Lakshmi 2014 Hindi (Based on a True Events)
இந்தியாவில் சிறார் கடத்தல்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன , பன்னிரண்டு பதிமூன்று வயது நிரம்பிய குழந்தைகளை கடத்தி வெவ்வேறு பகுதிகளில் விற்க படுகின்றன . நாம் வாழும் இந்திய நாடு தான் அதற்க்கான மையமாகவே (HUB) இருந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது .
கடத்தப்பட்ட பெண்களில் அதிக சதவிகிதம் பேர் பாலியல் தொழிலில் உற்படுத்தி அவர்களின் வாழ்வில் ஒரு பகுதியவே சீரழித்து விடுகின்றன , இதில் அதிகம் பாதிகப்பட்டோர் பழங்குடி இனத்தை சார்ந்த ஏழ்மையானவர்களே. நானும் நிறைய முகநூல் பதிவுகளில் பார்த்து இருக்கிறேன், பெண் கொடுமைகள் , பாலியல் துன்புறுத்தல்களில் நாம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறோம் நமக்கு முன்பு நான்கு நாடுகள் இருக்கின்றன . என பெருமை பீற்றி கொள்ளும் சில பதிவுகளை பார்த்து இருக்கிறேன் . அவர்களோடு ஒப்பிடுகையில் நம் பெண்கள் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள் என மார் தட்டும் கோழைகள் நாம் .
தமிழ்நாட்டில் மட்டும் அல்ல எத்தனையோ நாடுகளில் தங்களின் வாழ்வாதாரம் இனி வரும் பிரச்சனை சூழலினாலும் , நடந்தவை எவையும் வெளிப்படை அடையாமலும் , தமக்கு நேர்ந்த கொடுமைகள் , பாலியல் வன்முறைகள் , கொலைகள் என எதுவுமே அறியப்படமாலும் மறைக்க பட்டும் இருக்கின்றன .. இந்த புள்ளி விவர பட்டியலை வைத்துகொண்டு நமக்கு நாமே , நம் நாட்டிற்கு மகுடம் சூட்டி கொள்வதை முதலில் நிறுத்திக்கொள்ளுங்கள். கொண்டாடும் இடத்தில் நாம் இல்லை . சமீபத்தில் நடந்த சிறுமிகள் , கர்பிணி பெண்ணின் மரணங்கள் எல்லாம் மறந்துவிட்டதா என்ன ?
எப்போவாது ஒரு நாள் இந்த பட்டியலில் நாம் கடைசி இடத்தில் வருவோம் . எப்போது வருகிறதோ அப்போது கொண்டாடுங்கள் தலையில் தூக்கி வைத்து. . பொங்குவதில் அர்த்தமே இல்லை எல்லா ஆண்களையும் அப்படி சொல்லாதிங்க ன்னு கிளம்ப ஆரம்பிப்பாங்க சிலர் , நடந்த பாலியல் வன்முறை கொலைகள் லாம் நினச்சி வெக்கப்பட்டு தலைகுனித்து அவமானப் பட வேண்டும் நாம் .. என்னுடைய நகரத்தில் பெண்களுக்கு பிரச்சனைகளே இல்லை என்று எவனுமே பேச முடியாது அப்படி பட்ட சூழல் இது .
மகளிர் தினம் மகளிர் தினம் ன்னு வாழ்த்து சொல்லுறவன் அதே மகளிர் தினத்தன்று கற்பழித்து இறந்த பெண்ணை பற்றி பேசி இருகீர்களா என்ன .. பெண்ணியம் பற்றி பேச, பெண்களை பற்றி பேச, அவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு .. நான் நல்லவன் என யாருமே பேச முன் வராதீர்கள் . பெண்ணியம் பற்றி பேச பெண்களுக்கு மட்டுமே முழு உரிமை உண்டு . நீங்கள் பேசும் பெண்ணியம் பற்றி தெரியாதா என்ன . ?
( பாலியல் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கை கொண்ட மாநிலமாக ஆந்திரா திகழ்கிறது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம் பக்கத்தில்சில தகவல்கள். அதன் விவரம் :
2009-ம் ஆண்டு ஆய்வின்படி, இந்தியாவில் 8 லட்சத்து 60 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்.மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புகளின் தகவலின்படி, பதிவு செய்துள்ள பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 96 ஆயிரம் பேர். பதிவு செய்யாத பாலியல் தொழிலாளர்கள் 19 சதவீதம் பேர்.
இதில், அதிக எண்ணிக்கையில் பாலியல் தொழிலாளர்களை கொண்ட மாநிலமாக ஆந்திரா திகழ்கிறது. இங்கு, 1 லட்சத்து 56 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். டெல்லி 61 ஆயிரம் பாலியல் தொழிலாளர்களுடன் 2வது இடத்தில் உள்ளது.கர்நாடகம் 3வது இடத்திலும், மகாராஷ்டிரா 4வது இடத்திலும் உள்ளன. SHARED )
இப்படி கணக்கு பட்டியலை மட்டுமே பார்க்காமல் அவர்களுக்காக என்றாவது குரல் கொடுத்து இருகீர்களா இனியாவது பாப்போம் என்று ஆறுதல் சொல்லிக்கொண்டு நகர்ந்தால் இன்னொரு கேடுகெட்ட விசியம் பண்றாங்க MEME ங்கற பேருல .. MEME போடும் நண்பர்களே . சமீபத்தில் வந்த மாநகரம் படத்தில் ஒரு வசனம் வரும் சார்லி சார் பேசுவார் , நம்ப உதவி இருக்கோமா சார் ? அவங்களிடம் எதிர்பார்கிறதுக்கு இந்த MEME மட்டும் கிட்ட தட்ட என் லிஸ்ட் ல பாதி பேரு போட்டு வச்சு இருக்காங்க .. இந்த வசனம், MEME போடுவதை விட்டு விட்டு அதற்காக பேச யாரும் முன் வருவதில்லை நண்பர்களே .. இவ்ளோ தூரம் சொல்றியே நீ வருவியா ன்னு கேள்வி கேக்க வேணா நிறைய பேரு தயாரா இருப்பாங்க ஆனா யாருமே முன் வருவதில்லை மிக மிக கசப்பான கேவலமான உண்மையும் கூட .. இங்குட்டு பெண்கள் பெண்கள் பேசுறவன் ஒரு போட்டோ வோ அல்லது வீடியோ வா காட்டினால் பார்க்கமலா போய் விடுவான் . அப்படி மாறிக்கொண்டு இருக்கிறது நமது சமுகம் .
பதினான்கு வயதுடைய லக்ஷ்மி . பாலியல் தொழில் செய்யும் கும்பலில் சிக்கி கொண்டு அங்கிருந்து தப்பித்து அந்த பிரச்னையில் முதிலில் எதிர்த்து வழக்கு தொடுத்ததை பற்றி இந்த திரைப்படம் பேசுகிறது , உண்மை சம்பவத்தின் அடிப்படையை கொண்டு எடுக்க பட்ட இந்த திரைப்படத்தில் கண்ணீர் வர வைக்க கூடிய காட்சிகளோடு சேர்த்து மனதையும் உருக்குகின்றன . இப்படி மாட்டிகொண்டு பல கொடுமைகள் கண்டு அங்கிருந்து தப்பித்து வந்து தன்னுடைய பெற்றோர்களால் யே வெறுக்க படுகின்றன ,
செக்ஸ் பிரச்சனை நாட்டில் மிக முக்கிய விவகாரமாகும் . அவ்வளவு விரைவில் நீதி மன்றத்தில் தகுந்தார் க்கு தண்டனைகள் வாங்கி தந்துவிட முடியாது , தகுத்த சாட்சியங்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும் . அதுவும் உன்னை எங்கு எங்கு தொட்டனர் , என ஆரம்பம் முதல் இறுதி வரை சொல்லி நிரூபிக்க வேண்டும் .. ஒரு ஆர்டிகல்லில் படித்த நியாபகம் பாலியல் குற்றங்கள் குறித்த நீதிமன்ற விவகாரங்களில் அனைத்தும் பெண்களே நியமிக்க வேண்டும் . நீதிபதி முதல் உள்ளே உள்ள டைபிஸ்ட் வரை என்று ,, பெண்களுக்கென தனி மகளிர் காவல் நிலையம் தொடங்க பட்டதே அதே கதி தான் அதற்கும் நிலவியது / மாற்றம் ஒன்று தான் மாறாதது மாறாதது ன்னு எதை மாற்றினாலும் தவறு செய்பவன் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறான் , மற்றவர்களையும் தூண்டி கொண்டே தான் இருக்கிறான் .
நமது நாட்டில் இதுதான் பிரச்னையா வேற பிரச்சினையே இல்லையான்னு சில மூட நம்பிக்கை கொண்ட முட்டாள்கள் உள்ளன , விரல் விட்டு என்னும் அளவு இல்லை பல பிரச்னைகள் உள்ளன அதிகம் யாருக்கு பிரச்னை ன்னு அவன் அவன் உள் மனசுக்கு தெரியும் ...
நம் மண்டைக்கு புரியும் படி சொன்னால் இரண்டு விதமான பிரச்னைகள்
1.ஒன்னு மாற்ற பட வேண்டிய பிரச்னைகள்
2.இனொன்னு திருத்த பட வேண்டிய பிரச்னைகள்
முடிஞ்சா மாத்தி காட்டு இல்லைனா உங்களையே திருத்தி காட்டுங்க ,
வருஷம் எத்தனை பேரு பாதிக்க பட்டாலும் , பெண்களுக்கு சண்டை கலைகள் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் , ஏதாவது ஸ்ப்ரே க்ரே வாங்கி பைல வச்சுகிட்டே இருக்கோணும் , குட் டச் பேடு டச் தெரிந்து இருக்க வேண்டும் , கோச்சிங் கிளாஸ் போகணும் ன்னு வழக்கமா சொல்வதையே சொல்லி விட்டு கிளம்புங்கள் .
எவ்ளோ கொடுமைகள் நடந்தாலும் எளிதில் கடந்து விடுவது தானே நம் வழக்கம் ஆயிற்று . இதை பற்றி பேசினால் எனக்கும் உங்களுக்கும் தாம் வாதம் அதிகம் ஆகும் .இதில் தீர்வை தேட வேண்டாம் முடிந்தால் தேட வேண்டிய இடத்தில் தேடுங்கள்
திரைப்படமாக மக்களுக்கு எப்படியாவது கொண்டு சேர்த்து விடனும் ன்னு சிலர் திரைப்படம் எடுத்தாலும் அவன் காசு பாக்க எடுக்குறான் . ன்னு சொல்லுறாங்க .. இதே போல இன்னொரு திரைப்படம் பார்த்து அதில் இருந்து வெளிய வரமுடியாமல் இருந்திருக்கிறேன் sold (2016) நேரம் கிடைக்கும் பொழுது இரண்டு பாடங்களையு பாருகள் .. பேசுவோம் .. நாம் பேசி என்ன பிரோஜனம் ஆக போகுது ன்னு தெரில பேச வேண்டிய இடங்களில் ஊமையாகாமல் பேச வேண்டும் அதற்க்கான தூண்டுதல் இந்த படம் பார்தபதினால் கூட சிலர் மனதில் வரலாம் .
நன்றி
0 உங்கள் கருத்து:
Post a Comment