Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

678 (2010) மூன்று பெண்களின் கதை



பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் , அடக்குமுறைகள் , அடிமைத்தனம் எல்லாம் ஆரம்ப காலத்தில் இருந்தே இன்று வரை தடுக்கமுடியாத பலவனவாகவும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன . உலகில் எதோ ஒரு பகுதியில் ஒவ்வொரு மணி நேரத்திற்கு சிலர் பாலியல் கொடுமைகளாலும் , அல்லது அடக்குமுறையினாலும் கொல்ல படுகிறார்கள். அவங்களுக்கென ஒரு சுதந்திர வாழ்க்கை இல்லை . எகிப்து நாட்டு மக்களின் பண்டைய காலத்தில் கடன் தொல்லை தாங்க முடியாமல் . அல்லது குடும்ப சூழ்நிலையாலும் வீட்டில் உள்ள பெண்களை வேறொருவரிடம் விற்றுவிடுவார்கள் .


இனி அந்த பெண்ணை இவர்களால் சந்திக்க முடியாது அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் கொஞ்சம் கூகிளை புரட்டி பார்த்தல் கண்ணில் "தாரை தாரையாக" கண்ணீர் ஊற்றி விடும் அந்த அளவிற்கு பெண்களின் மீதான கொடுமைகளை அடிக்கி கொண்டே போகலாம் . அதிலும் குறிப்பாக ஈரான் , இஸ்லாமிய நாடுகளில் அவங்களுக்கு இருக்கும் பிரச்னைகளை பார்த்தால் கொடுமைக்கு மேல் கொடுமையாக இருக்கும் . அவங்க விருப்பபடி மனமகனை தேர்வு செய்துகொள்ள முடியாது . அதற்கு அனுமதியும் கிடையாது. வீட்டிலே இருக்க வேண்டும் , குடும்ப வேலைகளை பார்த்துகொண்டு . அதற்கு மட்டும் பயன்படுதிகொள்ளும் ஒரு மெசினாக அவர்கள் இருக்க வேண்டும் . வெளியே வரகூடாது , வீட்டுச் சிறையில் ஒரு கைதியாகவே வைத்து விடுவார்கள் .









பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சொன்னாலே அவர்களுக்கு பல பிரச்னைகள் வரும் என்றும் , குடும்ப சூழ்நிலையில் , பல வாழ்வாதார சிக்கலுக்குள் இருந்து போராட வேண்டி இருக்கும் என்பதற்காகவே " பாலியல் தொந்தரவுக்கு " எதிராக வழக்கு தொடுக்க படாமலே இருந்தது எகிப்தில் . முதன் முதலில் இந்த திரைப்படம் தான் அதனை பதிவு செய்தது , இணையத்தில் தேடினால் யார் அந்த பெண் என்று தெரியும் . படத்தை பற்றி பார்ப்போம் . பார்தபத்ர்க்கு முன்னால் நிச்சயமாக சத்தியமாக பார்க்க வேண்டிய படம் . ஏன் பார்க்க வேண்டும் என்பதை சுருக்கமாக சொல்லி விடுகிறேன் .




பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வழக்கை பதிவு செய்ததை முன்வைக்கும் முதல் திரைப்படம் , உலகிலே பெண்கள் தான் மிக எளிமையானவர்கள் , உடல் வலிமை அளவில் பலம் குறைந்தவர்களாக காணப்படும் பெண்கள் மன வலிமை மிகுந்தவர்கள் தான் இவ்வுலகிலே அதிகம்.அப்படிப்பட்ட பெண்களின் வாழ்வாதார வாழ்க்கை சூழலில் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து வந்த திரைப்படம் தான் 678. சிறந்த திரைபடத்திற்கான விருதையும் . மேலும் பல உலக திரையரங்குகளில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளது , குறிப்பாக திரைக்கதை பற்றி சொல்லியே ஆக வேண்டும் . உண்மை சம்பவங்களின் தொகுப்புகளை வைத்துகொண்டு இப்படி திரைக்கதை யில் நம்மை இறுதி வரை இழுத்து செல்லும் திரைப்படங்கள் மிகவே குறைவு . இந்த திரைபடம் நிச்சயம் திரைப்பட திரைக்கதை எழுத்தாளர்களுக்கு பயன்படும் . Mohamed Diab ஒரு மிக சிறந்த படத்தை (படைப்பை) கொடுத்து இருக்கிறார் . படத்தை பற்றி பார்ப்போம் .

திரைபடத்தில் மூன்று பெண்கள் , வெவ்வேறு சூழலில் அவங்க சமூகத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அவர்களை பற்றின கதைதான் .
ஒரு வக்கிர வெறியெடுத்த வெறியனால் வீட்டை விட்டு வெளியை வரும் போதே தாக்க படுகிறாள் ஒரு பெண் . காரினுள் இருந்து கையை வெளியே நீட்டி அவளின் மார்பகத்தை இழுத்து பிடித்து கொண்டே சிறுது தூரத்தில் தூக்கி போடுகிறான் ஒருவன் . இதில் பாதிகப்பட்ட பெண்ணை பற்றியும்

குடும்ப சூழலில் வசித்து வரும் பெண் , வங்கியில் வேலை பார்பவர்கள் தினமும் வேலைக்கு செல்லும் போது எதிர்கொண்டு வரும் பிரச்சனனையும் , வீட்டை விட்டு வெளியே வந்தாலே பின்னாடி என்ன தொந்தரவுக்கு உள்ளாக போறமோ ? என்று பயந்து பயந்து வாழ்கையை நடத்தி கொண்டிருக்கும் ஒரு பெண்ணை பற்றியும் .
. கணவனோடு கால்பந்தாட்ட விளையாட்டு போட்டி பார்க்க செல்லும் ஒருவள் அந்த கூட்டத்தில் சிக்கி காட்டு மிராண்டிகளால் சூறையாட படுகிறாள் . இந்த மூன்று பெண்களின் கதைதான் இந்த திரைப்படம் .வெவ்வேறு சூழலில் மூன்று பெண்களும் பாதிக்கபடுகிறார்கள் . அது என்ன ? எப்படி ? லாம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் . இதோடு திரைப்படத்தை பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு வாருங்கள் விரிவாக பேசுவோம் .

ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே திரைக்கதை அமைப்பு நம்மை வெகுவாக கவர்ந்து விடும் . குறிப்பாக டைம் லூப் சார்ந்த திரைப்படங்களின் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு சல்யுட் அடிக்க விரும்புவேன் . நான் பார்த்த டைம் லூப் திரைப்படங்கள் எதுவுமே என்னை ஏமாற்றியது இல்லை . சரி இந்த திரைபடத்தின் திரைக்கதையை பற்றி பேசுவோம் . ஒரு திரைபடத்தை பார்க்கிறோம் என்றால் தேவை இல்லாத காட்சி என்று ஏதாவது வந்துவிட்டால் எதுக்காடா இது சம்மந்தமே இல்லாமல் அப்படின்னு பொலம்பிட்டே இயக்குனரை திட்டுவேன் . இதுல ஆரம்பத்துல ஒரு செம்பு கம்பியில ஒரு சிலையை செய்வது மாதிரி காட்டினாங்க இது எதுக்கடா ன்னு யோசிச்ச எனக்கு பின்னாடி பதில் கிடைத்தது . அதே போல முதல் பெண்ணை பற்றிய கதை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் . பிறகு அடுத்த பெண்ணை பற்றி கதை துவங்கிகிறது அந்த கதை முடிந்த முறை மீண்டும் எங்கு விட்டமோ அங்கிருந்து நகர்கிறது . இப்படி இந்த படத்திலே நிறைய காட்சிகளின் மூலம் நம்மை வியக்க வைக்கிறார்கள் .


இதுபோன்ற உண்மை நிகழ்வுகளை முன்வைத்தும் , சமூகத்திற்கு கருத்து சொல்வது போன்ற படங்கள் எடுப்பவர்களையும் அரசு தடை செய்திருக்கிறது . இந்த திரைப்படம் எகிப்து நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை அப்படியே பதிவு செய்துள்ளது . நிச்சயம் தவறமால் பார்க்க வேண்டிய திரைப்படம் . அனைத்து உறவுகளும் கட்டாயமாக பார்க்கவேண்டும் . நமது குழுவில் ஒருநாள் நிச்சயம் இந்த திரைப்படத்தை பற்றிய கலந்துரை நடத்தப்படும் . தவறாமல் கலந்துகொள்ளுங்கள்

நன்றி

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger