Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

IP MAN (2008) சண்டை கலையின் சிறந்த YIP MAN வாழ்க்கை சரித்திரம்

பொதுவாக ஒருவருடைய வாழ்க்கை சரித்திரத்தை ...கதையில்  கொண்டு வருவது மிக கடினம், அவரை  மாறே தோற்றமும் அந்த திறமையும் இவரிடத்தில் முழுமையாக வெளிப்பட வேண்டும் ..
 .






யார் இந்த YIP MAN ???
தற்காப்பு கலையான விங் சங் என்ற கலையில் இவர் மிகவும் தேர்ச்சி பெற்றவர்  ,அதுமட்டும் இல்லமால் புரூஸ் லியின் ஆசிரியரும் மான இவர் சிறந்த தற்காப்பு கலை வல்லுநர் ...
 இவரின்கதைய கொண்டு எடுக்க பட்ட மூன்று படங்களும் மிகவும் அட்டகாசமான திரைப்படங்கள்  ..கட்டயாம் அனைவரும் பார்க்க வேண்டிய லிஸ்ட் ல்  சேர்த்து   வைத்து  கொள்ளவும் .



சிறப்பாக சீன நாட்டில் கதை தொடங்குகிறது .. 
இந்த படத்தோட மைய கதை என்னன்னா ?இவருடைய கலையில் சிறந்து விளங்கும் இவர் ,தனது மனைவி மற்றும் தன்னுடைய மகனுடன் வாழ்ந்து வருகிறார் ,இவரை போராடி வெல்வது மிகவும் கடினம் . பல  வெற்றிகளை  கண்டிருக்கும்  ஒருவர்  இவருடன்  மோத  நினைக்கிறார் , வம்பிற்கு  இழுக்கிறார் .

கடைசி வரை இவர் அதற்க்கு ஒத்துகொள்ள வில்லை இருந்தாலும்  ஒரு  சந்தர்பத்தில்கடைசியாக இவர் அதில் கலந்துகொண்டார் ,,
பிறகு என்ன ஆனது என்பது மீதி கதை ,  என்னுடைய  வாழ்வில்  என்னால்  மறக்கமுடியாத  அனுபவத்தை  தந்த  படமிது எப்போது  போட்டாலும்  பார்த்து  கொண்டே  இருப்பேன் .சண்டை காட்சிகள்  பிரம்மிக்க வைக்கிறது , புருஸ் லீ  ஜாக்கி  வரிசையில்  டோன்னி  எயின் என்னை  கவர்ந்துவிட்டார்  ,படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை  ஓயவே  ஓயாது நம்ளா  நிறுத்தி  வைக்கலாம்  என்றாலும்  முடியாது ...
இதனை விட இரண்டாவது பாகம் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டது .... அது பற்றி  பதிவில்  விரைவில்  சந்திக்கலாம் 


தமிழில் குரு என்று மொழிமாற்றம் செய்து  வெளிவந்தது ,அப்ப பார்க்க தவறியிருந்தால் இப்போது  இணையத்தில்  இருக்கிறது  பார்த்து விடுங்கள் ...



நன்றி

#சிவஷங்கர் 
















0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger