Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

மனதை கவர்ந்த Hindi ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களும் 2016 உம்


 இந்தியில்  இந்த  வருடம் வந்த   படங்களின்  ஸ்போர்ட்ஸ்  தான்  என்  சாய்ஸ் ..

  முன்னோட்டம்  வந்த  பிறகே   ஒவ்வொருவருக்கும் மனதில்    பலவிதமான  எதிர்பார்ப்புக்களை  உண்டாக்கிவிடும் , மற்ற  ஜானர்  திரைப்படங்கள் தரும் அனுபவுமும், ரசனையையும்  விட    எனக்கு  ஸ்போர்ட்ஸ்  திரைப்படங்கள்  தரும்  அலாதியான  இன்பம்  வேறு . அது  கதையாகட்டும்  அல்லது  ஒரு  உண்மை  நிகழ்வை  இன்ஸ்பயர் செய்த  படமாகட்டும்.  ஒவ்வொரு   காட்சியிலும்  உடம்பு  சிலிர்க்க்கும் ,  கைகள்  துரு  துரு  ன்னு ஒரே  பரப்பப்பா  இருக்கும்  நானே  அந்த  கதைல  இறங்கி   விளையாடுற   மாதிரி  ஒரு  அனுபத்தை  தரும் . சில  சமயங்களில்  கண்களில்  ஆனந்த  கண்ணீர் ம்   வந்துவிடும் வந்தும் இருக்கிறது.  உண்மை கதையை   தழுவி  எடுக்க  கூடிய  திரைப்படங்களை  என்னவெல்லாம்  செய்ய  போகிறார்களோ  அல்லது  இதுதான்  உண்மையா , நம்பி  விடலாமா ? என  கேள்விக்கு  மேல்  கேள்விகள்  மனதில்  எழும் . சாதரணமாக  எல்லோருக்கும்  பிடிக்கின்ற  ஒரு  படம்  மற்றவருக்கு  பிடிக்காமல்  போக  பல  காரணங்கள்  இருக்கலாம்  . ஆனா  இதுவரை  நான்  பார்த்த  எந்த  ஸ்போர்ட்ஸ்  திரைப்படங்களும்  என்னை  ஏமாற்றியது  இல்லை . தமிழில்  எப்பவாது  அல்லது   வருசத்துக்கு  ஒன்னு  வரதே  அரிதான செயல் . இந்த  முறை  வருட  தொடக்கத்திலே  இறுதி  சுற்று  வந்து  அசத்தியது . இந்தியிலும் .


இந்த வருடம் ஹிந்தி படங்கள் நிறையே      என்னை  கவர்ந்து  இழுத்து  இருக்கின்றன . இருந்தாலும்  இந்த  பையோ  கிராபி  திரைப்படங்களும்  ஸ்போர்ட்ஸ்  திரைப்படங்களும்  தான்  முதல்  ஐந்து  இடத்தை  பிடித்து  உள்ளன . வருசத்துக்கு ஒன்று  இரண்டு  ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள்  தான் வரும் ஆனா இந்த  வருடம்  தான் 5 படங்கள்  பக்கமாக  வந்துள்ளது . ஸ்போர்ட்ஸ்  திரைபடத்திற்கு  என்றே  இருக்கும்  ஒரு  வரைமுறை  இரண்டாம்  பாதியில்  வரக்கூடியவை  எல்லாம் நம்மால்  எளிதில்  யூகிக்க கூடிய  வண்ணம்  இருக்கும் . இதுதான்  நடக்க  போகிறது  எப்படியும்  . என்ற  மனநிலை  பார்க்கும்  போதே  நமக்குள்  கிரியேட்  செய்து  விடும். 
அதே முதல்  பாதியில் உடம்பு  சிலர்க்கும்  அளவுக்கு  பார்க்கும்  நம்மை  வியப்பில் ஆழ்த்தி  விடும் . சமீபத்தில்  பார்த்த தங்கல் திரைப்படம்  அந்த  இன்பத்தை  எனக்கு  தந்தது .
இந்த  வருட  என்னுடைய  டாப்   இந்தி  திரைப்படங்கள்

1.Dangal


வருட  இறுதியில்  வந்து  எல்லோருடைய  மனதிலும்  முதல்  இடத்தில்  நிற்பது  இந்த  படம்தான் . "தன்னுடைய  ஆசையை  தன்  மகள்  மூலம்  நிறைவேற்ற  முடிந்ததா " என்பதே  கதை  . அமீர்  கான்  தேர்ந்தெடுக்கும்  கதைகளம்  பற்றி  சொல்லவா  வேண்டும் .  பொதுவாக  உண்மை  கதையை  படமாக்குவது  அவ்வளவு  சுலபம்  இல்லை . அதுவும்  ஸ்போர்ட்ஸ்  வகையில்  ஒருவருடைய  கதையில் .   முக்கிய  துவம்  வாய்ந்த  பெண் கதாபத்திரம்  மிரட்டி இருப்பாங்க  . இந்திய  சினிமாவில்  இன்னும்  வருடங்கள்  பேச  கூடிய  படமாக  இருக்கும் . தவறவே  விடகூடாத  ஒரு  திரைப்படம் . 

2.M.S. Dhoni: The Untold Story


கிரிகெட்  வீரர் , சொல்லபடாத  கதையாக  வந்திருந்த  திரைப்படம் . தோனிக்கு  ரசிகர்  பட்டாளம்  அதிகம்  . வருவதற்கு  முன்பே  மக்கள்  மத்தியில்  பல  எதிர்பார்ப்பு .  ரஜினி  , அஜித்  படங்களுக்கு  எந்த  அளவுக்கு  எதிர்பார்ப்பு  இருக்குமோ  அதே  அளவு  தமிழ்நாட்டில்  தோணி  படத்திற்கு  வரவேற்ப்பு  அமைந்தது . 200 கோடிக்கு  மேல்  வசூலில்  வெற்றி  அடைந்தது  மக்கள்  மத்தியிலும்  அப்படித்தான்  இருந்தாலும்  மற்ற  கிரிகெட்  வீரர்  ரசிகர்கள்  எதிர்  கருத்துக்களை  சொல்லிய  வண்ணம்  படியே  இருந்தார்கள் . இந்த  படமும்  பார்த்திருக்க  வேண்டிய  திரைப்படம் .

3.சுல்தான்
உடலுக்ககாகவே  செதுக்கப்பட்ட  ஒரு  கதை .  ஷாட்   பை   ஷாட்   நம்மை  அதிர  வைக்கும் , அதிர  வைக்கும்  என்றால் அந்த அதிர்வு இல்லை . மண்ணோட  மகன்  ன்னு  ஆரம்பிக்கிற  கதை  ல  இருந்து  இறுதி  வரை  ஒரு  விதமான  பரபரப்பான  எதிர்பார்ப்போடையே  கிளம்பும் . பார்த்தவங்களுக்கு  புரியும் . என்னை  அறியாமாலே  பல  காட்சிகளுக்கு  கை  தட்டலோடு  கத்தி    கொண்டு  இருந்தேன் . கண்டிப்பாக  பார்க்க  வேண்டிய  படம் .

4.Budhia Singh: Born to Run
எத்தனை  பேர்  இந்த  திரைப்படம்  பார்தீகன்னு  தெரியாது . எப்ப  வந்தது  போனது  ன்னு  தெரியல்ல . தலைபிற்கு  தகுந்த  கதை  தான்  உங்கள்  எதிர்பார்ப்பை  நான்  சொல்லி  வீணடிக்க  விரும்ப  வில்லை  பார்த்துவிட்டு  வாருங்கள்  படத்தை  பற்றி  நிறைய  பேசுவோம் .

5. இதுல  நான்  பல  படங்களை  பரிந்துரைக்க  விரும்புகிறேன் . ஏனென்றால்  இவையும்  என்னை ஈர்த்த படங்களே 10  படங்களுக்கு மேல்  என்னை  வெகுவாக  கவர்ந்து  விட்டது . ஏர்லிஃப்ட்,உட்தா பஞ்சாப்,ஃபேன்,ராமன் ராகவ் 2.0,ஃபோபியா,பிங்க்,கஹானி 2,அலிகர்,சரப்ஜித்,நீர்ஜா,அகிரா , 

என சொல்லிக்கொண்டே  போகலாம் .  நண்பர்களே  இந்த  படங்களை  எப்படியாவது  பார்த்துவிடுங்கள்  நன்றி.

சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger