A Bittersweet Life (2005) ஒரு விசுவாசியின் கதை
A Bittersweet Life , சமீபத்தில் நான் பார்த்த கொரியன் படங்கள் தொகுப்பில் இந்த இயக்குனரின் மூன்று படங்கள் இடம் பெற்று இருந்தன , மூன்றும் மூன்றுவிதமான வகையில் சுவாரஸ்யமான முறையில் கதை சொல்லல் , விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத அந்த படங்கள் என்னை வெகுவாக கவர்ந்து விட்டன இயக்குனருடைய மற்ற படங்களை பார்க்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை இந்த படங்கள் செய்துவிட்டன . A Bittersweet Life (2005) க்கு வருவோம் கதையின் தொடக்கத்திலே மரக்கிளைகள் அசைவுகளோடு ஒரு சில வரிகளுடன் தொடங்கும். சீடன் குருவிடம் பேசுவது போல அது என்னன்னு பாக்கும் பொது தெரியும் .
ஹீரோ தனது முதலாளிக்கு விசுவாசியாக இருப்பவர் , அவரிடம் சேர்ந்ததில் இருந்தே அவர் சொல்லும் வேலைகளை மறுக்காமல் செய்பவர் . ஒரு நாள் தான் வெளியூர் செல்ல போவதாகவும் . எனக்கு ஒரு காதலி இருக்கா , சின்ன பொண்ணு நான் இல்லாத நேரத்துல அவளை தேடி ஒரு இளைஞன் வரமாதிரி இருக்குது . நான் வெளியூர் போயிட்டு வரேன் அதுக்குள்ள அவங்க ரெண்டு பேரையும் நீ சந்திச்சா எனக்கு உடனே கால் பண்ணு இல்லைனா அவங்கள கொன்று விடு ன்னு சொல்லிவிட்டு செல்கிறார் .
இவர்தான் விசுவாசமான ஆள் ஆச்சே . அந்த பெண்ணை சந்திக்கிறான் , பாஸ் உங்களோட இருக்க சொன்னார் ன்னு அங்க போறார் , அந்த பெண் அதெல்லாம் ஒன்னு தேவை இல்லைன்னு சொல்லிடுறா , பார்க்க ரொம்ப சின்ன பொண்ணா இருக்கிறாள் . ஓரிரு நாளில் இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து பார்த்து அந்த அவள் காதலனை அடித்து அவனுடைய பாஸ்க்கு போன் செய்ய தயாராக இருக்கிறான் . இருந்தாலும் இவளை கொள்ள அவனுக்கு மனம் வரவில்லை , அவர்களை அப்படியே விட்டு விடுகிறான் . அவனை இனி நான் உன்ன இங்க பாக்க குடாது என்கிற மாதிரி சொல்லி விடுகிறான் .
இந்த தகவல் பாஸ் க்கு செல்ல , இத்தனை நாள் எனக்கு விசுவாசியா இருந்தவன் . நான் சொன்னதை செய்யாம விட்டுட்டான் , ன்னு அவன கொலை செய்ய சொல்லுகிறார் , அதே மாதிரி அவனை அடித்து சித்தரவதை செய்து , கையை உடைத்து மண்ணில் புதைகின்றனர் . ஆரம்பத்தில் எந்த அளவு சுவாரஸ்யம் இல்லாமல் கதை நகர்ந்ததோ அதை விட இரண்டு மூன்று மடங்கு வேகம் பிடித்து நகரும் , அவனுடைய முதலாளியை எதிர்த்து கிளம்புகிறான் ? அவன் எப்படி தப்பித்தான் ? என்ன நடந்தது ? யார் அந்த பெண் ? எல்லா கேள்விக்கும் படத்தில் பதில் இருக்கு .
கண்டிப்பாக , நிச்சயமாக ஆக்சன் gangster விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும் . பின்னனி இசையும் கதாபத்திரங்களும் கச்சித மாக இருக்கிறது . இந்த இயக்குனருடைய மூன்று படங்களிலும் அந்த நடிகரை பார்க்கிறேன் அட்டகாசமான நடிப்பு , இயல்பாகவே பொருந்துகிறார் , ஆல் ஓவர் ஒரத் மூவி கண்டிப்பா பாக்லாம் .
நன்றி
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment