ச்சை , கருமம் , அய்யய்ய , யுவ்வே , த்து , ங்கே என்பவர்கள் அப்படியே கடந்து விடுங்கள் உங்களுக்கான பதிவில்லை .
ஓரினசேர்க்கை நம் நாட்டிற்க்கு எதிரானது , நம் பாரம்பரியம் , நம் கலாச்சாரம் , ஒழுக்கம், சமுக நெறிமுறை அனைத்திற்கும் முரண்பாடானது , பண்பாட்டு பழக்கவழக்கத்திற்கு முற்றிலும் எதிரானது , இது ஒருவிதமான மன நோய் , மிக கேவலமான செயல், அருவெறுக்க தக்கவை , என எந்த அளவிற்கு எதிர்ப்புகள் இருந்ததோ அதே அளவுக்கு இதற்க்கு ஆதரவும் இருந்தது . இந்திய நாட்டில் மிகவும் பாதுகாப்பான :/ "டெல்லி" உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது , ஓரின சேர்க்கை தொடர்பான வழக்கு , ஒரு பக்கம் ஒருவரை ஒருவர் மனம் ஒத்துப்போகி நடக்கின்ற செயல் என்றும், இது ஒருவிதமான காதல் கட்டமைப்பு என்றும் வார்த்தைகளால் சொல்ல முடியாத சுய அன்பு என்றும் அழுத்தமாக பதிவு செய்ய பட்டது . மற்றொரு பக்கம் வெறித்தனமான கட்டயாத்தின் பேரில் . துன்புறுத்தலுக்கு உள்ளாக்க பட்டு உடல் உறுப்புக்களுக்கு எதிரான இந்த ஓரின சேர்க்கைக்கு அடிமையாக்க படுகிறார்கள் என்றும் , இந்த கேடுகெட்ட ஒழுக்க தன்மையற்ற செயலை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது என்றது . பின்னர் இது பற்றிய அத்தனை வழக்குகளையும் விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பான அனைத்து விசாரணையும் நடந்தது , நம் நாட்டு கட்டமைப்பு சூழலின் படி கடும் எதிர்ப்புக்கள் கிளம்ப ஆரம்பித்தன .. பல மனுக்கள் எதிராக வந்து குமிந்தன .
உலகளவில் மக்கள் மத்தியில் அதிகமாக பேசபடும் நம் இந்திய நாட்டில். கலாச்சாரத்திர்க்கு எதிரான , இயற்க்கைக்கு மாறான இந்த ஓரினச்சேர்க்கை அனுமதிக்க கூடாது என்று பலதரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பின . ஒரு அறைக்குள் நடக்கும் செயல் , அவரவர் விருப்பத்தை பொருத்தது .. ஒத்த பாலின காதலை அவர்களின் உணர்வுகளின் மூலம் வெளிபடுத்துவது குற்றமில்லை என தீர்ப்பு அளித்தது . உச்சநீதி மன்றத்தில் தொடக்க காலத்தில் இருந்தே கடும் பல எதிர்ப்புக்கள் நடந்து வந்தன. இந்த ஓரின சேர்க்கை குற்றமாகும் எனவும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி பல பிரிவுகளின் கீழ் அவர்களின் மீது வழக்கு சுமத்தலாம் என்றானது . அது மட்டும் இல்லாமல் , கே மற்றும் லெஸ்பியன் மூலம் வரக்கூடிய பல நோய்களை பற்றியும் அது இன்னும் அதிகரிக்கும் என்பதனையும் லிஸ்ட் மேல் லிஸ்ட் எடுத்து வெளிவிட்டது .
இந்த தீய பழக்கத்திற்கு " உறுப்பு நுழைப்பு " என்ற சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் என்றானது , பெண்ணோ , ஆணோ , திருநங்கையோ , அல்லது உயிரினங்களோ யாராக இருந்தாலும் இயற்க்கைக்கு எதிராக முரண்பாடாக செயல்படுபவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்றானது (ஆமா எத்தன விலங்குகள் இப்ப ஜெயில் ல கைதிகளா இருக்காங்க ) நிறைய இடங்களில் போராட்டம் தொடர்ந்தது , இதுவும் இயற்க்கை தான் இரு பாலின விலங்கு அல்லாத கூட்டத்தில் ஒரு பாலின உயிரினங்கள் காலங்காலமாக இந்த ஓரின சேர்க்கை நடந்துவருகிறது , இதனை எப்படி இயற்கைக்கு மாறானது என்று குறிப்பிடலாம் என்று கிளம்பியது . பிறகு தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு மூலம் இரு மனதும் தனிமையில் நான்கு மூலைக்குள் நடப்பது தவறில்லை இருந்தாலும் கட்டாயத்தின் பேரிலோ அல்லது வயது வரம்பு பதின்ம சிரார்களுக்கோ நேர்ந்தால் , அந்த 377 சட்டத்தின் மூலம் தண்டனை நிர்ணயிக்கக் படும் என்றானது . ஆக மொத்தத்தில் அப்போது இரு பக்கமும் தலையும் காலும் புரியாம என்னன்னெமோ தீர்ப்பு வந்துருக்கு . அலசினால் கிண்டிய குப்பையை முதலிருந்து கிளற வேண்டும் போல .. "ஆடு திருடு போகல நான் கனவு கண்டேன் " கதைதான் .
இந்த வழக்கு பற்றி எதுக்காக சொன்னே ன்னா நீங்க தலையும் காலும் புரியாம தடுமாற குடாதுள்ள அதான் . ஓரின சேர்க்கை என்ன என்று தெரியாமலே சிலர் பேசி விடுகிறார்கள் , அப்படின்னா என்ன? ன்னு கேட்டா பதில் வருவதில்லை மாறாக ஏற்பு இல்லாத வார்த்தைகளை சொல்லி கடப்பதே வேலையா போயிற்று . அப்படின்னா என்ன ? என்ன கேக்க பாக்குறீங்களா கூகிள் பண்ணுங்க . அப்புறம் இந்தில ஒரு சில திரைப்படங்கள் இதனை பற்றி பேசி இருக்கின்றன. அது மூலமாகவும் சில உண்மை கதைகள் வெளிபட்டுள்ளன .
லேடிஸ் அன்ட் ஜென்ட்டில் வுமன் டாக்குமென்ட்டரி ஓரினச் சேர்க்கை , அவர்களின் வாழ்க்கை , காதல் , உயிர் இழப்பு பற்றி பேச போகிருது பொறுந்திருந்து பார்ப்போம் . .... தமிழ்நாட்டில் நியூஸ் பேப்பரில் ஓரின சேர்க்கை காரணத்தினால் திருமணம் ஆகும் முன்னரே மணமகன் கொலை , அல்லது மணமகள் தற்கொலை , ஓரின சேர்க்கை ஜோடி தீடீர் தற்கொலை , ன்னு பல செய்திகள் கேட்ட நியாபகம் . ஏன் என்ன எதுக்கு ன்னு எனக்குமே தெரியாது .
லேடீஸ் அன்ட் ஜென்ட்டில் வுமன் டாக்குமென்ட்டரி மூலம் வெளிப்படும் செய்தி அது எது குறித்து பேசகிறது என்பது அதனை பார்த்த பிறகுதான் தெரிய வரும் பார்க்கலாம் . தற்போது அதற்க்கான ஒரு ஆல்பம் இன்றோவை கீழுள்ள இணைப்பின் மூலம் காணலாம் ..... நாளை முழு ஆல்பம் சாங் வருகிறது . அதன் மூலம் தற்கொலைக்கு முயற்சிக்கும் ஓரின சேர்க்கையாளர்களை தற்கொலை பாதையில் இருந்து மீட்டெடுக்கும் நம்பிக்கை இருக்கிறது என்கிறார் இயக்குனர்
https://www.youtube.com/watch?v=ChN5LFIq7oo
நன்றி
#சிவஷங்கர்