The Teacher's Diary (2014) வாழ்வில் மறக்கமுடியாத ஒரு திரைப்படம்
<3 span="">3> இப்படி ஒரு படத்தை பார்த்த இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது . அதுவும் மாலைப்பொழுதில், ஜன்னல் ஓரத்தில், மழைச்சாரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக விழுந்துகொண்டிருக்கும் வேலையில் இப்படி ஒரு சிறப்பான திரைப்படத்தை பார்த்ததை என்னால் நிச்சயமாக மறக்கவே முடியாது.
<3 span="">3> இயக்குனரை பற்றி தேடியதில் இதுவரை நான்கு படங்கள் இயக்கி உள்ளார் , நான்கும் நான்கு விதத்தில் அட்டகாசமான பீல் குட் திரைப்படங்கள்.. அதுவும் இந்த திரைப்படம் சிறந்த உலக திரைப்படத்திற்கான விருதினை பெற்றது.கதாநாயகி <3 span="">3> இந்த படத்திற்கு மட்டுமே மூன்று அவார்ட் வாங்கி இருக்காங்க எவ்ளோ வேணாலும் தரலாம்.
<3 span="">3> எத்தனை பேருக்கு இந்த மாதிரி ஒரு வாழ்க்கை அமைந்து விடும் என்று எனக்கு தெரியவில்லை, அப்படி ஒரு பள்ளி அதில் நம்மால் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தினை கண்டிப்பாக அடையச்செய்யும்.சிறுவயது நாள்களை சேட்டைகளை நியாபக படுதிச்செல்லும். மிதக்குற பள்ளிகள் (Floating School) சுற்றிலும் தண்ணி நடுவுல இருந்தா எப்படி இருக்கும்.. அப்படிப்பட்ட ஒரு ஸ்கூல் தான் இங்கயும் நான் சொல்லி புரிந்துகொல்ற அனுபவத்தை விட பார்த்து உணரும் உணர்சிகளின் ரசனை வேற லெவல்.
<3 span="">3> படத்தோட கதைய பற்றி கொஞ்சம் குட தெரிஞ்சுக்காம பார்த்தால்தான் அந்த அனுபவத்தை உணர முடியும் .அதனால ஒரு சின்ன இன்றோ வோட முடிச்சுக்குறேன்.
ஹீரோ அவர் வேலைபார்க்கும் ஸ்கூல் ல இருந்து இவர் செய்ற சின்ன சின்ன சேட்டை நால இவர வேறொரு ஸ்கூல் க்கு மாத்துறாங்க, அதுதான் Floating School அங்க இவர் வந்து பாக்கும் போது இவர் கைக்கு ஒரு டைரி கிடைக்குது, இதற்கு முன்னால் இங்க ஆசியரா இருந்த Aan அவங்க எழுதுனத தெரிஞ்சுக்குறார், அவங்கள பத்தி படிக்க ஆரம்பிக்கிறார் காதல் மலர்கிறது. அதற்கு பிறகு என்ன ஆனது? அப்படி டைரி ல என்ன இருந்தது? இவங்கள தேடி கண்டுபிடிச்சாரா? என்பதை பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.
<3 span="">3> கண்டிப்பா தூக்கம் வராது இந்த படம்தான் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கும் ன்னு நினைக்கிறன் , அந்த அளவுக்கு ரசிக்க வச்சு கவர்ந்து இழுத்துரிச்சி என்னை. பின்னணி இசை சான்ஸே இல்லேங்க அந்த அளவுல இருந்தது , விசுவல் காட்சிகள் அட்டகாசம் . அதுவும் ஒருகாட்சியில் அங்க பயங்கரமா மழைபெஞ்சு ஒரு மாதிரி ஆகும் அப்போலாம் பக்காலெவல் , லொக்கேசன்ஸ், கதாபாத்திரங்கள் என ஒட்டுமொத்தமாக அசத்திய இந்த திரைப்படத்தை நிச்சயாமாக பார்த்தே ஆகவேண்டும், காதலை விரும்புவர்கள், சிறுவயது பள்ளி பருவ நாள்களை விரும்புவர்கள், கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும் நான்கேரண்டி.
<3 span="">3> படத்தை பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லவும், பார்க்காதவர்கள் உடனடியாக ஒரு மாலை பொழுதில் படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை சொல்லவும், நண்பர்களுக்கு பார்க்க சொல்லி பரிந்துரைக்கவும். நான் அந்த இயக்குனரின் அடுத்த மூன்று படங்களை பார்த்துவிட்டு விரைவில் பகிர்கிறேன்.
நன்றி
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment