Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

Sairat (2016) மூர்க்கத்தனமான அன்பு



படத்தின் தலைபிற்கு எனக்குமே அர்த்தம் தெரில தெரிஞ்சவங்க கொஞ்சம் சொன்னால் தெரிந்துகொள்வோம்.



முதலில் இந்த படம் Drama, Romance imdb லபார்த்தேன் படம் பார்த்த பிறகு இதுல மியூசிக் சேர்த்திருக்கலாம் .அவ்ளோ அருமையான மியூசிக் புதுமையா இருக்கும்.


மராத்தி ல முதல் முறையாக நான் பார்த்த Fandry பட இயக்குனரின் அடுத்த படம் தான் இந்த Sairat.முந்தைய படத்திலே இவர் மிகவும் பாராட்டபட்டவர்படத்தின் கதையும் சேரி.அந்த கிளைமாக்ஸ் அத்தனை ரசிகர்களையும் கவர்ந்திழுத்தது.இந்த படத்திலும் சாதியை மையமாக வைத்துதான் , கீழ் சாதி உள்ள ஒருவன் , காதல் கதைதான் இப்படிப்பட்ட கதை தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல அங்கு எப்படின்னு எனக்கு தெரில. படத்தின் சுருக்கமான கதை என்னனே ன்னா இங்க சாதி கீழ்படிஞ்ச ஒருமீன்கடைகாரனின் மகன் உயர்ந்த பெண் சாதி பெண்ணை ஒருதலையாக காதலிக்கிறான்,பிறகு இருதலைகாதலாகி வீட்டுக்கு தெரிந்து ஆரம்பத்திலேயே இவங்கள பிரிசுடுறாங்..எப்படியோ மீண்டும் ஒன்னு சேர்ந்த இவர்களை எப்படியாச்சும் பிரிக்க அவளுடைய அப்பா (ஒரு அரசியல்வாதி).. பிரிசுடுராறு ?மீண்டும் தப்பித்த அவர்கள்
கடசில என்ன தான் ஆச்சு என்பது மீதி கதை??



இதுல காதல் மட்டும் இல்லேங்க அந்த பாடல் காட்சிகள் ரொம்பவே கவர வைக்கிறது.இதுவரைக்கும் ஒரு அஞ்சு ஆறு மாராத்தி படம் தான் பார்த்திருப்பேன் .அதில் பாடல்கள் ஒன்றுதான் இருக்கும் இதில் கொஞ்சம் நேரத்துக்கு ஒரு முறை ஒரு பாடல் வரும் ஒவ்வொன்றும் அருமை மியூசிக் லாம் உண்மைலே சிறப்பு..தமிழ் பாடலை ரசிக்கிற மாறி ரசிச்சேன்..Location லாம் நல்லா தேடி தேடி பண்ணிருக்காங்க ஒரு சின்ன சாட் தான் அவன் அந்த பொண்ண கூட்டிட்டு ஓடும் பொது பின்னாடி காடு நெருப்பு பத்திகிட்டு எரியும் அப்படிலாம் பண்ணிருக்காங்க . இயக்குனர் நிறைய சிந்தித்து எடுத்திருக்கிறார்.படத்தில்நண்பர்களாகவரும் ஒருவரை Fandry ல பார்த்திருக்கிறேன் 3 வருஷ Gape ல எப்படி இப்படி வளர்ந்தார் ம்மு தெரில...


குறிப்பு : நான் முதன் முறையாக Subtitle இல்லாமல் ரசித்து பார்த்த மராத்தி படம் என்ற பெருமைய இந்த படத்திற்கே சேரும்.. நமக்கு படம் புதுமையாக இருக்காது காரணம் இதுமாரி பல படங்கள் இங்கு இருக்கு,..
என்கிட்டே லிங்க் இல்ல எனக்கு என் நண்பன் ஏத்தி கொடுத்தான்.. கொஞ்ச நாள் பொறுத்திருந்து Subtitle வந்த பிறகே நீங்க பார்த்துகோங்க...

எனக்கு மிகவும் பிடித்திருந்தது படத்தின் இசை அப்புறம் அந்த பெண் கிட்ட காதலை சொல்ல ஒரு சின்ன பையன் கிட்ட குடுத்து விடுற சீன்ஸ் லாம் சூப்பர்,எல்லா பாடலும் சூப்பர் 


IMDB ல நல்ல Rating வாங்கி இருக்கு..பாக்லாம் நேரம் கிடைக்கும் பொழுது ஏன்னா Fandry ல 1h 41min தான் இதுல 2h 54min மத்தபடி சொல்ல ஒன்னும் இல்லை..
இந்திய சினிமாவே பார்க்க வச்ச Fandry படத்தின் கிளைமாக்ஸ் ..இதுலயும் அப்படி யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் உண்டு ..

நன்றி

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger