Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

Lens (2017) Tamil

இளம் வயதில்  தெரிந்தோ  தெரியாமலோ , செல்லக்கூடாத  தளங்களுக்கோ  அல்லது  பார்க்க  கூடாத  படங்களையோ பார்த்து .  அதற்கு  அடிமையாகி , அடுத்த   படியாக ஒரு படி   மேல்  ஏறி,  என்னனமோ செய்துகொண்டு  இருக்கின்றார்கள் . இந்த  சூழலில்   இதுபோன்ற  படங்களை  பார்த்தவாது   , மனிதனின்  கசப்பான  மறுமுகத்தை  தெரிந்துகொள்ளலாம் என்பதற்காகவும் , தவறை  செய்பவன்  திருந்துவதர்க்காகவும் நிச்சயம்  இந்த  திரைப்படத்தை அனைவரும்  பார்க்க  வேண்டுகிறேன் .



ஆபாச  தளங்களில்  தங்கையின்  வீடியோ  வை  பார்த்த  அண்ணன் , "தங்கை  தற்கொலை" . தன்   மனைவி  வேறொருவனோடு அந்தரகத்தில்  இருப்பது  போன்ற முகநூலில்  புகைப்படம்  பகிர  பட்டதை பார்த்த  கணவர் தற்கொலை . இப்படி  பல தற்கொலைகள்  செய்திதாள்களிலும் , தொலைகாட்சிகளிலும் பார்த்து  இருப்போம் .அதற்கு  பின்னணில் இருக்கும்  பிரச்னைகள்  என்ன ? அதனால்  பாதிக்கப்படுவோர் யார்? யார்? என்பதனை பற்றி  நினைப்பது  இல்லை  .

ஏன்  நினைக்கணும்.  நான்  நினச்சி???  அப்படின்னு  மனநிலை  யோசிக்க  தோன்றும்  . உங்களுக்கான  பதில்  இதுல  இருக்கும்  . நீங்களும்  தான்  காரணம் அவங்க  தற்கொலைக்கு  அப்படின்னு  பொட்டில்  அடித்த படி  பதில்  இருக்கும் .  சரி  இதை  எல்லாம்  ஒழித்து  கட்டிவிட்டால் எந்த  பிரச்னை  இல்லாம  நாகரிமாக  சூழல்  சமுதயாத்தை  கொண்டு  வந்துருவீங்களா ன்னு  யாராச்சும்   கேளுங்க . கேற்பதற்கு  முன்னாடி  நீங்க  ஆண்  தானா  ? என்பதை  உங்களிடம்  கேட்டுக்கொண்டு  பிறகு  கேள்விகளை  முன்  வைக்குமாறு  கேட்டுக்கொள்கிறேன் .

 சமீபத்தில் வந்த  ஒரு  திரைப்படத்தில், வெறும்   வாய்  "வீர  வசனத்திற்கும்",  அர்த்தமில்லா  ஆதங்கத்திற்கும் .  அரங்கம்  அதிர  கொண்டாடியவர்களுக்கு  இந்த  திரைப்படத்தை பார்ப்பது  சற்று  கடினம்  தான் .  ஒன்னே  முக்கால்  மணி  நேரம்  .  நமக்கு  மட்டுமே  நம்  மனதிற்கு  மட்டுமே  மறைத்து  வைத்து  , வெளில  யாருக்கும்  தெரிய  கூடாது  அது  தப்பு  ன்னு  தெரிஞ்சும்  செய்யுறோம்  பாருங்க . அவங்களுக்காக   தான்  இந்த  திரைப்படம்..

லென்ஸ்  , இந்த  திரைப்படத்தில் வரும்  ஒரு  வசனம் " மத்தவங்க  யாரவது  பக்கத்துல  இருந்த  மனுஷன்  ரொம்ப  நல்லவனா  நடிக்க  ஆரம்பிச்சுடுவான் ..
 "  இரணூறு  சதவிகிதம்  உண்மை . இப்ப  இந்த  போஸ்ட் க்கு  கூட  கமெண்ட் எப்படி  வரும்  தெரியுமா ..  இவ்ளோ  சொல்றார் ல  சொல்ட்டு  நேரா  எங்க  போவாரு  அங்க  தான்  போவாரு .. அப்படின்னு  சொல்லுற  மன  நிலையை  மாற்ற  முடியாது ..




முடிந்தா  இந்த  திரைப்படத்தை  பாருங்க .. தன்  குடும்பத்தயாவது  வாழுற  ஒரு  ஜென்மம் , சந்தோசமா  வெச்சுக்க  பாருங்கையா.  கேள்விகளை  என்னிடம்  கேற்காதே  . உனக்கு  பதில்  சொல்லி  என்  நேரத்தை  நான்  வீணடிக்க  விரும்பவில்லை . வேண்டுமானால் தேவையென்றால்  Inbox வா  பதிலை  உருவாக்கி  தரேன்   உன்  கேள்வியோடு  பொருத்திக்கொள் .

நன்றி

#சிவஷங்கர்


1 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger