Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

ஓரின சேர்க்கை


ச்சை , கருமம் , அய்யய்ய  , யுவ்வே , த்து , ங்கே  என்பவர்கள்  அப்படியே  கடந்து  விடுங்கள்  உங்களுக்கான  பதிவில்லை . 




ஓரினசேர்க்கை நம்  நாட்டிற்க்கு  எதிரானது , நம்  பாரம்பரியம் , நம்   கலாச்சாரம்  , ஒழுக்கம்,  சமுக  நெறிமுறை அனைத்திற்கும்  முரண்பாடானது  , பண்பாட்டு  பழக்கவழக்கத்திற்கு முற்றிலும்   எதிரானது , இது  ஒருவிதமான  மன  நோய் ,  மிக  கேவலமான  செயல், அருவெறுக்க  தக்கவை  , என எந்த  அளவிற்கு  எதிர்ப்புகள்  இருந்ததோ  அதே  அளவுக்கு இதற்க்கு ஆதரவும்  இருந்தது . இந்திய  நாட்டில்  மிகவும்  பாதுகாப்பான :/  "டெல்லி"  உச்சநீதி  மன்றத்தில்  ஒரு  வழக்கு  தொடரப்பட்டது , ஓரின சேர்க்கை தொடர்பான  வழக்கு , ஒரு பக்கம்   ஒருவரை  ஒருவர்   மனம்  ஒத்துப்போகி  நடக்கின்ற  செயல்  என்றும், இது ஒருவிதமான காதல்  கட்டமைப்பு  என்றும் வார்த்தைகளால் சொல்ல  முடியாத சுய அன்பு  என்றும் அழுத்தமாக  பதிவு  செய்ய  பட்டது . மற்றொரு  பக்கம்   வெறித்தனமான கட்டயாத்தின் பேரில் . துன்புறுத்தலுக்கு   உள்ளாக்க  பட்டு   உடல் உறுப்புக்களுக்கு எதிரான  இந்த  ஓரின சேர்க்கைக்கு   அடிமையாக்க  படுகிறார்கள் என்றும் , இந்த  கேடுகெட்ட  ஒழுக்க  தன்மையற்ற  செயலை ஒரு  போதும் ஏற்று கொள்ள  முடியாது என்றது . பின்னர்  இது  பற்றிய  அத்தனை   வழக்குகளையும்  விசாரித்த  உச்ச நீதிமன்றம் இது  தொடர்பான அனைத்து  விசாரணையும் நடந்தது , நம்  நாட்டு  கட்டமைப்பு  சூழலின்  படி  கடும்  எதிர்ப்புக்கள்  கிளம்ப ஆரம்பித்தன ..  பல  மனுக்கள்  எதிராக  வந்து  குமிந்தன . 


உலகளவில் மக்கள் மத்தியில்  அதிகமாக  பேசபடும்  நம் இந்திய  நாட்டில்.  கலாச்சாரத்திர்க்கு  எதிரான , இயற்க்கைக்கு  மாறான இந்த  ஓரினச்சேர்க்கை அனுமதிக்க  கூடாது  என்று  பலதரப்பினரிடம் இருந்தும்  எதிர்ப்புக்கள்  கிளம்பின . ஒரு  அறைக்குள்  நடக்கும்  செயல் , அவரவர்  விருப்பத்தை  பொருத்தது  .. ஒத்த பாலின காதலை  அவர்களின்  உணர்வுகளின் மூலம்  வெளிபடுத்துவது குற்றமில்லை என   தீர்ப்பு அளித்தது . உச்சநீதி  மன்றத்தில்   தொடக்க  காலத்தில்  இருந்தே  கடும்  பல  எதிர்ப்புக்கள்  நடந்து  வந்தன.  இந்த  ஓரின  சேர்க்கை  குற்றமாகும்  எனவும்  இந்திய  அரசியல்  அமைப்பு  சட்டத்தின்  படி பல   பிரிவுகளின்  கீழ்  அவர்களின்  மீது வழக்கு  சுமத்தலாம்  என்றானது . அது  மட்டும்  இல்லாமல் , கே மற்றும்  லெஸ்பியன் மூலம்  வரக்கூடிய  பல  நோய்களை  பற்றியும்  அது  இன்னும்  அதிகரிக்கும்  என்பதனையும்  லிஸ்ட்  மேல்  லிஸ்ட்  எடுத்து  வெளிவிட்டது . 


இந்த  தீய  பழக்கத்திற்கு  " உறுப்பு நுழைப்பு " என்ற சட்டத்தின்  கீழ் வழக்கு தொடரப்படும்  என்றானது , பெண்ணோ  , ஆணோ , திருநங்கையோ , அல்லது  உயிரினங்களோ யாராக  இருந்தாலும்  இயற்க்கைக்கு  எதிராக  முரண்பாடாக  செயல்படுபவர்கள்  மீது  வழக்கு  தொடர வேண்டும்  என்றானது  (ஆமா எத்தன விலங்குகள் இப்ப ஜெயில் ல  கைதிகளா  இருக்காங்க ) நிறைய  இடங்களில்  போராட்டம்  தொடர்ந்தது , இதுவும்  இயற்க்கை  தான்  இரு  பாலின  விலங்கு  அல்லாத  கூட்டத்தில் ஒரு  பாலின  உயிரினங்கள் காலங்காலமாக இந்த  ஓரின  சேர்க்கை  நடந்துவருகிறது , இதனை  எப்படி  இயற்கைக்கு  மாறானது என்று  குறிப்பிடலாம்  என்று  கிளம்பியது . பிறகு  தொடுக்கப்பட்ட  பொதுநல  வழக்கு  மூலம்  இரு  மனதும்  தனிமையில்  நான்கு  மூலைக்குள்  நடப்பது  தவறில்லை இருந்தாலும்  கட்டாயத்தின்  பேரிலோ  அல்லது  வயது வரம்பு பதின்ம சிரார்களுக்கோ  நேர்ந்தால் , அந்த  377 சட்டத்தின்  மூலம் தண்டனை  நிர்ணயிக்கக்  படும்  என்றானது .  ஆக  மொத்தத்தில் அப்போது  இரு பக்கமும்  தலையும்  காலும்  புரியாம  என்னன்னெமோ  தீர்ப்பு  வந்துருக்கு . அலசினால்  கிண்டிய  குப்பையை  முதலிருந்து  கிளற  வேண்டும்  போல .. "ஆடு  திருடு  போகல  நான்  கனவு  கண்டேன்  " கதைதான்  .


இந்த வழக்கு பற்றி  எதுக்காக சொன்னே ன்னா  நீங்க  தலையும்  காலும்  புரியாம தடுமாற குடாதுள்ள அதான் .   ஓரின  சேர்க்கை  என்ன  என்று  தெரியாமலே  சிலர் பேசி  விடுகிறார்கள்  , அப்படின்னா  என்ன?  ன்னு  கேட்டா பதில்  வருவதில்லை  மாறாக  ஏற்பு  இல்லாத  வார்த்தைகளை  சொல்லி  கடப்பதே  வேலையா  போயிற்று . அப்படின்னா  என்ன ? என்ன  கேக்க பாக்குறீங்களா  கூகிள்  பண்ணுங்க . அப்புறம் இந்தில   ஒரு  சில  திரைப்படங்கள்  இதனை  பற்றி  பேசி  இருக்கின்றன. அது  மூலமாகவும் சில உண்மை  கதைகள்  வெளிபட்டுள்ளன  . 

 லேடிஸ் அன்ட்  ஜென்ட்டில் வுமன்   டாக்குமென்ட்டரி    ஓரினச் சேர்க்கை , அவர்களின்  வாழ்க்கை , காதல் , உயிர்  இழப்பு  பற்றி  பேச  போகிருது  பொறுந்திருந்து  பார்ப்போம் . .... தமிழ்நாட்டில்  நியூஸ்  பேப்பரில் ஓரின சேர்க்கை  காரணத்தினால்  திருமணம் ஆகும்  முன்னரே  மணமகன்  கொலை , அல்லது  மணமகள்  தற்கொலை , ஓரின  சேர்க்கை  ஜோடி  தீடீர்  தற்கொலை , ன்னு  பல  செய்திகள்  கேட்ட  நியாபகம்  . ஏன் என்ன  எதுக்கு  ன்னு  எனக்குமே  தெரியாது .

லேடீஸ் அன்ட் ஜென்ட்டில் வுமன்   டாக்குமென்ட்டரி மூலம்  வெளிப்படும் செய்தி  அது  எது  குறித்து  பேசகிறது  என்பது  அதனை  பார்த்த   பிறகுதான்   தெரிய  வரும்  பார்க்கலாம் . தற்போது அதற்க்கான  ஒரு  ஆல்பம் இன்றோவை  கீழுள்ள  இணைப்பின்  மூலம்  காணலாம் .....  நாளை  முழு  ஆல்பம்  சாங் வருகிறது . அதன்  மூலம்  தற்கொலைக்கு முயற்சிக்கும்  ஓரின  சேர்க்கையாளர்களை தற்கொலை  பாதையில்  இருந்து  மீட்டெடுக்கும்  நம்பிக்கை  இருக்கிறது  என்கிறார்  இயக்குனர்  


https://www.youtube.com/watch?v=ChN5LFIq7oo



நன்றி 

#சிவஷங்கர் 

0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger