Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

Tunnel (2016) உயிர் வாழ போராட்டம்

 A Hard Day (2014) திரைப்படத்தின்  மூலம்    வெகுவாக  கவர்ந்த  இயக்குனரின்   அடுத்த  படமான  Tunnel .  முன்னோட்டத்தை  மட்டும்  பார்த்துவிட்டு  திரைப்படத்திற்காக காத்திருந்தேன் , சமீபத்தில்  கோவா  திரைப்பட  விழாவில்  இந்த  திரைப்படத்தை  பார்த்த  நண்பர்  ஒருவரிடம்  கேட்டேன்  படம்  சிறப்பு  ஆனால்   பொறுமை  அவசியம்  என்றார் . பிற  மொழி  திரைப்படங்கள்  என்றாலே பொறுமை  அவசியம்  தானே " பொறுமை  கடலினும்  பெரிது"  . எப்படியோ  இணையத்தில்  வந்த  வுடன்  தரவிறக்கி  வைத்துவிட்டேன் . இன்றுதான்  ஒருவழியாக  பார்க்க  முடிந்தது .




Tunnel By So Jae-Won , நாவலை  மையபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும் .  இந்த  திரைப்படம்  Disaster வகையை  சார்ந் த்ரில்லர்  டிராமா  .  Tunnel தரைக்கு  அடியில்  செல்லும்    பாதை அல்லது  குகை  பாதை அல்லது  தொடர்வண்டி  பாதை , தண்ணீர்  வழி   பாதை  ன்னு  அனைத்திற்கும்  பொருந்தும் , ஒரு  கிலோ  மீட்டரில்  தொடங்கி  அதிகபச்சமாக  40 கிலோ  மீட்டருக்கு  மேல்  ரயில்  tunnel  பாதைகள்  அமைக்க  பட்டுள்ளன , இணையத்தை  நாடினால்  அதனை  பற்றி  முழுமையாக  தெரிந்துகொள்ள  முடியும் . கதைக்கு  வருவோம் .

படத்தின்  தொடக்கத்திலேயே ஒரு  பெட்ரோல்  பங்க் ல ஒரு  சிறு  கோபத்தோடு  தண்ணீர்  பாட்டிலை  வாங்கி உள்ளே   தூக்கி  போட்டுட்டு  அந்த  இடத்தை  விட்டு  நகருகிறார்  .     தன்  மகளுடைய  பிறந்தநாள்   கேக்கை  வாங்கிகொண்டு  வீட்டிற்கு சென்றுகொண்டு  இருக்கிறார் . தொலைபேசியில்  உரையாடிக்கொண்டே   Tunnel ஐ  கடக்கும்  பொழுது  இடையில்  ஏற்பட்ட  அதிர்வுகளால் , அப்படியே  சரிந்து  விழுகிறது இரண்டு  நுழைவு  வாயிலுக்கு  இடையில்  மாற்றிகொல்கிறார் ..

 தொலைபேசியில் மூலம்   எமர்ஜென்சி யை  தொடர்பு கொள்கிறார் , ஒருவாரம்  ஆகும்  இதனை  அப்புற  படுத்தி  இவரை  காப்பாற்ற . அதுவரை  இருக்கும்  தண்ணீரை   பயன்படுதுகொண்டு  இருக்குமாறு  சொல்கிறார்கள் , இவரை  காப்பாற்ற  உள்ளே  சென்றவர்கள்  மீண்டும்  அந்த  தீடீர்  அதிர்வுகள்  வந்ததால்  தப்பித்து  வெளியே  வருகின்றனர் . , உள்ளே  ஒருவர்  இருக்கிறார்  எப்படியாவது  காப்பாற்றிட  வேண்டும்  என்று  பல  முயற்சிகளை  கொடுத்து  பார்கின்றனர் . எவ்வளவு  முயற்சி  கொடுத்ததும்  , உள்ளிருப்பவரை  காப்பாற்றுவது  மாதிரி  தெரியவில்லை .

 உயிர்  வாழ்வதற்கு  அவரும் , அவரை  காப்பாற்ற  இவர்களும்  போராடும்  இரண்டு  மணி  நேரம்  போராட்டம்  தான்  இந்த  திரைப்படம் . இரண்டு  மணி  நேரம்  திரைப்படம்  தான்  , அவரை  காப்பாற்றினார்களா ? என்ன  ஆனது  என்பதெல்லாம்  மீதி  கதை .  நடிகராக  நடித்திருப்பவரும் , அவருடைய  மனைவியும் , துணை  காத்தாப்பாத்திரமான  ஒரு  அதிகாரியும்  அட்டகாசமான  நடிப்பை  வெளிப்படுத்தி  உள்ளனர் . திரைப்படவிழாகளில்  திரையிடப்பட்ட , இந்த  திரைப்படத்தை  தவற  விடவேண்டாம்  பார்த்தல்  உங்கள்  நேரம்  வீணடிக்க  பாடாது  என்பதில்  மாற்று  கருத்து  இல்லை . 

பொதுவாக  இந்த  திரைப்படங்கள்  உண்மை  கதையை மையபடுத்தி  எடுக்க  பட்டவையாக  இருக்கும்  , இது  நாவலின்  திரை  வடிவம் , பார்க்கும்  பொழுது  அப்படியே  உண்மையாகவே  இருந்தது . கொரியன்  மொழியில்  இந்த  மாதிரி  திரைப்படத்தை  பார்ப்பது  இதுவே  முதல்  முறை .  ஆங்கிலத்தில்  இதுபோல  சில  படங்கள்  வந்துள்ளன  . அதில்  என்னை  வெகுவாக  கவர்ந்த  127 hours, buried,break,all is lost. போன்ற  திரைப்படங்கள்  ஒரே  ஒரு  கதாபாத்திரத்தை  வைத்து  திரைப்படம்  முழுக்க  நம்மையும்  கூடவே  அதிர  செய்வார்கள்  .

அப்படி  பட்ட  திரைப்படங்களின்  வரிசையில்  இந்த  கொரியத்  திரைப்படத்தையும் வைக்க  விரும்புகிறேன் . பரபரப்பான கதையில்  சுவாரஸ்யங்களை  சொல்ல  வில்லை  பாருங்கள்  நீங்களே புரிந்துகொள்வீர்கள் .கண்டிப்பாக  அனைவரும்  பார்க்க  வேண்டும் . பார்த்துவிட்டு  தவறாமல்  உங்களுடைய  கருத்துக்களை  பகிர  வேண்டுகிறேன்

நன்றி

#சிவஷங்கர்


0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger