Phobia (2016) உடல் மொத்தமும் நடிப்பு
மேஹா(ராதிகா ஆப்தே) இவங்க ஒரு ஆர்டிஸ்ட்.. ஒருநாள் தன்னுடைய நண்பர்களுடன் பார்டி முடிந்து வீடு திரும்பையில் , அந்த வண்டியை ஓட்டி சென்ற டாக்சி டிரைவர் அவளை கெடுக்க முயற்சிக்கிறான்.அது மட்டும் தான் பிறகு .. அதிலிருந்தே இவளுக்குள் என்ன ஆனது என்றே தெரியவில்லை நண்பர்கள் உறவினர்கள் யாராலையும் கண்டுபிடிக்க முடில.. இவளுக்கு மனரீதியா வோ அல்லது உடல் ரீதியாவோ பிரச்சனை இருக்கலாம் ன்னு நினைக்கிறாங்க.. தீடீர் ன்னு கோவ படுறா திடீர்ன்னு மயங்கி விழுறாங்க...
ராதிகா ஆப்டே கொஞ்சம் மாறுதலாவே இருக்காங்க.. . அவங்களுக்குள்ள என்னமோ நடக்குது யார பார்த்தாலும் பயப்பட ஆர்மபிச்சுட்டாங்க, அதிலிருந்து மீளாத பயத்துடன் ராதிகா ஆப்தே ஒவ்வொருநாளும் இருக்கையில் . ஒரு சேஞ்சுக்காக அவளோட நண்பர் ஷான் அவல வேறொரு வீட்டுல தங்க வைக்கிறார்.. அந்த வீட்டில் ஏற்கனவே ஒரு பெண் இருந்ததாகவும் அவள் இப்போ காணமல் போனதாகவும் தெரியவருகிறது..
ஏற்கனவே பயந்து பயந்து வாழும் ஆப்தே க்கு இன்னும் மர்மமா நடக்க ஆரம்பிக்குது அவள் தங்கி இருக்கும் அந்த வீட்டில் ... இதற்க்கு முன் இருந்த ஜியா தான் ஆவியா வந்து இருப்பாளோ ன்னு யோசிக்க ஆர்மபிக்குரா.. அந்த அபார்ட்மென்ட் ல ஆப்தே க்கு ஒருத்தவங்க பழக்கம் ஆகுராக அவங்க மூலமா அந்த ஆராய்ச்சில இறங்குறாங்க ஆப்தே.. இறுதியில் கதை என்ன தான் ஆனது?? ராதிகா ஆப்தேக்கு நிஜமா என்னதான் ஆனது ?? யாரு ஜியாவ கொன்னுருப்பா? அவள் வீட்டில் இருக்கும் மர்மம் என்ன?? ன்னு பக்கவா விறுவிறுப்பான மீதி கதையில் சொல்லி இருக்காங்க.
உண்மைலேயே நான் எதிர்பார்க்கவே இல்ல .. பின்னி பெடல் எடுத்து இருக்காங்க நடிப்பில் ஆப்தே <3 span="">3> ,.. ஆரம்பத்துல இருந்து இறுதி வரை பக்கா .. சிறப்பான கதை
கிளைமாக்ஸ் செம்ம செம்ம... ஆப்தே அவங்க நடிபுக்ககவே படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் .. எனக்கு மிகவும் பிடித்திருகிறது கண்டிப்பா உங்கள் எதிர்பார்ப்பையும் நீங்கள் எதிர்பார்க்காத அளவையும் பூர்த்தி செய்யும் என்பதில் மாற்றுகருத்தே இல்லை.
அப்புறம் இந்த படத்தோட காபி தான் டீ தான் வடை தான் பிரச்சனைக்கே நான் வரல ... படம் நல்லாருக்கு கண்டிப்பா பாருங்க .. உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
நன்றி
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment