Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

UGLY (2013) நம்மை சுற்றி இருக்கும் அசிங்க முகங்கள்



ஒரு சில படங்களை பார்க்கும் பொழுது இப்படி ஒரு படத்தை இத்தனை நாளா மிஸ் பணிட்டோமே ன்னு நம்மேல நமக்கே பெரிய ஆதங்கம் வரும், எனக்கு இந்த படத்தை பார்க்கும் பொது அதோடு சேர்ந்து( ஆரம்பத்தில் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில்), கொஞ்சம் கடுப்பும் ஆனது.படம் பார்த்த முடித்த பிறகு அந்த கடுப்பான காட்சிகள் நினைவிற்கு வரவே இல்லை மீதி வரக்கூடிய கதை அப்படி என்னை மறக்கடிக்க செய்திருக்கிறது/

அப்படி என்னாதான் கதை ன்னு பார்த்தீங்கன்னா. காணமல் போன தன்னுடைய மகளை கண்டுபிடிக்க காவல் துறையில் புகார் கொடுக்க வருகிறார் தந்தை.. தன்னுடைய குழந்தையை கண்டுபிடித்தாரா? இல்லையா ?என்பது மீதி கதை.. இதில் நடித்திருக்கும் காவலர் அந்த குழந்தை ஒட்டுமொத்தமாக அத்தனை பெரும் கிரேட்..

ஒன்னும் புரியாத கதை போல தான் தெரியும்.பாருங்கள் எத்தனை அசிங்கமான முகங்கள் நம்மை சுற்றி இருப்பார்கள் என்று புரியும்.. ஒவ்வொரு காட்சியும் சிறப்பு என்பதால் நான் எந்த ட்விஸ்ட் உம் சொல்லவில்லை கதையின் ஆரம்பம் என்ன? நகர்வு என்ன ?விறுவிறுப்பு என்ன ?சிறப்பான காட்சிகள் என்ன? திருப்புமுனைகள் என்ன? என எதையுமே தெரிந்துகொள்ளாமல் பார்த்தல் ஒரு திரைப்படமாக அது உங்களை கவரும்

நானே இரண்டு வருடம் முடிந்த பிறகுதான் பார்த்திருக்கிறேன் . எத்தனையே மொக்கை படங்கள் ஹிந்தியில் பார்த்து நேரத்யும் Data வையும் வீணடித்திருக்கிறேன்.. இந்த படத்தை எப்படி தவர் விட்டேன் ன்னு தெரியவில்லை ..

எதிர்பார்க்க முடியாத காட்சிகள், படத்தின் பின்னணி இசை இருக்கிறது ஆனால் இல்லை ,, யூகிக்க முடியாத முடிவு, நான் சொல்வது என்னவென்றால் Review ஏதும் பார்க்கமால் படத்தை பார்க்கவும் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம் தான்...

எப்படி கதை அமைத்து எப்படி கேஸ்ட் அமைத்து, எப்படி திரைக்கதை அமைத்து,. எப்படி நகர்த்தி,.எப்படி முடிக்கவேண்டும், என்பதை இயக்குனர் தெளிவாக சொல்லி இருக்கிறார்.. அனுராக் <3 span="">
உங்களுக்கு தெரியுமா? இந்த இயக்குனரின் இயக்கத்தில் நான் பார்க்கும் இரண்டாவது படம் இதுதான் கிட்ட தட்ட இவர் படங்கள் மாஸ்டர்பீஸ் தான் . மீதி படங்களையும் விரைவில் பார்ப்பேன் .. இறுதியில் கதை முடிந்து பேரு போட ஆரம்பிச்டுவாங்க நான் பேரு முடிஞ்சு வேற ஏதாவது இருக்கா ன்னு பார்தேன். சில காட்சிகள் முழுமையாக முடிக்கபடா விட்டாலும் சிறப்பான படம் ..


கண்டிப்பா பார்க்காதவங்க விரைவில் பாருங்க, நண்பர்களுக்கும் பகிருங்கள்

#நன்றி

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger