KUTRAM 23 (2017)
தமிழ் திரைபடங்களுக்கு பொதுவாக நான் பதிவெழுதுவது இல்லை ஏன்னா அந்த அளவுக்கு எனக்கு யூகிக்கும் வல்லமையும் புரிந்து கொள்ள கூடிய அலாதியான புரிதலும் இல்லை . ஒரு இரண்டு மணி நேரம் என்னை கவர்ந்த படங்களை, நான் மற்றவருக்கு பரிந்துரைப்பது வழக்கம் . அந்த வகையில் வெகுநாளுக்கு பிறகு ஒரு திரைப்படம் கட்டாயம் எல்லோருக்கும் பரிந்துரைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை என்னிடம் உருவாக்கி உள்ளது .
அந்த தூண்டுதலே இந்த பதிவினை என்னை எழுத செய்கிறது இது ரீவுவ் என்று கருதினால் அது உங்கள் கற்பனையே . இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வந்துள்ள குற்றம் 23 , கிட்ட தட்ட கடந்த ஒரு மாதம் முழுக்க நான் திரையரங்கில் பார்த்த , அத்தனை படங்களின் இடைவேளை நேரத்தில் . திரையிடப்பட்ட இந்த படத்தின் முன்னோட்டம் தான் நான் பார்பதற்கு மிக முக்கிய காரணம். ஏன்னா ஒவ்வொரு முறையும் ஒரு பரபரப்பை உருவாக்கி விட்டு சென்றது .
இயக்குனர் அறிவழகன் அவரை பற்றி நான் சொல்லிதான் நீங்க தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை . அவர் இயக்கிய மற்ற படங்களே அவரை பற்றி சொல்லும் . தமிழ் திரைத்துறைக்கு தேவையான ஒரு இயக்குனர் . கதை சொல்லி படம் பார் என்பதில் யாருக்குமே உடன்பாடு இல்லை . ஆகவே சிறு முன் குறிப்போடு முடித்து கொள்கிறேன் . ஆரம்பத்தில் ஒரு பெண் சர்ச் பாதர் உடன் பாவ மன்னிப்பு கேர்கிறாள் . கேட்டு முடித்த வுடன் அந்த பாதரும் அந்த பெண்ணும் அந்த இடத்திலே இறகின்றனர் . அதன் பிறகு இந்த கேஸ் இன்வெஸ்டிகேசன் செய்ய வருகிறது . இது கொலையா ? தற்கொலையா ? இல்லை காத்தா கருப்பா ? எல்லாம் பார்த்து தெரிந்துகொள்ளவும் .
தற்போதுள்ள சமூகத்திற்கு தேவையான ஒரு கதையை எடுத்துக்கொண்டு , அதனோடு சமூக கருத்தை சேர்த்து , சிந்திப்பில் ஆழ்த்த கூடிய ஒரு கதையமைப்பு தான் . ஆரம்பத்தில் "கற்பனை கதை" என்றும், "இது யாரையும் குறிப்பிட வில்லை" என்றும் குறிப்பிட்டு இருந்தாலும் . உற்று கவனிக்க வேண்டிய விசியங்கள் நிறையவே திரையில் உள்ளன . பார்பதற்கு முன்பு இது ஒரு இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் அவ்ளவுதான் ன்னு திரையில் அமர்ந்த எனக்கு தெரியாத பல தகவல்களை தெரிய வைத்தது . எனக்கு மட்டும் இல்லாமல் திரையில் அமர்ந்து சிலருக்கும் தான் .
ஆகவே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் , அல்லது எதிர்பார்ப்போடு கிளம்பினாலும் ஏமாற்றம் அடைய வைக்காது , அதற்கு வாய்ப்பு இல்லைன்னு தான் நினைக்கிறன் . முக்கியமா இந்த திரைபடத்தில் தேவையில்லாத காட்சி இதை நீக்க வேண்டும் என்று பார்த்தல் அப்படி ஒன்றும் கண்ணுக்கு படாது . வொர்த் ஆனா திரைப்படமா , ஆகா ஓகோ ன்னு சொன்னா மட்டும் தான் பாப்பேன் என்று அடம் பிடிப்பவர்கள் . அப்படியே அங்கனே போகாதீங்க உங்களுக்கான படமில்லை, ஏன்னா இதுல பாட்டு இல்ல , ஓவர் காதல் ரொமேன்ஸ் காட்சிகள் இல்லை , தண்ணி தம்மு இரட்டை வசனம் இல்லை , தெறிக்க விடுற சண்டை காட்சி இல்லை , பறக்க விடுற அடியார்கள் , காமெடி என்ற பெயரில் அப்படி இப்படி ன்னு எதுமே இல்லை .
இன்று வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் , பாராட்டுகளையும் பெற்று வருகிறது என்பதை சமூக வலை தளத்தை பார்க்கும் போதே தெரிகிறது . அதனில் என்னுடைய பங்களிப்பையும் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே , மற்றபடி வேறொன்றும் சொல்ல வில்லை . பார்ப்பவர்கள் நிச்சயம் பார்துவிட்டு வாருங்கள் நிறைய பேச வேண்டிய கருத்துக்கள் உள்ளன .
குறிப்பு : குற்றம் 23 , இந்த திரைப்படம் அருண் விஜய்க்கு ஒரு மிக முக்கியமான திரைப்படம் அதுமட்டும் இல்லாமல் இது இவருடைய இருபத்தி மூன்றாவது திரைப்படம். அதெல்லாம் விட நம் மக்களுக்கு தேவையான திரைப்படம் . பார்க்கவும் திரையில் , தவறவிட்டு வருத்த பட வேண்டாம் .
நன்றி
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment