Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

I Saw the Devil (2010) ரத்தமாய் தெறிக்கும் யுத்தம்

இரத்தமும்   வெறியுமாய்  பழிவாங்கும்  எண்ணம்  கொண்ட  நிறைய  படங்களை  பார்த்திருக்கிறேன்.  ஆனால்  இதுபோன்ற  ஒரு  படத்தை  பார்பது  இதுவே  முதல்  முறை , இத்தனை   நாள்  தவறவிட்டதற்கு  எனக்கு நானே  எதாச்சும்  கொடுதுக்குகறேன், எல்லோரும்  மனதிற்குள்  இப்படி  ஒரு  படம்  வாராதா?  என்று  ஒரு  மனக்கோட்டை  கட்டுவார்கள்  , அப்படி  விவரம் தெரிஞ்ச    வயசில்  இருந்தே நான்  ஒரு  மனக்கோட்டை  கட்டினேன் , அதில்  ஹீரோவுக்கு  என்ன  பலம்  இருக்கிறதோ ? அதே  பலம்  வில்லனுக்கும்  இருக்க  வேண்டும்  , 

சரிக்கு  சமாமாக மோதும்  இவர்கள்  சண்டையை  பார்ப்பதில்  அவ்வளவு  ஒரு  வெறி , எப்படி  இந்த  எண்ணம்  மனதிற்குள்  வந்தது  ன்னு  யோசிக்க  ஆரம்பிச்சு விடீன்களா . காலங்காலமாக  நாம்  பார்க்கும்  படங்கள்  எல்லாமே  ஹீரோ  அடிப்பார்  மீதி  எல்லாம்  அடி  வாங்குவாங்க , இன்னவரைக்கும்  அதே  தான்  நடந்துகொண்டு  வருது , ஹிந்தி  ல  ரா  1 வந்த  புதிசுல கூட  சொன்னாக  ஹீரோக்கு  என்ன  பலமோ  அதை  விட  அதிக  பலம்  வில்லனுக்கு  தான்  ன்னு  பார்த்த  எனக்கு  ஏமாற்றமே  மிஞ்சியது . 





தன்னுடைய  மனைவியை  கொன்ற  ஒருவனை  தேடி  கொலை  பண்ண  துடிக்கும்  ஒருவனின் பழிவாங்கல்  கதைதான் , இன்னும் சுருக்கமாக    பழிக்கு  பழி  வாங்கவேண்டும்  என்று  வெறியுடன்  களமிறங்கும்  ஒருவனின்   கதைதான் இது , நம்மூரில்  பழிக்கு  பழி  வாங்க  வேண்டும்  என்றால்  இந்த  ஆண்டு  வெளிவந்த  ஒரு  டாப்  நடிகரின்(பெயர்  தெரியாது)  படங்களை   போலதான் கிட்ட  தட்ட , எல்லா  படங்களும்  இருக்கும் , இப்படிதான்  ஒருவனை  பழிவாங்க  வேண்டும்  என்றொரு  பார்முலா  வைத்து கூட்டி  , கழித்து   , பெருக்கி  , வகுத்து  பழிவாங்குவாங்குவாங்க  அப்பா  செம்மல்ல ? எப்படி  பழிவாங்கி   இருக்கான்  பாரு  போடு  ஜெய்  ஜெய்  ன்னு  கூவலிட்டு  கொண்டிருகிறார்கள் . நாம்  நிறைய  கற்றுக்கொள்ள  வேண்டும்  என்பது  என்னுடைய  தனிப்பட்ட  கருத்து   மட்டமான  படம்  என்று  சுட்டிகாட்டவில்லை .  

இப்படி  பல  ஏமாற்ற  படங்களுக்கு  பிறகு ஒரு  சில  படங்கள்  ஓரளவுக்கு  என்னுடைய  எதிர்பார்ப்பை  பூர்த்தி  செய்து  இருந்தன  , மொத்த   ரணகளத்தையும்  இந்த  கொரியன்  திரைப்படம்  கொடுத்து  விட்டது .  படத்தை  பற்றி  பார்பதற்கு  முன்னால்  இந்த  திரைபடத்தை இதயம்  பலவீனமாவர்கள் ,. துண்டு  துண்டாக உடலை  வெட்டி  வீசுவான்  இதுபோன்ற  காட்சிகளை  பார்த்தா  சிலர்  அப்பவே  டிக்கெட்  வாங்கிருவாங்க  , ஆக  இளகிய  நெஞ்சம்  படைத்தவர்களும் , தாங்கிக்கொள்ள  கூடிய  மனம் இல்லாதவர்களா  , தயவுசெய்து  இத்தோட   முடித்துகொள்வது   நலம் .  எதையும்  தாங்கி  கொள்ளும்  இதயம்  படைத்தவர்களாக  இருந்தால்  நோ  ப்ராப்ளம் . இதற்க்கு  மேல்  படத்தை  பற்றிய  சில  விசியங்களை  சொல்ல  போகிறேன் . சுவாரசியமான  விசயங்களோ  இல்லை  எதிர்பார்ப்புகலையோ  சொல்லி  உடைக்க  போவதில்லை , என்ன  மேட்டர் , நான்  ஏன்   பார்த்தேன் , உங்களுக்கு  ஏன்   பரிந்துரைக்கிறேன்? என்னை  வெகுவாக  கவர்ந்தது  யார் ? 

ஹீரோ  ஒரு  காவல்  அதிகாரி , அவளுடைய  மனைவி காரில்  வந்துகொண்டு  இருக்கிறாள்   பனி  பெய்து  கொண்டிருக்கும்  பொழுது  ஒரு  ஓரமாக  காரை  நிறுத்துகிறாள்  தனது  கணவனிடம்  தொலைபேசியில்  பேசிக்கொண்டு  இருக்கிறாள் . அங்கு  தீடீரென்று  வரும்  ஒருவர்  தாறுமாறாக  அடித்து  நொறுக்கி  ரத்தத்தை  தெறிக்க  இழுத்து  செல்கிறாள்  , அதிலயே  உயிர்  இழந்திருக்க வேண்டும் , தன்னுடைய  வயிற்றில்  குழந்தையை  சுமக்கும்  இவளுக்கு  இன்னும்  கொஞ்ச  நேரம்  உயிர்  ஊசலாடி  கொண்டு  இருந்தது . என்னை  கொன்னுடாத என்னுடைய  வயிற்றில்  குழந்தை  இருக்கு  ன்னு  சொல்லும்  போது  பார்க்கிற  நமக்கு  கண்ணுல  தண்ணி  வந்துடும் , அனா  வில்லன்  அதை  எல்லாம்  பொருட்படுதமல் அடித்தே  கொள்ளுகிறான் , பார்க்கிற  நமக்கு  இதிலிருந்தே  வில்லன்  மேல்  கடுங்கோபம்  ஆகி  விடும்  பார்க்கும்  நமக்கே  இப்படி  என்றால் ,  கணவனுக்கு  கோபம்  வராதா  என்ன ? கடுங்கோபம்  அடையும்  ஹீரோ   ,   இவனுக்கு  சாவை  விட  அதற்கும்  மேலான  சாவை  கொடுக்க  வேண்டும்  என்று  முற்படுகிறான் ..  இவன்  ஒரு   சைக்கோ  கொலைகாரன்  பெண்களை  விரும்பி  கொல்றவன்  , காம கொடூரன் , கற்பழித்து துண்டு  துண்டாக  வெட்டி  கொள்பவன் . 


ஹீரோ  அப்பாவி  மாதிரி  முக  பாவனங்கள்  , ஆனால்   மிரட்டும்  வெறி , கொலைமிரட்டல்  இவனுடைய  கண்களில்  மட்டும்  தெரிகிறது , தன்னுடைய  மனைவியை  கொன்றவனை  தேட  ஆரம்பிக்கிறான் , முதலில்  ஒருவன்  இந்த  முதலாவது  ஆளை  கொள்ளுறத  யப்பா  சாமி .. அடுத்து  ரெண்டாவது  ஒருவனை  தேடுறான் , அடுத்தது   மூன்றாவது  இவனை  தேட  ஆரம்பிக்குறான்   படத்தின்  தொடக்கத்தில்  இருந்தே  சற்று  வேகமாக  கிளம்பும்  , பிறகு  அசர  வேகம்  , பிறகு  புயல்  வேகத்தில்  கதை  கிளம்பும் , மிரட்டல்  மிரட்டல்  தான் , எப்படியோ  ஒருவழியாய்  இவனை  கண்டுபிடிக்கிறார் . அப்போதும்  ஒரு  பெண்ணை  கடத்திவந்து  கொலை  செய்ய  வைத்திருக்கிறான் . ஆளை  பிடித்து  மரண  பிரட்டு  பிரட்டுகிறார்  ஹீரோ ,  கையை  உடைத்து  விட்டு  இதுதான்  சின்ன  ஆரம்பம்   இன்னும்  இருக்கு  ன்னு  விட்டுட்டு  போயிறார் , மறுபடியும்  மருத்துவமனைக்கு  செல்லும்  வில்லன்  சில்மிஷம்  வேலையை  காட்ட  அங்கும்  வந்து  அடித்து  துவம்சம் ,, உன்ன  அவ்ளோ  சீக்கிரம்  கொள்ள  மாட்டேன்  இன்னும்  வெறித்தனமா  கொள்வேன்  ன்னு  கால்  சொல்லிகிறார் .


அடுத்து  இவன்  செல்லும்  இடமெல்லாம்  எப்படியோ  கண்டுபிடித்து   ஒவ்வொரு  முறையும்  முரட்டு  அடி  அடிக்கிறான்  , இந்த  அடிக்கெல்லாம்  செத்தே  போயிருவான்  ன்னு  நம்ப  நினைப்போம்  ஆனா சாவடிக்கள .  பிறகு  கால்  நரம்மை  கட்  செய்யும்  சொல்லவே  எனக்கு  ரணகளமா  இருக்கு , இதற்கு  முன்னால்  நான்  ஹாஸ்டல் அது  இதுன்னு  பல  SLASHER படங்கள்  பார்த்து  இருந்தாலும்  என்னக்கே  ஒரு  மிரட்டலாக  தான்  இருந்தது .. இப்படியே  விட்டு  விட்டு  புடிக்கும்  அவனை  மேலும்  சீண்டி  பார்த்து  உச்ச  கோபத்தை  அடைய  வைக்கிறான் , ஏன்தான்   இவன  விட்டோமொன்னு  இறுதியில்  அவனை  என்ன  செய்தார் ? பழிவாங்கினாரா ?  எப்படி  வில்லன்  இருக்கும்  இடங்களை  கண்டுபிடித்தான் ?  எல்லாம்  என்ன  என்பது  பரபரப்பான  இறுதி கிளைமாக்ஸ் . 

என்னை  கவர்ந்த  ஒரு  காட்சியை  பற்றி  சொல்லி  விடுகிறேன் , ரத்தம்   தெறிக்க டேக்ஸ்யில்  இருவரை    வில்லன் குத்திக் கொள்வான்   கண்ணே  சிவந்து  போவிட்டது  எனக்கு . வில்லனாக  நடித்திருக்கும்  , OLD   BOY   புகழ்  பெற்ற  நடிகர் மின்  சிக்  ஷோய்   கொக்க  மக்கா  ஏன்னா  நடிப்பு  மரண  மிரட்டல்  , அப்படியே  அந்த  காதாபாதிரமாவே  வாழ்ந்துட்டார் , ஹீரோ  சரிக்கு  சமம் , இப்படி  ஒரு  திரைபடத்தை  தந்த  இயக்குனருக்கு  கோடி  பாராட்டுக்கள் . பல  விருதுகளை  வென்ற  திரைப்படம்  . ஒரு சில  ஆபாச  காட்சிகள் , கொடூரமாக  ரத்தம்   தெறிக்கும்  காட்சிகள்  அதிகமாகவே  இருப்பதால்  தயவுசெய்து  அதற்கு  தகுந்தார்  போல்  பார்த்துகொள்ளவும்  , குழந்தைகள்  இருக்கும்  பொழுது  சுத்தமாக  பார்க்கவே  வேண்டாம் . 

பதிவை  எழுதி  கொண்டு  இருக்கும்  பொழுது  இரண்டு  படங்கள்  நியாபகத்திற்கு  வருகிறது  ஒன்னு  ஹிந்தி  படம் , இனொன்னு தமிழ் , ஹிந்தி  படத்தில்  வெறும்  பாட்டை  மட்டும்  கேட்டு  விட்டிருக்கலாம்  , தெரியமா பார்த்துட்டேன் . தமிழ்  படம்  சமீபத்தில்  அதவாது  2015ல்  தமிழில்  வந்த  முதல்  பத்து   இடத்திற்குள்  அடங்கிய  படம் , 2010 ஆம்  ஆண்டு  வந்த  இந்த  படத்தின் பயன்படுத்த  பட்டிருக்கும்  டெக்னாலஜியை , நாம  2015  ல்  மாற்றி  பயன்படுத்தி  இருக்கிறோம் . ஆக இந்த  இரண்டு  படமும்  நினைவுக்கு  வந்தன  , அது  என்ன படம்  பேருன்னு  மறந்துட்டேன்  , நீங்களும்  மறந்திடுங்க  அது  எல்லாம்  நமக்கு  தேவை  இல்ல  இப்ப  நீங்க  த்ரில்லர்  , ஹாரர் , சீரியல்  கில்லர் , சைக்கோ  கொலைகாரன்  படங்களை  பார்பவர்கலாக  இருந்தால்  இந்த படத்தை  உடனடியாக  பார்த்து  விடுங்கள் . FRAME BY FRAME, ஷாட்  பை  ஷாட்  படம்  அட்டகாசம் . 

நன்றி 

#சிவஷங்கர் 




0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger