NINE DEAD (2010)
ஒருவரை ஒருவர் தொடர்பில்லாத ஒரு ஒன்பது பேரை ஒரு ரூமுக்குள் அடைத்து வைத்து . நீங்க ஏன் இங்க இருகிறீங்க ன்னு ஒரு கேள்வியோ கேட்டுட்டு வில்லன் போய்டுறார் . சும்மா போக வில்லை ஒவ்வொரு பத்து நிமிசத்துக்கு க்கும் உள்ள வந்து நீங்க ஏன் இங்க இருக்கீங்க ன்னு கேக்கிறார் பதில் இல்லை என்றால் பொட்டு பொட்டு ன்னு போட்டு தள்ளுறார் (ஒவ்வொரு பத்து நிமிசத்துக்கும் ஒவ்வொருத்தர் ) . ஆக்சுவல் ஹா இவங்க எல்லாரும் யாரு ? அந்த ஒன்பது பேர் யார் ? ஏன் இங்க அடைக்க பட்டு இருக்காங்க ? அந்த முகமூடி மனிதர் யாரு ? ஏன் இப்படி ன்னு எழும் கேள்விகளுக்கு படம் பதிலை சொல்லுகிறது ..
ஆக்சுவல் நான் இந்த படம் பாக்க ஒரே காரணம் சிங்கிள் ரூம் த்ரில்லர் என்பதால் . என்னதான் ஊரு ஊரா பரபரப்பு த்ரில்லர் படங்கள் கொட்டி கிடந்தாலும் , சிலர் சிங்கிள் ரூம் த்ரில்லர் அல்லது சிங்கிள் கேரக்டர் த்ரில்லர் படங்களை தேடி பார்ப்பது ஒரு வித சந்தோசம் தான் .. இந்த கான்செப்ட் இல் அட்டகாசமான சில படங்கள் வந்துள்ளன அந்த வகையில் பார்க்கையில் இந்த படம் ஒரு தபா பாக்க கூடிய படமே .
சோ நேரம் இருந்தா ஒரு முறை பாக்கலாம் , அதுவும் நீங்க சிங்கிள் ரூம் த்ரில்லர் பாப்பேன் என்றால் மட்டுமே . ஏன்னா ஆரம்பத்தில் சூடு பிடித்த கதை போக போக ஜவ்வா இழுக்குது ன்னு பீல் பண்ணுவீங்க நானும் பண்ணுனேன் அதான் சொல்றேன் . இந்த வில்லன் போட்டு இருக்கிற கெட்டப் நல்லா இருக்கு ல . எதோ ஒரு தமிழ் படத்துல இருந்து தான் சுட்டு இருக்காங்க , ஹாலிவுட் திருடன்ஸ் ..
நன்றி
0 உங்கள் கருத்து:
Post a Comment