Sold (2016) ஒரு சிறுமியின் கண்ணீர் கதை
சமீபத்தில் இணையத்தில் பெண்களை மையபடுத்திய ஓவியம் ஒன்று பகிரபட்டது அந்த ஓவியம் சொல்லும் கருத்துக்கள் பலவிதமானவை . "பெண் கடவுளை" வணங்கும், அதே கயவன் தான் ரோட்டில் செல்லும் பெண்ணை பலாத்காரம் செய்கிறான் . பெண் என்பவளை சாமியாக பார்க்கும் அதே ஆண் தான் சதையாகவும் பார்க்கிறான் . வணங்குபவனே வன்புணர்விற்காக அலைகிறான் . இப்படி பாதுகாப்பில்லாமல் நம் நாடே நாசமாகி கொண்டு இருக்கிறது . சமீபத்தில் வந்த கணக்கெடுப்பின் படி ஒரு நாளுக்கு மூன்று மணி நேரத்திற்கு ஒவ்வொரு பெண்களாக கடத்த பட்டு மற்ற நாட்டிற்கு விற்க படுகின்றனர் , இதில் மிகக் கொடுமை என்வென்றால் இந்தியாவில் தான் அதற்க்கான Hub இருகின்றது . அப்படி நேபாள நாட்டில் இருந்து கொல்கத்தாவில் ரெட் லைட் ஏரியாவில் மாட்டிகொண்ட ஒரு சிறுமியின் கதை தான் இந்த SOLD.
செய்தித்தாள்களில் தினமும் எதோ ஒரு பக்கத்தில் கடத்தல் செய்திகள் பற்றி வந்துவிடும் , அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை கடத்தி விற்பனை , பச்சிளம் குழந்தைகளை கடத்தி விற்பனை , கன்டெய்னரில் பெண்கள் கடத்தல் ன்னு பல விதமான செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கின்றன , பதினொன்னு பன்னிரண்டு வயது நிரம்பிய பெண்களை கடத்தி வேறொரு நாட்டிற்க்கு விற்று விடுவார்கள் , இந்த கேவலமான செயலில் முதல் இடத்தில் இருப்பது நம் இந்தியா தான் . நாம் பெருமை படக்கூடிய எது எதிலோ முதல் இடம் இருக்கிறோம். இன்னும் எது எதிலில் வெற்றி பெற்று முன்னிலை வர துடிக்கிறோம் . துடிப்பு மிக்க நம் நாட்டில் இந்த செயலிலும் முன்னிலை இருப்பது இந்தியா தான் .
பெண்களை கடத்தி விற்கும் நாட்டில் வசித்து வருகிறோம் என்று நினைக்கும் பொது நம் நாட்டின் மீது வெறுப்பு தான் வருகிறது .சமீபத்தில் கடத்தல்கள் பற்றி வந்துள்ள திரைப்படங்கள் மூலமே நமக்கு சொல்லி விடுகின்றன, இந்தியா தான் HUB, இங்கிருந்து தான் மற்ற நாடுகளுக்கு பெண்கள் கடத்த படுகின்றன என்று . “வேதாளம்” திரைபடத்தில் இளம் பெண்களை கடத்தி ஒரு கன்டெய்னரில் அடைப்பார்கள் , அந்த கன்டெய்னரில் ஒரு பெண் தூக்கு போட்டு இறந்து விடுவதாக காட்டுவார்கள் . 2014 ல் ஆகட்ஸ் மாதம் வந்த ஒரு உண்மை செய்தி . அதைதான் ஒரு காட்சியாக படமாக்கி இருப்பார்கள் படத்தில் தான் அஜித் வந்து எதிர்பாராத விதமாக அங்குள்ளவர்களை காப்பாற்றி விடுவார் . உண்மை என்னவென்றால் அந்த கன்டெய்னர் இந்தியாவில் இருந்து கப்பல் மூலம் லண்டனுக்கு கடத்த பட்டிருக்கிறது . அதில் கடத்தப்பட்ட பெண்களில் நான்கிற்கு மேலானோர் மூச்சு திணறி உள்ளேயே இறந்துள்ளனர் அதில் இரண்டு குழந்தைகளும் . கடத்தப்பட்டவர்களில் பாதி பேர் நேபாள் நாட்டில் இருந்து கடத்தப்பட்டவர்கள் .முகம் வாடி சோர்வடைந்து, தாகம் தீர்க்க வழியில்லாமல், உணவில்லாமல் பசியினால் மயக்கமுற்று உயிருள்ள சிலர் மீர்க்க பட்டனர் . விசாரணையில் இவர்கள் இந்திய நாட்டில் இருந்து சரக்கு கப்பலின் மூலம் வேறு நாட்டிற்க்கு கடத்தப்பட்டதாக தெரியவந்தது .
திரைப்படம் தொடங்கும் பொது இயற்கை அழகியலுடன் தொடங்கும் . காட்சிகளை வைத்து ஒரு அழகான திரைப்படமாக இருக்கும் என்று பார்த்தேன் இது ஆழமான திரைப்படம் . நடித்திருக்கும் பெண்ணிற்கு எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம் . திரைப்படத்தை பற்றி எல்லாமே சொல்லிவிட விருப்பம் இல்லை நிச்சயம் பார்க்கவேண்டிய திரைப்படம் . ஏன் பார்க்கவேண்டும் என்பதனையும் . எனக்கு தெரிந்த சில தகவல்களையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் . ஏனென்றால் நான் Women Issues In India என்றொரு Multimedia செய்து மற்ற கல்லூரி விழாக்களில் திரையிட்டு இருக்கிறேன் . கலந்த கொண்ட அணைத்து இடங்களிலும் முதல் இடத்தை தான் பிடித்தேன் . பெருமை பீற்றி கொள்வதற்காக சொல்ல வில்லை
இந்த தலைப்பை எடுக்க காரணமும் இருந்தது . பதிவு கொஞ்சம் நீளம் என்பதால் பொறுமையாக படிக்கவும் .
Sold (2016)
நேபாள் மலைகிராமத்தில் வசிக்கும் பன்னிரண்டு வயது நிரம்பிய லக்ஷ்மி தன்னுடைய தாய் தந்தையுடன் வசித்து வருகிறாள் , அப்படி ஒரு மகிழ்ச்சி பொருந்திய அழகிய முகம் . எப்பொழுதுமே சிரித்துக் கொண்டிருக்கும் இயற்கை அழகியல் பொருந்தியவள் ( தூங்கும் பொது கூடவா உதடு சிரிக்கும் ), ஒருநாள் மழை அதிகம் பெய்திட பயிர்கள் எல்லாம் அதில் நாசம் ஆகியன . ஏற்கனவே ஏழ்மையில் இருக்கும் இவர்கள் இன்னும் ஏழ்மையை அடைய போகிறோம் என்ற யோசனையிலே இருக்கின்றன . தங்கள் ஊர் திருமணம் ஒன்றில் அந்த சிறுமி தன்னுடைய அம்மாவுடன் வருகிறாள் , அவள் உடுத்தி இருக்கும் உடை அவளுக்காகவே செதுக்கப்பட்ட உடை போல அமைந்திருக்கும் .
. அந்த உடையில் நடனமாடி கொண்டிருக்கும் வேலையில் இன்னொருவள் இவளுடன் வந்து நடனம் ஆட ஆரம்பிக்கிறாள் . அவளை கண்டவுடன் நீங்க நகரத்தில் இருந்து வந்தவங்களா ? உங்க கையில் இருக்கும் ப்ரெஸ்லட் அருமையாக இருக்கிறது என்கிறால் , நகரத்தில் இருக்க்கும் எல்லா பெண்களிடம் இது இருக்கும் ன்னு சொல்லிகிறாள் . நகரத்தில் பெண்களுக்கு சுதந்திரமா ? அவங்க விருப்ப படி எல்லாம் வாங்கலாமா ? என கேட்டுக்கொண்டு இருக்கிறாள் . அவளும் அவளுடைய ஆசையை மேலும் தூண்டுகிறாள் . சிறுமியின் தந்தையும் பணத்திற்காக இவளை வேலை பார்க்க நகரத்திற்கு அனுப்புவதாக சொல்லி அனுப்பி வைக்கின்றன .
மலை கிரமாத்தில் மட்டுமே பிறந்தததில் இருந்து வாழ்ந்த அவளுக்கு பார்க்கும் எல்லாமே புதுமையாக தெரிகிறது . அங்கிருந்து அவளை கொல்கத்தாவில் இருக்கும் ரெட் லைட் ஏரியாவிற்கு அழைத்து செல்கிறாள் . ஒன்றுமே தெரியாத மனம் ஆச்சே நம்மை வேலைக்குதான் அழைத்து செல்கிறாள் என்று நம்பி கொண்டே செல்கிறாள் . பிறகு அந்த தொழிலில் அவளை கட்டயாபடுத்தி இறக்கி விடுகிறார்கள் . இதற்க்கு பிறகு என்ன ஆயிற்று . என்பதை எல்லாம் பார்த்து தெரிந்துகொள்ளவும் . கண்களில் மட்டும் அல்ல இதயத்திலும் கண்ணீர் வந்து விட்டது . எல்லாமே நான் சொல்லிட விரும்பவில்லை .
திரைப்படத்தை பற்றிய கேள்வி பதில்கள் இயக்குனருடன் : https://www.youtube.com/watch?v=0JVUq7E0Wzo
திரைப்படத்தை பற்றிய தகவல்கள் அபிசியல் லிங்க் புத்தகத்தை வாங்க https://www.snapdeal.com/product/sold/684731248823#bcrumbSearch:sold%20by%20Patricia%20McCormick //
இளகிய மனம் படைத்தவர்கள் தொடர வேண்டாம் .
சமீப காலமாக இந்தியாவில் இது போன்று மனித கடத்தல் அதிகம் காணப்படுகிறது. மனிதர்கள் கடத்தல் செய்யப்படுவதில் தெற்காசியா அளவிலான பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக நேபாள், வங்கதேசத்தில் இருந்து கடத்தி இந்தியாவில் விற்கப்படுவது தெரிய வந்துள்ளது.” (SHARED) // “இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து பலரும் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு எத்தனை பேர் என்பது துல்லியமாக சொல்ல இன்னும் சில ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. ஒவ்வாரு ஆண்டும், தெற்காசிய அளவில் சர்வதேச எல்லை பகுதியில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் இவ்வாறு கடத்தப்படுகின்றனர். இதில் குறிப்பாக 75 சதவீதம் பெண்களே.
கடத்தப்பட்டு விற்கப்படுபவர்களில் 50 சதவீதத்தினர் தொழிலாளர்களாக்கும் நோக்கில் விற்கப்படுகின்றனர். தெற்காசிய நாடுகளில் கிராமப்புற பகுதியினரே இது போன்ற இலக்குக்கு ஆளாகின்றனர்.” இப்படி நாட்டில் பல பெண்களின் கதையை கேற்கும் பொழுது கண்களிலும் இதயத்திலும் ரத்தக் கண்ணீர் வந்துவிடுகிறது . சிறுவயதில் தன்னுடைய சித்தி வீட்டிற்க்கு சென்ற பெண்ணை காரில் வந்த ஒரு கும்பல் கடத்தி ஒரு விபசச்சார விடுதியில் விற்று , அங்கு பல கயவர்களால் வன்புணர்வுக்கு உள்ளாக்க பட்டு , உடம்பில் சூடு வாங்க பட்டு , தப்பிக்க போராடினால் பெண் உறுப்பில் மிளகாய் பொடியை கொட்டி கொடூரத்தின் உச்சத்தை அடையும் வரை பலரால் துன்புறுத்த பட்டிருக்கிறாள் . 12 வயதில் கடத்தப்பட்ட இந்த பெண் பன்னிரண்டு வருடத்தில் 600 க்கு மேற்பட்டோரால் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு அதிலும் பலமுறை கும்பலாக வந்த காமுக வெறியன்களால் துன்புறுத்பட்டு சிகரெட் சூடு போன்ற கொடுமைகளை சித்திரவதைகளையும் அனுபவித்து .
25 வயதில் இன்னொரு இடத்திற்கு மாற்றப்பட்டாள் . அங்கிருந்து வேறொரு விபச்சார கும்பலில் 58 வயது நிரம்பிய ஒரு கெழட்டு காமுகன் ஒருவனுக்கு திருமணம் ஆக்கி வைக்கபட்டால். இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தாள் இரண்டும் பெண் குழந்தைகள் . மூன்று வருடத்தில் அந்த கிழவன் இறக்க மீண்டும் அந்த கெழட்டு காமுகனின் உறவினர்களால் கட்டாய வன்புணர்விற்கு உள்ளாக்கபட்டு இருக்கிறாள் . தனது முப்பதாவது வயதில் அங்கிருந்து தப்பித்த இவளை குழந்தைகளோடு வேறொரு கும்பல் கடத்தி மீண்டும் விபச்சார தொழிலில் இறக்கி இவளை அடிமை வேலைக்காகவும் பயன்படுத்தி கொண்டு இருந்து , ஒன்பது வருடங்கள் போராடி தற்போது அங்கிருந்து இவளும் இவளுடைய இரண்டாவது மகளும் தப்பித்து உள்ளனர் .. . முதல் மகள் சிறுவதிலேயே மது பாட்டிலை சொருகி காமுகர்களால் சாகடிக்க பட்டாள் . இப்படி பல கொடுமையான மனதை உருக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன .
கூட்டு பலாத்காரம் , கொடூரர்களின் சித்திரவதை , சிகரெட் சூடு ன்னு கொடுமைக்கு மேல் கொடுமைகளை அனுபவித்த பெண் சொல்லியது “எனது உடல் தீ காயங்களினால் மட்டுமே சுடப்படவில்லை மனதும் சுடப்பட்டு காயமடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்” . ஒரு வாரத்ரிக்கு முன்பு தான் நம் இந்திய நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்கள் , மாவட்டங்கள் பற்றிய தகவல் வந்தது என்னத்த சொல்ல . :(
இதுபோன்ற வந்துள்ளன திரைப்படங்கள் அனைத்துமே . உண்மை கதைகளின் தொகுப்பை மையபடுத்தியவாக இருக்கும் . இதுவும் உண்மை கதைதான் நாவலை மையபடுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் . பல உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்று இருக்கிறது . நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டும் . படம் முழுக்கு நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே இந்தியர்கள் தான் ஆனால் ஆங்கில இயக்குனர் என்பதால் அனைவருமே ஆங்கிலத்திலே பேசிகொள்வார்கள் . இணையத்தில் தேடி நாவலை கொஞ்சம் படித்தேன் . முழு புத்தகமும் வாங்க தான் முடியும் . நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் . பார்த்துவிட்டு வாருங்கள் திரைப்படத்தை பற்றி நிறைய பேசலாம் .
நன்றி
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment