Ottaal (2015) ஒரு சிறுவனின் கதை
வங்கா என்ற குறுங்கதையை மையபடுத்தி எடுக்கப்பட்ட ஒரு அழாகான கேரள திரைப்படம் . நிச்சயமாக அனைவரும் பார்க்கவேண்டும் . பல திரைப்படவிழாகளில் கலந்துகொண்டு வெற்றிகளை சூடிய பாராட்டை பெற்ற திரைப்படம்
வாத்து மேய்க்கும் வயதானவர் அவருக்கு ன்னு உறவு என்று ஒரு சிறுவன் . இருவரும் ஒரு கிராமத்தை வந்தடைகின்றனர் . அந்த மாதிரி ஒரு கிரமாத்தில் ஒருநாளாவது இருக்க வேண்டும் . அப்படி சகல அழகியலும் பொருந்திய ஊர் . கள்ளங்கவடம் இல்லா மனிதர்கள் . ஒவ்வொரு காட்சியயும் வர்ணித்து கொண்டே இருக்கலாம். சிறுவன் தாத்தாவிடம் பேசும் காட்சிகள் அவனுடைய அன்பான மனசு . வசனங்கள் என பார்க்கும் ஒவ்வொன்றையும் செதுக்கி இருக்கிறார்கள் என்னால் மறக்க முடியாத ஒரு படமாக இருக்க போகிறது . அனைவருக்கும் அப்படிதான் என்பதில் மாற்று கருத்து இல்லை .
அப்படி ஒரு அருமையான சூழல் . அவர்கள் இருவருடன் மட்டும் இல்லாமல் அங்கு வசிக்கும் நிறைய நபர்களை முன் நிறுத்தி செல்வார்கள் உதரானத்திற்க்கு அவன் தோழன்,பெயரில்லா நாய் , போஸ்ட் மென் , தினமும் மீன் தூண்டில் போட்டு மீன் புடிக்கும் முதியவர் . பாடிக்கொண்டே வேலையே செய்பவர் , வழிகாட்டி என மனதில் இருந்து நீக்கமறா நினைவில் நிற்கிறது .
இதுதான் கதை என்று சொல்லிவிடலாம் . ஆனா சொல்ல மனம் ஒத்துழைக்க வில்லை பார்த்து விடுங்கள் நல்ல திரைப்படம் . 2015 ஆம் ஆண்டே திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது , திரைக்கு தற்போது நவம்பர் ஆண்டு தான் வந்தது அதே சமயம் இணையத்திலும் அபிசியலாக வெளியிடப்பட்டது . பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிருங்கள் .
நன்றி
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment