Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

100 சிறந்த புத்தகங்கள் -Writer S.Ramakrishnan

 விஜய் டிவி நிகழ்ச்சியில் நான் குறிப்பிட்ட சிறந்த 100 புத்தகங்களின் பட்டியல் பற்றி பலரும் மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டிருக்கிறார்கள், அவர்களின் விருப்பத்திற்காக மீண்டும் இதைப் பதிவிடுகிறேன் இந்தப்பட்டியல் முற்றிலும் எனது ரசனை சார்ந்தது, அதிலும் முதன்மையாகப் படைப்பிலக்கியம் சார்ந்தது. இவையின்றி பல முக்கியமான புத்தகங்கள் உள்ளன என்பதை நான் அறிவேன்,இது தரவரிசையில்லை. புதிய வாசகன் கற்றுத் தேர வேண்டியது என நான் கருதும் ஒரு பட்டியலாக எடுத்துக் கொள்ளவும்இவை முழுமையாக எங்கே கிடைக்கும் என பலமுறை வாசகர்கள் கேட்டிருக்கிறார்கள் .சென்னை நியூபுக்லேண்ட்ஸ் வடக்கு உஸ்மான் சாலை தி நகர் கடையிலும் கோவை ராஜவீதியில் உள்ள விஜயா பதிப்பகத்திலும் கிடைக்க்கூடும் •• 1) திருஅருட்பா – மூலமும் உரையும் 2) மகாபாரதம் – கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள் 3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு 4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் 5) கம்பராமாயணம்– மர்ரே ராஜம் பதிப்பு 6) திருக்குறள் – மூலமும் உரையும் 7) அபிதாம சிந்தாமணி – சிங்காரவேலு முதலியார் 8)சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு 9) மணிமேகலை – மூலமும் உரையும் 10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள் 11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள் 12) தமிழக வரலாறு – தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள் 13)பாரதியார் – கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு 14)பாரதிதாசன் கவிதைகள். 15)ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – 12 தொகுதிகள் 16)பெரியார் சிந்தனைகள் – ஆனைமுத்து தொகுத்தவை. 17)திருப்பாவை – மூலமும் உரையும் 18)திருக்குற்றாலகுறவஞ்சி – மூலமும் உரையும் 19)சித்தர் பாடல்கள்– மூலமும் உரையும் 20)தனிப்பாடல் திரட்டு. 21)பௌத்தமும் தமிழும்– மயிலை சீனி வெங்கடசாமி 22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு 23)கு.அழகர்சாமி சிறுகதைகள் முழுதொகுப்பு 24)மௌனி கதைகள் 25)சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு 26)ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு 27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு 28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு 29)வண்ணதாசன் சிறுகதைகள் முழுதொகுப்பு 30)பிரபஞ்சன் சிறுகதைகள் முழுதொகுப்பு 31)அசோகமித்ரன் சிறுகதைகள் முழுதொகுப்பு 32)ஆதவன் சிறுகதைகள் முழுதொகுப்பு 33)லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் முழுதொகுப்பு 34)தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுதொகுப்பு 35)ஆ.மாதவன் சிறுகதைகள் முழுதொகுதி 36)விடியுமா குப.ராஜகோபாலன் சிறுகதைகள் 37)ராஜேந்திரசோழன் சிறுகதைகள் 38)நீர்மை ந.முத்துசாமி சிறுகதைகள் 39)சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள் 40)பாவண்ணன் சிறுகதைகள் முழுதொகுப்பு 41)சுஜாதா சிறுகதைகள் முழுதொகுப்பு 42)பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள் 43)முத்துலிங்கம் சிறுகதைகள் முழுதொகுப்பு 44)கந்தர்வன் சிறுகதைகள் முழுதொகுப்பு 45)சுயம்புலிங்கம் சிறுகதைகள் 46)மதினிமார்கள் கதை – கோணங்கி 47)வெயிலோடு போயி – தமிழ்செல்வன் 48)இரவுகள் உடையும் பா.செயப்பிரகாசம் 49)கடவு – திலீப்குமார் சிறுகதைகள் 50)நாஞ்சில்நாடன் சிறுகதைகள் முழுதொகுப்பு 51)புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம் 52)புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி 53)கரைந்த நிழல்கள் – அசோகமித்ரன் 54)மோகமுள் – தி.ஜானகிராமன் 55)பிறகு – .பூமணி 56)நாய்கள் நகுலன் 57)நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம் 58)இடைவெளி – சம்பத் 59)ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் 60)வாசவேஸ்வரம் – கிருத்திகா 61)பசித்த மானுடம் கரிச்சான்குஞ்சு 62)கோபல்லகிராமம் – கி.ராஜநாராயணன் 63)தலைமுறைகள் – நீல பத்மநாபன் 64)பொன்னியின் செல்வன்– கல்கி 65)கடல்புரத்தில் – வண்ணநிலவன் 66)நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன் 67)சாயாவனம் சா.கந்தசாமி 68)கிருஷ்ணபருந்து – ஆ.மாதவன் 69)காகித மலர்கள் ஆதவன் 70)புத்தம்வீடு. – ஹெப்சிபா யேசுநாதன் 71)வாடிவாசல் -சி.சு.செல்லப்பா 72)விஷ்ணுபுரம் – ஜெயமோகன் 73)உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன் 74)கூகை – சோ.தர்மன் 75)ஆழிசூழ்உலகு– ஜோசப் டி குரூஸ் 76)ம் – ஷோபாசக்தி 77)கூளமாதாரி – பெருமாள் முருகன் 78)சமகால உலகக் கவிதைகள் – தொகுப்பு பிரம்மராஜன் 79)ஆத்மநாம் கவிதைகள் முழுதொகுப்பு 80)பிரமிள் கவிதைகள் முழுதொகுப்பு 81)கலாப்ரியா கவிதைகள் முழுதொகுப்பு 82)கல்யாண்ஜி கவிதைகள் 83)விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு 84)நகுலன் கவிதைகள் முழுதொகுப்பு 85)ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு 86)தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு 87)தேவதேவன் கவிதைகள் முழுதொகுப்பு 88)ஆனந்த் கவிதைகள் முழுதொகுப்பு 89)பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு 90)சமயவேல் கவிதைகள் முழுதொகுப்பு 91)கோடைகால குறிப்புகள் சுகுமாரன் 92)என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் – மனுஷ்யபுத்திரன் 93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள் 94) ரத்த உறவு– . யூமா வாசுகி 95)மரணத்துள் வாழ்வோம் – கவிதை தொகுப்பு 96)சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா. 97)தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு.– கி.ராஜநாராயணன் 98)தமிழக நாட்டுபுறபாடலகள் – நா.வானமாமலை 99)பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவம் கட்டுரைகள் 100)கண்மணி கமலாவிற்கு – புதுமைபித்தன் கடிதங்கள்

#shared from web 

0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger