Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

No Mercy (2010) கருணை இல்லாத போராட்டம்

இந்த  திரைப்படத்தை  பார்த்து  முடித்த  பிறகு  எனக்கு  பழமொழிகளும் , திருகுறல்களும் , வாக்கியங்களும் தத்துவங்களும் கூடேவே  பல  நிகழ்வுகளும்  நியாபகத்திற்கு  வந்தன ,  அது  அனைவரும்  அறிந்த  பழமொழி  என்பதால்.  நீங்கள்  படம்  பார்த்த  பிறகு  உணர்ந்துகொள்வீர்கள் என்பதில்  மாற்று  கருத்து   இல்லை .  கதைக்கு  வருகிறேன் .





குற்றவியல்  துறையில் , ஆரய்ச்சி யாளராகவும் , மாணவர்களுக்கு  பல  தகவல்களை  எடுத்துரைக்கும்  தடவியல் துறையிலும் ,  ஆசிரயாகவும்  பணிபுரிபவர்  கெங் ,கொஞ்சம்  மூளைகாரர்  தான் ,  ஒரு  பெண்ணின்  மரணத்திற்கு  பின்னால்  இருக்கும்  தகவல்களை  சேகரித்து  கொண்டு  இருகின்றனர்  , அங்கிருந்து  தான்  கதை  தொடங்க  ஆரம்பிகிறது .

 அதிலிருந்து  அடுத்து  அடுத்து  ன்னு தொய்வில்லாமல்   நகர்ந்துகொண்டு  செல்கிறது  , பிறகு  குற்றம்  செய்தவனை , அந்த  காவல்  அதிகாரிகள்  கைது  செய்து  சிறையில்   விசாரணை  பிரிவில்  வைத்து விசாரித்து கொண்டு  இருகின்றனர் ..திடீரென்று  கெங்  உடைய மகள்  காணாமலும்  போகிறாள் ? உன்னுடைய  மகளை  காப்பாற்ற  வேண்டும்  என்றால் , நான்தான்  கொலை  செய்தேன்  என்ற  மொத்த  தடயங்களை  அழிக்க  வேண்டும் , மாற்ற  வேண்டும்  என்கிறான் , இறுதியில்  தன்னுடைய  மகளை  காப்பாற்றினாரா ? என்ன  ஆனது ?    எதிர்பார்க்க  முடியாத  அளவு  கிளைமாக்ஸ்  ல்  சொல்ல  பட்டிருக்கும் .

நடிப்பில்  அனைவருமே  அசத்தி  இருக்கிறார்கள் , இதுபோன்ற  கதைகளை  கொரியன்  சினிமாவில்  மட்டுமே  அதிகமாக  பார்க்க  முடிகிறது .. ஒரு  சில  படங்களில்  யூகிக்க  வாய்ப்பை  கொடுப்பார்கள்  , இங்கு   அப்படிலாம்  வாய்ப்பே  இல்ல .. மெம்மரீஸ்   ஆப்  மர்டரும்  , இந்த  படமும்   சமீபத்தில்  நான்  பார்த்த  படங்களிலே  மிக  சிறந்த  படங்கள் .

இறுகிய   மனம்  படைத்தவர்களும் , எதையும்  தாங்கி  கொள்பவர்களும் தாராளமாக  பார்க்கலாம் , ஏன்  சொல்லுகிறேன்  என்றால்  கடைசி  பத்து   நிமிடம்  பார்த்து  அதிர்ந்த  என்னை  சொல்லு  ன்னு  சொல்ல  வைக்கிறது   , மற்றவர்கள்  தவிர்க்கவும் .


இதுபோன்ற  திரைப்படங்கள் , நம்முடைய  மொழி திரைப்படங்களில்   வந்திருந்தாள்  வேற  லெவலில்  போயிருக்கும் , ஒருவேளை  வரலாம் , மெம்மரீஸ்  ஆப்  மர்டர்  பார்த்த  முடித்த  உடனே  இந்த படைத்தை  பார்த்தேன்  ரெண்டும்  என்னை  வெகுவாக  கவர்ந்து  விட்டது . படத்தை  பார்க்க  விரும்புவர்கள்  பாருங்கள் , நன்றி

#சிவஷங்கர் 

0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger