Ozhivudivasathe Kali (2015)
Ozhivudivasathe Kali இனிய நாளில் ஒரு விளையாட்டு என்பதே படத்தின் பெயருக்கான விளக்கம் என்று நினைக்கின்றேன் . மலையாள எழுத்துலகில் சிறந்த எழுத்தாளரின் சிறுகதை தான் இந்த Ozhivudivasathe Kali , அதே பெயரில் வெளிவந்து பல பிரதிகள் விற்று அதிகம் பேசப்பட்ட ஒரு சிறுகதயைத்தான் திரைப்படமாக்கி இருக்கிறார்கள் . இந்த திரைப்படத்தை சனல் சசிகுமார் இயக்கி இருக்கிறார் . மொத்தமாகவே எழுபது ஷாட்கள் மட்டும் கொண்டு எடுக்கப்பட்ட அதே சமயத்தில் திரைக்கதை வசனம் ஏதும் எழுதாமல் ஸ்பாட் ல் இயல்பான நண்பர்களுடான கலந்துரை தான் அதற்க்கான எந்த மெனக்கெடலும் இல்லை , மது அருந்துவது தான் கிட்ட தட்ட அதிகமான காட்சிகளே என்றாலும் அதுவும் இயல்பானவை தான் பார்க்கும் பொது புரியும் என்கிறார் இயக்குனர் .
அரசியல் விடுமுறையில் ஐந்து நண்பர்கள் சந்தோசமாக ஒரு ட்ரிப் அடிக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள் . அப்படி ஒரு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு இடத்தில் ஐவரும் ஒன்று கூடி கேலி கூத்து அரட்டை மது ன்னு சந்தோசமாகத்தான் செல்கிறது . அங்கு சமைத்து சாப்பிட ஒரு கோழியையும் பிடித்து கொண்டு தான் செல்கிறார்கள் . சரக்கு உள்ளே இறங்க இறங்க அவர்களுக்குள் இருக்கும் அந்த கசப்பான மனிதன் வெளியே வருகிறான் . பிறகு சிறு சிறு சண்டை சச்சரவுகளில் முடிய . மீண்டும் ஒன்று கூடி அடுத்த சரக்கு பாட்டிலை காலி செய்கிறார்கள் . பின்பு பெண்ணை பற்றி பேசி பிறகு அரசியல் சாதி ன்னு நகருகின்றது . அடுத்த பாதி ஒரு விளையாட்டு விளையாடலாம் என்று தீர்வு செய்கிறார்கள், அதென்ன விளையாட்டு . என்ன ? என்பதெல்லாம் திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும் .
ஒரு திரைப்படம் மக்கள் மத்தியில் அதிகம் பேச படுகிறது . பார்க்கும் நம்மை அந்த இடத்தை விட்டு நகராமல் முழுவதும் பார்த்து விட்டு நகர செய்கிறது . பார்த்த முடித்த பிறகு கனவிலும் நம் கண் முன் வந்து செல்கிறது. என்றால் அதுவே நம்மை வெகுவாக கவர்ந்த ஒரு திரைப்படம் என்போம் . அப்படி ஆரம்பத்தில் தொடங்கும் முன்பு ஒரு ட்ராக்கில் செல்லும் கதை பின்பு பெண்,பணம் , நட்பு, அரசியல் ஊழல், சாதி , வண்ண பாகுபாடு. என்று ஒட்டுமொத்த கதையும் நமக்கு சொல்லாமல் சொல்லி விட்டு ஒரு வித பயத்தையும் வடிவமைத்து செல்கிறது இந்த திரைப்(பா)டம் .
பொதுவாக படத்தின் கதை சொல்வது எனக்கு நிச்சயமாக பிடிக்காது , இருந்தாலும் பார்த்தே தீர வேண்டிய திரைப்படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்று சிறு சிறு வார்த்தைகளை சொல்ல போய் ஒரு சில சுவாரசியங்களை உடைக்க நேரிடும் ஆகையால் . படத்தினை பார்த்துவிட்டு மேலும் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன் ....
அப்ப வரும் இப்ப வரும் ன்னு வெகுநாள் காத்திருந்த பிறகுதான் இந்த திரைப்படத்தை என்னால் காண முடிந்தது . 2015 கேரள திரைப்பட விழாவில் திரையிட பட்டு பலரால் பாராட்டப்பட்ட இந்த திரைப்படம் சென்னையில் வெளிவந்தது . முழுவதுமாக ஒரு வாரம் மட்டுமே திரையில் இருந்தது .சரி ஒரிஜினல் டிவிடி வரும் வாங்கி கொள்ளலாம் ன்னு இருந்தேன் . தற்போது நண்பர் ஒருவரின் மூலம் படம் கிடைத்தது . சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் , சிறந்த சவுன்ட் செட்டிங்க்ஸ் காண விருதையும் பெற்றது , ஒவ்வொரு காட்சியிலும் வரக்கூடிய சிறு சிறு இயற்கையான இசை சேர்ப்பின் மூலமும், ஒளிபதிவாளர் காட்சி படுத்துவதன் மூலமும் நம்மை திரைபடத்திற்கு உள்ளவே அழைத்து செல்கிறார்கள் . எனக்குமே இப்படியே சென்றால் சந்தோசமாக தான் இருக்கும் என்று தோன்றியது .
அதில் ஒரு பெண் கதாபாத்திரம் . கதைக்கு தகுந்த சூழலில் இருக்கும் 7 கதாபாத்திரங்களில் முக்கிய கதாபாத்திரம் . ஒரு திரைப்படம் தொடங்கும் முதல் ஐந்து அல்லது பத்து நிமிடத்திலேயே அடுத்த என்ன நடக்க போகிறது என்ன ? என்பதனை நம்மால் யூகிக்க முடியும் . அப்படி பார்வையாளன யூகித்த நம்மை இல்லை இது வேற விதமான கதை . என்று ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது .
படத்தின் முன்னோட்டத்தில் வரும் அந்த குறியீடு அந்த விளையாட்டு தான் ஹீரோ . அதென்ன விளையாட்டு ? அதற்க்கான விதிமுறை ? என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் . நம்முடைய சூழலில் மனிதர்களின் கசப்பான மற்றுமொரு முகம் எப்படி பட்டது . என சொல்லலாமல் சொல்லி விடும் .
சிறுவயதில் ஒவ்வொருத்தர் வீட்டிலும் அம்மா வெளிய போகாத பசங்கலோட சேந்து எங்கயும் சுத்தாத ன்னு சொல்லுவாங்க அது உதாரணமும் சொல்லுவாங்க . அது எல்லாம் நினைவுக்கு வர வாய்ப்பு இருக்கலாம் . படத்தை பற்றி நிறைய பேசலாம் பார்த்து விட்டு வாருங்கள் கண்டிப்பாக பேச பட வேண்டிய படம் வந்த புதிதில் தான் பார்க்க முடியவில்லை இப்போதவாது பார்க்கலாமே . என் பார்வையில் ஒரு விதத்தில் இது பக்கா அரசியல் படமுன்னும் சொல்லுவேன் .
நன்றி
#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:
Post a Comment