Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

Duel (1971) துரத்தும் டேங்கர் லாரி

ஒரு  மாதத்திற்கு  முன்பு  ஏற்காடு  ல்  இருந்து  இறங்கும்  பொழுது  நானும்  எனது  நண்பனும்  வண்டியை  முந்திக்கொண்டு  சைடு  எடுத்து  சென்றோம்  எங்களுக்கு  முன்பே  பல்சரில்  சென்ற  ஒரு  படுபாவி  சைடு  எடுக்கும்  போதே  அந்த  லாரிக்காரனை  பார்த்து  நடுவிரலை  உயர்த்தி  காட்டிவிட்டு   தான்  சென்றான். அந்த  லாரிக்காரர்  இவன்  செய்த  இந்த  சேட்டையால்  எங்களை  அங்கிருந்தே துரத்த  ஆரம்பித்து  விட்டார்.  இதில்  வேறு  வண்டிகாரன் செய்த  கடுப்பை  எங்கள்  மேல்  காட்டினான் . ஹாரனை  விடாமல்  அழுத்தி  அழுத்தி  எங்களை  பயமுறுத்தி  பள்ளத்துக்கு  அருகில் எங்களை  சொர்கத்துக்கே   அனுப்பி  இருப்பார் . எந்த  சாமி  புண்ணியமோ  தெரியவில்லை  தப்பித்து  வந்துவிட்டோம் .  இந்த  திரைப்படத்தை    சமீபத்தில்  பார்த்த  பொழுது  எனக்கு  நினைவுக்கு வந்து  விட்டது சரி கதை   க்கு  வருவோம் .





  ஆம்  இங்கு  லாரிக்கு  பதில்  ஒரு  டாங்கர்  ட்ரக் . பைக்கு  பதில்  கார் . கதையின்  தொடக்கத்தில்  மெதுவாக  சென்று  கொண்டிருக்கும்  ட்ரக் ஐ    சைடு  எடுக்கிறார் . யாருடா  இவன்  நம்பலே  முந்திக்கொண்டு  போகிறானே  என்று  ட்ரக்  உம் போட்டி  போட்டு  கொண்டு  சைடு  எடுக்கிறது . இப்படி  மாறி  மாறி  சைடு  எடுத்துக்கொண்டே  இருந்தால்  வேலைக்காகாது என்று  ட்ரக் ட்ரைவர்  இவரை  இடித்து  தள்ள  வேகத்தை  மிரட்டுகிரார். மரணத்தின்  விளிம்பு  வரை  சென்று  தப்பிக்கும்  கார்  காரர்  இவனிடம்  இருந்து  உயிர்  தப்பி . ஓட்டலுக்கு  செல்கிறார் .

 ஏழரை  அங்கும்  வந்துள்ளது   அந்த  பத்து  நிமிஷம்  மிரளுது . மீண்டும்  அங்கிருந்து  கிளம்பும்  இவரை  அதே  ட்ரக்  துரத்த   ஆரம்பிக்கிறது . ிஆரம்பத்தில்லி  இருந்தே  படம்ரு  வேகமாக  செல்கிறது  என்றால்ந்து  இதற்கு  மேல்  இன்னும்  கொஞ்சம்  ஸ்பீட்  ஏற்றி  கொண்டு  செல்கிறது . இறுதியில்   இவர்  தப்பித்தாரா ? இல்லையா ?  யார்  இந்த  ட்ரக்  ட்ரைவர் . யார்  இந்த  ஓட்டுனர்  என்பதெல்லாம்  படத்தை  பார்த்து  தெரிந்துகொள்ளுங்கள் .

அவசியம்  அனைவரும்  பார்க்க  வேண்டிய  நல்ல  திரைப்படம்  தான் , ஒரு  விதமான  விறுவிறுப்பு  கலந்த த்ரில்லான  அனுபவமாக  இருக்கும் . இயக்குனர்  பற்றி  பலர்  நிறைய  சொல்லி  இருக்கிறார்கள்.  நான்  ஒன்னும்  புதிதாக  சொல்ல  போவதில்லை . இவருடைய  முதல்  படமாக  சொல்லப்படும்  இந்த  படத்திலே  அவர்  சிக்சர்  அடித்து  இருக்கிறார். இன்னமும்  இவருடைய  பல  படங்கள்  புகழ்பெற்றவையே.

முக்கியமாக  கேமரா , ஒளிப்பதிவை பற்றி  சொல்லியே  ஆக  வேண்டும் . அப்போது  இருந்த  டெக்கனாலஜியை வைத்துகொண்டு  எப்படி  எல்லாம்  ரவுண்டு  கட்டி  அடிக்க  முடியுமோ  அப்படி  அடித்து  இருக்கிறார்கள் . அதிலும்  படத்தில்  பின்னணி  இசை  அவ்வளவே  இல்லை  . நான்  ஹெட்  போன்  போட்டு  கொண்டு  பார்க்கும்  பொழுது  கேமரா  நகர்வும்  அதவாது  அந்த  முதல்  காட்சி  இந்த  ட்ரக்  சவுன்ட்  லெப்ட்   சைடு  காதுல  தொடங்கி  ரைட்  சைடு  வந்து  நிக்குது . சவுன்ட்  இயற்கை  சத்தமே  என்றாலும்  அதற்கான  பலனை  பார்க்கும்  பொது  நம்மை  உணர  செய்து  இருக்கிறார்கள் .
வருங்கால  ஒளிபதிவாளர்கள் . திரைக்கதை  அமைப்பாளர்கள் இந்த  படத்தை  நிச்சயம்  பார்க்க  வேண்டும்  என்று  பரிந்துரைக்கிறேன் .



இந்த  படம்  மாதிரியே  கான்செப்ட்  வைத்துள்ள  பாஸ்ட்  அன்ட்  furious புகழ்  , நடிகர் பவுல்  வாக்கர்  நடித்த  ஒரு  படம்  . joyride என்று  முதல்  பாகம் மட்டும்  நான்  பார்த்து  இருக்கிறேன்  , நன்றாக  இருக்கும்  இதையும்  தவறமால்  பார்த்து  விடுங்கள்  .  மற்றுமொரு  அட்டகாசமா  படமான  wildtales ல்  மூன்றவாது   குறும்படமாக  இடம்  பெற்றிருக்கும்  ஒரு  குறும்ப்படமும்  இதே  கான்செப்ட்  தான்  இங்கு  காரும்  காரும்  விளையாட்டில்  குதிப்பார்கள் . வேற  லெவலில்  இருக்கும் . இந்த  படத்தை  சமீபத்தில்  எனது  நண்பர்களுக்கு  காட்டின  பொழுது  யார்ரா  இவனுங்க  லூசு  பயலுக  ன்னு  சொன்னாக . ஆக்சுவல்  ல  இவங்களுக்கு  இதோட  கான்செப்ட்  புரியாம  இருந்து  இருக்கலாம் . நீங்க  கண்டிப்பா  பாருங்க  மிக  சிறந்த  படம் .


நன்றி

#சிவஷங்கர் 

0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger