Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

Flocking (2015) BASED ON A TRUE EVENTS



நாம் வாழும் உலகில் "பெண்களுக்கு பாதுகாப்பு" இருக்கு ன்னு நமக்கு நாமே வேஷம் போட்டுகொண்டு திரியுறோம் . ஒவ்வொரு நாளும் எதோ ஒரு மூலையில் பிரச்னை மேல் பிரச்னை நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது . இப்படிப்பட்ட ஆண் ஆதிக்க சமுகத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது மிக பெரிய பிரச்னையாக உள்ளது , கடத்தல் , கற்பழிப்பு, கொலை ன்னு அவர்கள் மேல் அனைத்து வெறி தாக்குதலும் நிகழ்த்த படுகிறது . பாதிக்க பட்ட ஒரு பெண் , தன்னை ஒருவன் கற்பழித்து விட்டான் என்று கூறுகையில் இந்த சமூகம் அதற்கான தீர்வை எப்படி வழங்கி இருக்கிறது என்பதை பார்த்தால் .தற்போதைய சமூக நடப்பில் நடந்தது என்ன? என ஆராய்ந்து நேர்மையான தீர்வு வந்தது ஒரு சிலருக்கே .




தனக்கு நேர்ந்த கொடுமைகள் , நிகழ்த்த பட்ட அவலம் என முழு உண்மையே சொன்னாலும் அவர்களின் வார்த்தைக்கு அங்கு மதிப்பு இல்லை, என்று நிகாரித்து ஆணையிடும்பொழுது தனிமையின் மரணத்தை தான் தீர்வாக கொடுக்கும் . அப்படிப்பட்ட சமுகம் தான் இது தனிப்பட்ட அல்லது ஒருவரின் சம்பந்தமில்லாத மீது இழைத்துள்ள அவலங்கள் ஒவ்வொரு நொடியும் வாழ்வின் வெறுப்பை உணர செய்து விடும் . கொடுமை அனுபவித்தவனுக்கே இழப்பு .

ஒரு ஆண் ஆதிக்க உலகில், ஒரு பெண் அந்த சமூகத்தோடு இணைந்து ஒத்து வாழ்ந்தால் மட்டுமே வாழ முடியும் என்ற சூழல் உருவாகி விட்டது . தற்போதைய சூழலில் இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை .. என்று எளிதில் கடந்து செல்லுகின்றனர் . அவர்கள் மேல் திணிக்கப்படும் குற்றங்கள் , வன்முறைகள் என எடுத்து பேச முன் வருவதும் இல்லை .. எதுவுமே மதிக்கபடாமல் மேலாதிக்க பாலினம் (அதாவது ஆண்கள்) அடக்குமுறை ஆதிக்கத்தை இன்னமும் நிகழ்த்தி வருகிறது .



"FLOCKEN" 2015


படத்தின் தொடக்கத்தில் அனைவரும் ஒரு கிறிஸ்தவ திருமணத்தில் சந்திக்கின்றனர் , அனைவருமே உறவினர்கள் நண்பர்கள் தான் , மகிழ்ச்சியாக முடிந்த திருமணத்தில் , நண்பர்கள் ஒருவனின் மகன் (அலெக்ஸ்) தன்னை (ஜெனிபர்) கற்பழித்து விட்டான் என்று சொல்லகிறாள் , இரு குடும்பமும் விசாரித்து பிரச்னை கோர்ட் க்கு எடுத்து செல்ல படுகிறது . சிறுவனுக்கு பதினைந்து வயது . விசாரணையில் ஒவ்வொருவரின் ஒப்புதலும் கேட்டு நீதி மன்றத்தில் கேள்விகளின் மூலம் தெளிவு படுத்த படுகிறது . ஒரு தரப்பில் அவன் எந்த தவறும் செய்ய வில்லை என்றும் , மற்றொரு தரப்பில் அவன்தான் செய்தான் என்றும் பேச படுகிறது .

சமீபத்தில் பார்த்த பிங்க்(ஹிந்தி) படத்தில் கேற்க பட்டிருக்கும் கேள்விகள் போலவே இங்கும் நிறைய கேள்விகள் அனைவரின் முன்னிலையிலும் கேற்க படுகிறது . ஒரு மாறுதல் என்னவென்றால் இங்கு அந்த சிறுவன் "NO" சொல்லுவான் . "HE SAID NO" , இதுவரை நம் சமூகத்தில் நிகழாத ஒரு பிரச்னையை இவள் சொல்கிறாள் . என அந்த ஒட்டுமொத்த நண்பர்களும் , அவர்களின் குடும்பத்தை எதிர்கின்றனர். அந்த சமூகத்தில் அப்பாவி சிறுவனான இவன் மீது தேவை இல்லாத பழி சுமைகள் விழுகின்றன, இவள் சொல்லும் ஏதும் நம்பும் படி இல்லை என்றும் , பல எதிர்ப்புக்கள் கிளம்புகின்றன .. யார் தான் குற்றவாளி ? நடந்த வை என்ன ??? என்பதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும் .


இந்த திரைப்படம் ஒரு சில திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டும் , சில விருதுகளை வென்றும் இருக்கிறது 2015 ஆம் வருடம் சென்னை திரைப்பட விழாவில் திரையிட பட்டுள்ளது . அவர்களின் சமூகத்தில் மட்டும் அல்ல எல்லா சமூகத்திலும் பேச படவேண்டிய ஒரு கதை தான் படம் , தாரளமாக ஒருமுறை பார்க்கலாம் நேரம் கிடைக்கும் பொழுது பார்த்துவிட்டு வாருங்கள் , படத்தை பற்றி பேசலாம் . இதுபோன்ற நம் நாட்டில் சொல்ல படாத நிறைய கதைகள் உள்ளன , படமாக வருவதில்லை அப்படியே வந்தாலும் நிராகரிப்பு தான் மற்றும் பெண், அவர்களை பற்றிய படங்கள் அவர்களின் பாதுகாப்பு பற்றிய படங்கள் என்ன என்ன என தமிழில் லிஸ்ட் எடுத்தால் விரல் விட்டு எண்ணி விடலாம் ... திரைப்படங்கள் மூலமாவது நாட்டில் நடக்கும் கொடுமைகளை சுட்டி காட்டி அதற்கான தீர்வுகளை வழிவகுத்து காட்டுவீங்க என்று பார்த்தல் .. கடுப்பு வருகிற மாதிரி படங்களை கொடுத்து வெறுப்பை வளர்க்கிறீர்கள் ..

நன்றி

#சிவஷங்கர்







0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger