ஒரு சிறிய அறிமுகம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான திரைப்படங்கள் பிடிக்கும் . தமிழ் திரைப்படங்களை மட்டுமே பார்த்துகொண்டிருந்த நான் சிறுவயதில் விவரம் தெரிஞ்சு பார்த்த ஆங்கில படம் ஜுராசிக் பார்க் தான் .. பள்ளியில் குழந்தைகள் திரைப்பட திருவிழா என்று சொல்லி இதனை திரையிட்டார்கள் . ஏகப்பட்ட கூச்சல்கள் சத்தங்கள் ஆரவாரமான அலைப்பறைகள். முதல் முறை இப்படி பார்க்கும் போதே அவ்வளவு ஆரவாரம் வீட்டில் கேபிள் கனெக்சன் பிறு பிறு என்றுதான் தெரியும் அதில் ஒன்னு ரெண்டு சேனல் தான் எடுக்கும் அதுல அப்ப அப்ப வரக்கூடிய திரைப்படங்களை பார்த்துகொண்டிருந்தேன். தேட்டர் ல அவ்ளோ பெரிய திரையில் முதல் முறை இப்படி ஒருபடத்தை பார்த்த என்னுடைய முதல் அனுபவம் மறக்கவே முடியாது .
போக போக வீட்டில் LG டிவி வாங்கினோம். கூடவே இலவசமாக LG DVD யும் 5 கேசட்டுகளும் தந்தார்கள். இது எங்க கிடைக்கும் ன்னு கேட்டு கடைய தெரிஞ்சுகிட்டேன். எங்க அப்பாவா தினமும் தொந்தரவு பண்ணி பொட்டி பொட்டியா கேசட்டா வங்கி அடுக்கி வச்சு படம் லாம் பார்த்தேன் , நான் வளர வளர டெக்னாலஜியும் வளர்ந்து இப்ப நினச்ச படங்களை பார்த்துகிட்டு இருக்கேன் .
சும்மா படம் நம்ப மட்டும் பார்த்தா போதாது எனக்கே பட்டுச்சு அதை பத்தி நாலு பேருக்கு சொன்னம் நா அவங்க பாப்பாங்க , ஸ்கூல் ல மதிய நேரத்துல பசங்க கிட்ட கதைய சொன்னா அவங்க எனக்கு அந்த கேசட் குடுடா சொல்லுவாங்க நானும் அடுத்த நாள் கொண்டுவந்து குடுத்திடுவேன் . திரும்பி தேஞ்சு போய்தான் என் கைக்கே வரும் எல்லோருகிட்டையும் அந்த கேசட் ஒரு ரவுன்ட் கட்டிரும் . அப்படி போயிட்டு இருந்தது .
வெகு நாள்களாகவே நான் பார்க்கும் திரைப்படங்களை பற்றி எழுதிட ஆசை இருந்தது எழுதுவதற்கு ன்னு சில வரைமுறைகள் இருக்கு , நிறைய பேர் ப்ளாக் எழுதறத பார்த்திருப்பேன் சில விமர்சனம் பதிவு செய்வார்கள் சிலர் ஒரு சின்ன பேரா ல சொல்லி முடிச்சுடுவாங்க சிலர் ஒருவரில சொல்லுவாங்க சிலர் கட்டுரை எழுதுவாங்க படத்தை விமர்சனம் செய்வது எப்படி ? ன்னு தேடுனதுலாம் ஒரு காலம் .. தமிழ எனக்கு டைப் பண்ண சுத்தமா தெரியாது கூகிள் உதவி மூலம் அதுவும் இப்ப எளிமை ஆய்டுச்சி . அப்ப அப்ப சில சில மிஸ்டேக் பண்ணுவேன் இப்ப திருத்தி கொண்டு இருக்கேன் .
நமக்கு நிறைய சினிமாக்களை பற்றி தெரிந்திருக்கலாம் அனால் அந்தந பின் தெரியாத நிறைய விசியங்கள் இருக்கும் நேரம் கிடைக்கும் பொழுது நிறைய தகவல்கள் தரலாம் கண்டிப்பாக முயற்சிக்கிறேன்
ஒருசிலருக்கு ஒவ்வொரு மாதிரியான திரைப்படங்கள் பிடிக்கும் , குறிப்பா ஹாரர் த்ரில்லர் இதுபோன்ற ஜானர்களில் வெளிவந்த படங்களுக்கு தான் நிறைய ரசிகர்கள் உண்டு , எனக்கு அப்படி எதுவும் இல்லை எல்லா ஜானரும் பிடிக்கும் நல்ல திரைபடம்மா இருந்தா எந்த மொழியா இருந்தாலும் பாப்பேன் சப்டைட்டில் துணையோடு .
உண்மையா சொல்லணும் என்றால் எனக்கு திரைபடத்தை பற்றிய விமர்சனமோ கட்டுரையோ அல்லது அந்த எழுத்து நடையிலோ எழுத தெரியாது .. மற்றவர்களை இந்த திரைப்படங்களை பார்க்க வைப்பதற்க்கான ஒரு எதிர்பார்ப்பினை உருவாக்கிட முடியும் அந்த எதிர்பார்ப்பினை மட்டும் தான் செய்வேன் எனக்கு பிடித்த மற்றும் நல்ல வரவேற்ப்பு பெற்ற படங்களை பற்றி மட்டுமே எழுதுவேன் . முகநூலில் எழுத ஆரம்பித்தேன் .. ப்ளாக் இலும் எழுதலாம் என்று இன்றிலிருந்து தொடங்குகிறேன் .. நான் பார்த்து ரசித்த படங்களை பற்றிய அறிமுகத்தையும் முடிந்தால் எங்கு பார்ப்பது என்ற முகவரி யும் தந்துவிடலாம் என்று இருக்கிறேன் . உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்
நன்றி
#சிவஷங்கர்
3 உங்கள் கருத்து:
:)
Bro..nenga unga fb id sollunga..neraiya korean action movies..unga life la ethu varaikum nenga pathuratha.films solren..yella films miratum..
Bro..nenga unga fb id sollunga..neraiya korean action movies..unga life la ethu varaikum nenga pathuratha.films solren..yella films miratum..
Post a Comment