Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

No Smoking (2007) இதுமாதிரி ஒரு இடம் இருந்தா சொல்லுங்கைய்யா ??

அனுராக்  

ஜெய் பாபாஜி க்கு பெங்காலி
நோ ஸ்மோக்கிங் அனுராக்  , இது ஒரு குறுகிய கதையை (ஸ்டீபன் கிங், Quitters) மையபடுத்தி எடுக்கப்பட்டது .ஹாலிவுட் படாமான Cat's Eye (1985) இதிலிருந்தும் தான். அதென்ன குறுகிய கதை, படத்துல அந்த புத்தகத்தை ஹீரோ படிப்பார் பாருங்கள் அந்த  புத்தகம்  எவ்ளோ  சிறுசா   இருக்கும் .



🚭 எங்கிருந்து தான் இப்படில்லாம் யோசிக்கிறாங்கலோ ன்னு நிறைய படங்களுக்கு சொல்லி வியந்துருக்கேன், அந்த லிஸ்ட் ல இந்த படத்தையும் சொல்லிக்க விரும்புறேன்.. அதுவும் சிறந்தபடங்கள் லிஸ்ட் ல வைத்துகொள்கிறேன். குழப்பம்மில்லா ஒரு கதை மோடி மஸ்தான் வித்தை காட்றாங்களா.. கண்கட்டி வித்த காற்றான்களா படத்தை பார்த்துதான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

🚭 "தினதினமும் ஆயிரம் மக்களுக்கு மேல் புகைபிடிப்பதை கைவிடுகிறார்கள், இறப்பதன் மூலமாக"
எங்க போனாலும் சிகரெட், உக்காந்தா சிகரெட், நின்னா சிகரெட் ,ஒருநாள் கூட சிகரெட் இல்லாம இருக்க மாட்டார் ஹீரோ .அவருடய மனைவி அவளை விட்டு சொல்லவும் , மீண்டும் அவளுக்காக இவர் சிகரெட்டை கைவிட ஒப்புகொள்கிறார். அதன் பிறகு நடப்பது தான் மீதி கதை.என்னை அறியாமேலே சில காட்சிகள் சிரித்தேன். சிரிப்பதற்கான படம் இல்லை சிறப்பான படம் . சிந்திக்க  வேண்டிய  படம் ..

🚭 சிகரெட் பழக்கத்தை விடுவது நா சாதரணமா விடுறது இல்ல. அதுக்குன்னு தனியா ஒரு டீம் இருக்கு ஒரு மறுவாழ்வு மையம் இருக்கு. (செத்துபொழைக்கணும்)
அதன்பிறகு நடப்பதெல்லாம் மர்மமே. நீங்க எதிர்பார்க்காத அத்தனையும் நடக்கும். முதல் முறை பார்பவர்களால் அதனை உணர முடியும்.. இது CIRCLE ஸ்டோரி தானா??

🚭 நிறைய விருதுகளுக்கு பரிந்துரை செய்ய பட்டது. சொல்லும் படியான விருதுகள் எதுவும் வாங்க வில்லை என்றாலும், வெளியாவதற்கு முன்பே நிறைய சிறப்பான விமர்சனங்களையும், நல்ல வரவேற்பையும் பெற்றது.திரைப்ட விழாக்களில் திரையிடப்பட்டது, பின்னணி இசையும் பாடலும் சூப்பர் .அனுராக் படங்களை விரும்பி பார்பவர்களுக்கு இது பிடிக்கும். எனக்கு பிடித்திக்ருகிறது.



🚭 நான் இப்படி பட்ட படங்களை பொறுமையாக பார்ப்பேன் அனுராக் <3 span="">சூப்பர்.படத்தை பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லவும். பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் படத்தை பார்க்க சொல்லி பகிரவும்.

நன்றி
#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger