Gulaal (2009) அரசியலா ?? சாதி வெறியா ?? துரோகமா ??
(#) அனுராக் காஷ்யப் <3 span="">3> இயக்கத்தில் வெளிவந்த அரசியல், சாதி வெறி, கலந்த கிரைம் த்ரில்லர் திரைப்படமாகும்.
வடஇந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜபுத்திர இனத்தலைவர்களான இவர்கள் அந்த மாநிலத்தில் உள்ள முக்கிய சாதிகளில் ஒருவர்கள். இவர்களுக்கென மரியாதையே தனிதான்.தங்களுடைய அரசியல் வலிமையை பயன்படுத்தி என்ன வேண்டுமாலும் செய்ய முடியும், என்பதை தெரிவு செய்யப்பட்டதை மட்டும் விளக்கமாக உணர்த்துகிறது திரைப்படம்..
(#) ராஜ புத்திரர்களின் வீரத்தையும் அவர்கள் மண்ணுக்காக அவர்கள் செய்த தியாகங்களையும் பற்றிய வசனங்களோடு தொடங்குகிறது படம் சில வார்த்தைகளை புரிந்துகொள்ள முடியவில்லை இருந்தாலும் பேச்சில் கம்பீரம் அதே சமயத்தில் கோபம் கலந்து பேசுகிறார்..
அவர்கள் செய்த தியாகங்களை சொல்லுகிறார் இத்தனை செய்தும் நமக்கு அவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள்,தனி நாடு நமக்கு வேண்டும் என துகி பனா அழைப்பு விடுக்கிறார்,
(#) தங்களுடைய சுயநலத்திற்காக இவர்கள் செய்யும், அரசியல், கொலை, அத்தனையும் சொல்லுகிறது .
தீலிப் ஒருமுறை கல்லூரி மாணவர்களால் நிர்வாணமாக ரூமிற்குள் அடைக்கப்பட்டு வைக்கபடுகிறார், அங்கு அதே கல்லூரியின் ஆசிரியையும் அடைத்துவைத்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்கிறான்.
(#) தன்னை அவமான படுத்தியதை தெரிந்து நண்பன் இளவரச குடும்பத்தை சேர்ந்த ரன்ஸா அவனை அடிக்க பிறகு இவர்களை துரத்த , பிறகு அங்குள்ள ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த துகி பனா மூலம் பிரச்சனை முடிகிறது.
அதன் பிறகு கல்லூரி தேர்தல் போட்டிட்டுஉயிரை விடுகிறார் ரன்ஸா. பிறகு எல்லாம் என்ன ஆனது என்பதை படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்..
(#) என்னை மிகவும் கவர்ந்தவர்கள் துகிபனா ஒரு நெகடிவ் கதாபாத்திரம் எடுத்து அதில் பட்டய கிளப்பி இருக்கிறார், அனுராக் நிறைய படங்களில் ஒரு சில காட்சிகளை வருவார் எதிலும் டக் ன்னு கண்டுபிடிக்க முடியாது இதில் தேர்தலில் வென்ற பார்ட்டி காட்சி ஒன்று இருக்கும் அதில் வரும்போது பார்த்துவிட்டேன்.
(#) மாணவர்களை வைத்து அரசியல் நடத்தி வந்த ஒன்றிரண்டு படங்களை பார்த்திருக்கேன் இது கொஞ்சம் வித்தியாசம் தான் , மொழியே புரியவில்லை என்றாலு பாடல்கள் ரசிக்கும் வண்ணமும் கேற்கும் வண்ணமும் இருக்கிறது, முகத்தில் சாயம் பூசிக்கொண்டு ஒருவன் துகிபாணி வீட்டில் இருப்பார், படம் வந்த புதிதில் எப்படி என்று எனக்கு தெரியவில்லை நல்ல படம் பார்க்க தவறியவர்கள் நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்
பார்த்தவர்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
நன்றி
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment