Kristy (2014) துரத்தும் கொலைகாரர்கள்
கல்லூரியில் படித்துகொண்டிருக்கும் ஜஸ்டீன், கல்லூரி விடுமுறை நாளில் தன்னுடன் தங்கி இருக்கும் தோழி வீட்டுக்கு போகின்றதால் , அவளோட காரை விடுதியில் இருக்கும் ஜஸ்டீனிடம் கொடுத்துவிட்டு போகிறாள் . இவளும் அதை எடுத்து சென்று தனக்கு தேவையானதை வாங்க ஷாப் க்கு செல்கிறாள் , அங்கு ஒரு விசித்திரமான தோற்றமுள்ள ஒரு பெண் , "உன்னோட தலைமுடி அழகா இருக்கு" . "உங்கிட்ட அழகான கார் இருக்கு" . "நீதான் கிறிஸ்டி" உன்ன கொலை செய்ய போறேன் ன்னு சொல்லுறாள் . இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை . அங்கிருந்து கிளம்புகிறாள் போகும் வழியில் இந்த விசித்திர பெண் சில இடையூறு கொடுக்க , அங்கிருந்து வீட்டுக்கு செல்கிறாள் .
அதற்கு பிறகு வேகம் பிடிக்க ஆரம்பிகிறது கதை . இந்த விசித்திர பெண் அவளை கொல்ல அவளுடைய விடுதிக்கே மூன்று முகமுடி அணிந்த நபர்களுடன் வருகிறாள் , .விடுதி பாதுகாப்பாளர் அருகில் இருக்கும் நண்பன் ன்னு பழியாகுறாங்க . இறுதியில் அங்கிருந்து அவள் தப்பித்து சென்றாளா இல்லையா? யார் இந்த கிரிஸ்டி ? என்பது மீதி கதை கிளைமாக்ஸ் . ஒரு நல்ல பிளானிங் movie திருப்புனையாகட்டும் ட்விஸ்ட் ஆகட்டும் ஒரு நல்ல படமே . எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது , குறிப்பா திரைக்கதையும் காட்சி அமைப்பும் .
இந்த கதை என்னவோ சிம்பிள் ஆக தான் இருக்கிறது என்று நம் மனம் சொல்லும் . இது எதுக்கு போய் பார்த்துகொண்டு ன்னு அதில் தான் இந்த படத்தின் திரைக்கதை எழுத்தாளர் இது படமாக அல்லாமால் ஒரு பாடமாக எடுத்திருக்கிறார் . திரைத்துறைக்கு வரவிற்கும் நண்பர்கள் இந்த படத்தினை கட்டயாம் பார்க்க வேண்டும் . காரணம் என்னவென்றால் ஆரம்பத்தில் ஒரு காட்சி வைக்கிறோம் இது எதுக்குடா தேவையே இல்லாம அப்படின்னு நினைப்போம் அனா பின்னாடி ஒரு திருப்பு முனையா இந்த காட்சி அமையபோகுது ன்னு சொல்லாம சொல்லுகிறார்கள் . இப்படி படத்தில் அடிக்கி கொண்டே பார்க்கலாம் . படமாக பார்க்க விரும்புபவர்களுக்கு ஒருமுறை பார்க்க கூடிய படமே . தவறமால் பார்த்து வையுங்கள் நேரம் வீணடிக்க படாத ஒரு நல்ல த்ரில்லர் படமே ஏன் பரவலாக பேச படவில்லை ன்னு தெரில .
நெட்ப்ளிக்ஸ் வைத்திருப்பவர்கள் அதில் பாருங்கள் நல்ல தரத்தில் ஹெட்போன் போட்டு பார்க்கும் அனுபவம் வேறு, இல்லையென்றால் youtube லும் இருக்கிறது . இரவு நேரங்களில் இது போல த்ரில்லர் பார்ப்பது நலம் ஏன்னா நான் அப்போ தான் பார்த்தேன் . ஒரு விறுவிறுப்போடு கலந்த த்ரில்லரையும் பார்க்கும் நமக்கு சிறு பயத்தையும் தந்துவிடுகிறது .படத்துக்கு ரேட்டிங் கீட்டிங் லாம் பார்த்து தான் பார்ப்பேன் என்று நினைபவர்கள் . தயவு செய்து கிளம்புங்கள் காத்து வரட்டும் .
நன்றி
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment