று  தெரியவில்லை .

  அப்படி கிம்  கி  டுக்   இயக்கிய  சில  படங்களில்  அவர்  முன்வைப்பது  சமூகத்தில் ஒவ்வொருவரின்  மன  நிலை  எப்படி  இருக்கும் .  என்பதை  ஆழ்ந்து  அலசி  பிறகு  அந்த  கதாபாத்திரமாகவே வாழ  செய்து  விடுவார். உதாரனத்திற்க்கு  ஒரு  குழந்தை  ஒரு  தவறு  செய்கிறது  என்றால் . அவர்  கற்பனையாக  கருதப்பட்டதை  அப்படியே  காட்சிப்படுத்துவார் (" Spring summer winter fall and spring திரைப்படம்  பார்த்தவர்களுக்கு  புரிந்திருக்கும்")


 இந்த  படத்தை  பற்றி  பலரின்  பார்வையில்  இருந்து  பார்க்கும்  பொழுது  பலவிதமாக  எழுதலாம் சொல்லலாம் , என்னுடைய  கவனம்  முழுக்க   ஹீரோவை  முன்  நிறுத்து  செல்லவதால் நான்  அங்கிருந்தே  கதையை  தொடங்குகிறேன்   பார்ப்போம் .    நான்  நல்லவன்  , என்னை  போல்  எவருமிலர்  இவ்வுலகில் , அப்படி  தனக்கு  தானே  மகுடம்  சூட்டுபவர்கள் , அய்யய்ய   , ச்சீ இப்படி  போலியான  முக பாவனைகளை  காட்டுபவர்கள் ,  18 +  ஹா  அப்படின்னு  தனக்குள்ளே  ஒரு  நல்லவன்  பட்டம்  கொடுத்துக்கொண்டு  இருப்பவர்கள் ,  தயவு  செய்து  இத்தோடு  விலகிகொல்லுங்கள்  , இது  உங்களுக்கான  படம்  இல்லை  .  ..


ஒருவனுக்கு  காதல்  எதனால்  வரலாம் , பலதரப்பட்ட  பதில்கள்  இருந்தாலும்  மிக  முக்கியமான  பதில் - அழகு , அழகினால்  தான்  முன்னெடுத்து  செல்கிறது  இந்த  காதல் . அப்படி  எதார்த்தமாக  ஒருநாள்  ஒரு  பெண்ணை  சந்திக்கிறான் , அவள்  தனது  காதலனுக்காக காத்துக்கொண்டு  ஒரு  பொதுவெளியில் இருக்கையில் அமர்ந்து  இருக்கிறாள் , இயல்பாக  மனித  மூளை  ஒன்றை  விரும்பி  பார்த்துகொண்டு  இருக்கிறது  எனும்போது , அவ்வளவு  விரைவாக  நம்முடைய  கவனத்தை  சிதறடிக்க  முடியாது , அப்படி  சிதறடித்தால் ,


எடுத்துக்காட்டுக்கு ஒரு  திரைபடத்தையோ  , புத்தகத்தையோ, அல்லது  ஒரு  இயற்கை  காட்சியையோ , இல்ல  தூங்கிகொண்டு  கனவு  கண்டுகொண்டிருக்கும்  பொழுதோ,  தீடீர்ரென்று  உங்களை கவன  சிதறல்  செய்தால் என்ன  செய்வீர்கள் , முதலில்  வருவது  கோபம் , அதை  கட்டுக்குள்  அடைக்கி   வைத்து  பொய்யாக  நடிப்பவர்களே  நம்மில்  அதிகம் .. எப்படி  பிறப்பு , இறப்பு , விக்கல்  , தும்மல் , லாம்  வருகிறதோ அதுபோல  கோபமும்  இயல்பான  ஒன்றுதான் .


 இவன்  தன்னையே  குறுகுறுவென்று  பார்ப்பதை  தெரிந்துகொண்ட  அவள். தன்னுடைய  காதலன்  வந்த  பிறகு , பேசிகொண்டிருக்கும்  வேலையில் , நம்ப  ஹீரோவுக்கு  கோபம்  தலைகேறி  பொறுத்துக்கொள்ள  முடியாமல் உடனடியாக   உதத்தோடு உதட்டை  வைத்து  முப்பது  செகன்ட்  க்கு  ஒரு  முத்தை  கொடுத்து  விடுகிறான் ,, இவனை  பார்த்து  யார்  நீ ?  என்னையே  பாத்துகொண்டு  இருக்க , உன்   மூஞ்சிலாம்  கண்ணாடில  பாத்து  இல்ல கேவலமான  ஒரு  முகம்? நீயல்லாம்  என்ன  பாக்குற  ,   அதுவா  இதுவா  ன்னு  திட்டி   விடுறா , எச்சியை  துப்பி  விடுகிறாள் .


அங்கு  கூட்டம்  கூடுகிறது  நம்மூரில்  இது மாறி  நடந்தா  என்ன  செய்வாங்கன்னு  தெரில  அங்க  மன்னிப்பு  கேளு  ன்னு  சொல்றாங்க.  அனா  தலைவர்  கிளம்பிடுறார் . ஒரு  நாள்  ஹீரோயின்  ஒன்றை  திருடி  மாட்டிகொள்ளுறாங்க. பிறகு  மாட்டிக்கொள்ள  கூடாத  ஒரு  இடத்தில  மாட்டிகொள்ளுறாங்க , அதற்கு  தலைவன்  தான்.  முத்தம்  கொடுத்த  ஹீரோ   .  இதற்க்கு  பின்னால்   நடக்க  போகும்  கதையை   பற்றி,  நான்  ஒரு  நூலிழையும்  கூட  சொல்ல  போவதில்லை . பார்த்து  உணர்ந்து  கொள்வதும்  புரிந்துகொள்வதும்  விருப்பம்  உடைய  உங்களையே  சேரும் . ஒருவேளை  உணரவில்லை  என்றால்  இன்னொருமுறையும்  பார்க்கலாம் ,அப்படியும்  உணரமுடியவில்லை  என்றால்  இந்த  படத்தை  புரிந்துகொள்ள  கூடிய  பக்குவமும்  , ஏற்றுகொள்ளும்  மனமும்  நம்மிடம்  இல்லை  என்று  விழ  செல்லுங்கள்

 மற்றவர்கள்  மாதிரி  நான்  அல்ல  என்று  இவனுடைய  காதலை  புரிய  வைப்பதற்காக தான்  மீதமுள்ள  கதைகள்  அணைந்தும்  அமைக்க  படும் . எப்படி  தன்னுடைய  காதலை  புரியவைத்தான்  என்பதை  பார்த்து  தெரிந்துகொள்ளுங்கள் , இதுபோல  யாருமே  புரிய  வைத்திருக்க  மாட்டார்கள்  என்பதை  இதுவரை  நான்  பார்த்த  திரைப்படங்கள்  மேல்  சத்தியம்  அடித்து  சொல்லுவேன் .  என்னையும்  இப்படி  பெருசா  எழுத  வச்சுட்டீங்களே  கிம்  கி  டுக் ...


நன்றி

#சிவஷங்கர்



0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger