Memories of Murder (2003) தொடர்கொலைகளும் மர்மங்களும்
கதையின் தொடக்கத்திலே பரபரப்பாக நகர ஆரம்பித்து , இறுதி வரை அதே சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் குறையாமல் நகரும் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் , அப்படி நான் பார்த்த படங்களில் இதுவே என்னை மிகவும் கவர்ந்தது . ஒரு சில நேரங்களில் பார்த்த படங்களை பற்றி எனக்குள்ளையே பேசிக்கொள்வது வழக்கம் எப்படித்தான் இதுமாதிரி கதைகளை யூக்கிறார்களோ ன்னு .. அப்படி ஒரு படம் தான் இது.
கொரியாவில் ஒரு கிராமத்தில் பெண்ணை கற்பழித்து , உடலில் கைகள் கட்டப்பட்டு , அவளுடைய துணிகளினாலே வாயையும் அடைத்து , நிர்வாண மாக்கி கொலை செய்யபட்டிருகிறது , அங்கு பனி புரியும் லோக்கல் காவல் அதிகாரி கையில் இந்த கேஸ் எடுத்து நடத்தபடுகிறது . அவனும் கையில் ஒரு எவிடன்சும் சிக்க மாட்டேங்குது ன்னு சிக்கிக்குகிறத பயன்படுதுறான் ,
பிறகு இதுவே தொடர்கொலையா நடந்துகொண்டே இருக்கிறது , எல்லா கொலைகளையும் மழை பெய்யும் நேரங்களிலும் , சரியாக வானொலியில் ஒரு பாடலை ஒலிபரப்பும் நேரத்திலும் நடந்திருக்கிறது. என்பதை அந்த காவல் துறையில் பணி புரியும் பெண் இந்த கொலைகள் பற்றிய தகவல்களை திரட்டி அவர்களிடம் சொல்லுகிறாள் . பின்பு இவர்களோடு சேர்ந்து இன்னொரு அதிகாரி இந்த கேசை விசாரிக்க வருகிறார் , வரும்போதே வரவேற்ப்பு பலமா இருக்கும் .
ஒவ்வொருத்தனா கூப்ட்டு விசாரிக்கும் போதும் , நமக்கும் இவன்தான் கொலை பண்ணி இருப்பானோ ன்னு தோணும் , ஏன்னா அவங்க சொல்ற கதை அப்படி . பின்பு இந்த விசாரனையை தொடரும் புதிதாக வந்தவருக்கும் , அந்த லோக்கல் காவல் அதிகாரிக்கும் அடிக்கடி சண்டை வருகிறது , அதனை மேலதிகாரி தீர்த்து வைக்கிறார் , இவர்களோடு சேர்ந்து இன்னொருவரும் இந்த கேசில் தீவிர ஆர்வமாக தேடுவார்கள் .
இறுதியில் யார்தான் கொலை செய்திருப்பார்கள் ? எந்தெந்த முறையில் விசாரணையை தொடர்ந்தார்கள் ? என பல சுவாரசியமான கேள்விகளை அடுக்கிகொண்டே போகலாம் .. கொரியாவில் ஒரு சட்டம் இருக்கிறது இந்தனை ஆண்டுக்குள் இந்த கேசை முடிக்கவேண்டும் இல்லை என்றால் ஆதாரமில்லாமல் அதுவே நிகாரிக்க படும் , இங்கு என்ன ஆனது ?? அத்தனைக்கும் என்ன பதில், என்பதை படத்தை கட்டயாம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் .
பல திரைப்படவிழாக்களிலும் , நிறைய விருதுகளையும் குவித்த இந்த திரைப்படம் கொரியன் சினிமாவில் ஒரு டாப் இடத்தில் இருக்கிறது கூகுளில் பெஸ்ட் கொரியன் திரைப்படங்கள் என்று தேடினால் இது இல்லாத லிஸ்டே பார்க்க முடியாது , கொரியன் ல மட்டும் இல்லீங்க நம்மில் நிறைய பேருக்கு இந்த திரைப்படம் வெகுவாக கவர்ந்திழுக்கும் , எனக்கு பரிந்துரைத்த அனைவருக்கும் நன்றி ..
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment