MY FAV CHANNEL 1
வணக்கம் நண்பர்களே ..
ஒரு சில தொலைக்காட்சி ப்ரோக்ராம்களை பார்க்கும் பொழுது ஒரே எரிச்சலா இருக்கும் , இதுலாம் ஒரு ப்ரோக்ராம் ன்னு ஒளிபரப்பி மொக்க போட்டுக்கிட்டு இருக்கானுங்க ன்னு . அப்படி நிறைய சேனல்களை கடந்து வந்திருந்த எனக்கு. ஒரு சில மாதங்களாகவே சில சேனல்கள் மீது ஈர்ப்பும் ஆர்வமும் அதிகரித்து கொண்டே வருகிறது . அதற்கு காரணம் அவர்கள் ஒளிபரப்பும் நிகழ்சிகளும் . அடுத்த ஒளிபரப்ப கூடிய நிகழ்சிகளின் எதிர்பார்ப்பும் தான் . "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" போல நான் பெறுகின்ற பயனை பிறரையும் அடைய வைக்கும் நோக்கில் நான் விரும்பி பார்க்கும் ப்ரோக்ராம் களை பற்றி உங்களிடம் நேரம் கிடைக்கும் பொழுது சிறு அறிமுகமாக பகிர்ந்து கொள்ள்ளலாம் ன்னு இதை தொடருகின்றேன் .
அதில் இன்று ஒரு நல்ல ப்ரோக்ராம் பற்றி சொல்லலாம் ன்னு , உலக திரைப்படங்களின் VFX ,MOTION TECHNOLOGY,ANIMATION,MOTION CAPTURE, டெக்னாலஜி யில் கலந்து கட்டி அடிக்கும் முக்கிய திரைப்படங்களின் தகவல்களையும் மேக்கிங் உம் "BREAKDOWN " ஒளிபரப்ப படுகிறது , ஆக்சுவல் ஹா இதுலயும் ரெண்டு மொக்க வந்து மொக்க போட்டுக்கிட்டு தான் இதை தொடருவாங்க. இருந்தாலும் அவங்க கிட்டயும் தகவல் இருக்குள்ள சோ அதனால அந்த மொக்கைகளை மறந்து அரை மணி நேரம் பார்த்து பயனடையுங்கள் இந்த நிகழ்ச்சி கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கலாம் . பிடிக்காமலும் போகலாம் .
இதுமட்டும் இல்லாம இந்த டிவி ல மேலும் நல்ல நிகழ்ச்சி ன்னு என்ன ? என்ன? இருக்குன்னு பார்த்தா "அன்புடன் நான்" அத சொல்லாம் , திரைத்துறையில் கடந்து வந்த பாதை குறித்து திரைப்பிரபலங்கள் , இயக்குனர்கள் பேட்டி , டாப் 10 சாங்க்ஸ் ன்னு ஒரு ப்ரோக்ராம் எல்லா மொழி பாடல்கள்லயும் TRENDING ல இருக்கிற பாடல்களை தேர்வு செய்து ஒளிபரப்புறது தான் , இதுலாம் இல்லாம ட்ரைலருக்கு , டீசருக்கு , சூப்பர் சீன்ஸ் க்கு, காமெடிக்கு , சினிமா தகவலுக்கு , கிசு கிசு , சோசியல் மீடியா TRENDING VIDEOS,சினிமாகாரன் ,பிலிம் காட்டலாமா , சினிமா சினிமா ,திரைவிமர்சனம் ன்னு திரும்புற பக்கம் ஒரு கடைய திறந்து வச்சு இருக்காங்க .. 24 மணி நேரமும் இந்த சேனல் ல செய்திகள் கீழே வார்த்தைகள் ஊடே ஓடிட்டே இருக்கும் , DISH TV ல வருகிறதா ன்னு தெரில ஆனா கேபிள் டிவி ல வரும் இலைன்னா இந்த லிங்க் ல போய் ஆன்லைனே பாக்லாம் . http://www.1yestv.com/index.html
குறிப்பு : என்னதான் நல்ல நல்ல நிகழ்ச்சியை ஷேர் பண்ணலும் நைட் 9 க்கு மேல இந்த சேனலை தொடர வேண்டாம் , காரணம் ADULT பி கிராடு சீரியல் , திரைப்படங்கள் வந்து விடுகின்றன , ஆகையால் ப்ரோக்ராம் SCHEDULE பார்த்துகொண்டு நேரம் பார்த்து தொடரவும் என்று தாழ்மையுடன் குறிப்பிட்டு சொல்லி விடுகிறேன். ஏன்னா பிறகு உன்ன நம்பி தான் பார்த்தேன் . இதுலாம் ஒரு சேனலா ன்னு என்கிட்டே சண்டைக்கு வந்திராதிங்க .. அடுத்த பதிவுல வேறொரு சேனல் வேறொரு தகவலோடு வரேன் .
ப்ரோமோ வீடியோ https://www.youtube.com/watch?v=lSkP944kGQE
0 உங்கள் கருத்து:
Post a Comment