Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

Sultan (2016) "உடலுக்கென செதுக்கப்பட்ட கதாபாத்திரம்"




💪 படத்தை பற்றி சொல்லணும் நா சல்மான் கிராமத்து இளைஞன். அவர் ஒருநாள் அனுஷ்கா சர்மாவை சந்திக்க நேரிடுகிறது. இவருக்கு அனுஷ்காஷர்மா மேல் காதல் வர அவளை பின்தொடருகிறார்.. பின் என்ன ஆனது?? மல்யுத்த சண்டையில் ஏன் கலந்துகிட்டார்? என்னவெல்லாம் ஆனது என்பதை கண்டிப்பாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


💪 தொடக்கத்துல சல்மான் என்ட்ரி ல இருந்தே அட்டகாசமா தான் இருந்தது, கொஞ்சம் போக போக எதோ ஓகே ன்னு தான் பார்த்திட்டு இண்டர்வல் ல இருந்து வேகம் புடிக்க ஆரம்பிச்சுடுச்சி .பொதுவா த்ரில்லர் படம் பாக்கும் போதுதான் வெறியோட விருவிருப்பா கை லாம் வேர்த்து , ஒரு ஆரவாரத்தோட பாப்போம் எனக்கும் இந்த படம் முதல் முறை அந்த பீல் ஹ கொடுத்தது இந்த சுல்தான்..


💪 எதரி தன்னை கடைசி அடி அடிக்கறதுக்குள் நேரம் முடிந்து அந்த ரவுண்டில் இருந்து தப்பிக்கிறார் . கை எடுத்து கும்பிடும் காட்சி மிரட்டுகிறது . முதல் முறை அவர் ஸ்டைல் ல முடிக்கிறார். முதுகுக்கு பின்னாடி புடிச்சு தூக்கி கீழ பொங்கு ன்னு அடிக்கும் பொது மிரட்டல் .. ஒவ்வொரு பைட் முடிக்கிற காட்சி என அடுக்கிகிட்டே போகலாம்மண்ணின் மகன் சல்மான் கானுகாகவே எழுதப்பட்ட கதை போல "உடலுகென செதுக்கப்பட்ட கதாபாத்திரம்"


💪 வசனங்கள் எல்லாம் மிரட்டும் " ஒரு நிஜமான பயில்வானுக்கு ரிங்குக்குள்ள சண்டை நடக்கறதில்ல.. வாழ்க்கைலதான் சண்டை நடக்குது. வாழ்க்கை அவனை தூக்கிப் போட்டு அமுக்கறப்போ திமிறி எழணும்!”'நாம தோக்குறதில்ல, எதிரியை ஜெயிக்க வைக்கிறோம்', 'ஜெயிச்சவனை விட தோத்தவனுக்குதான் வெற்றியோட அருமை தெரியும்'.. 




💪 வேற லெவல் இன்னொருமுறை கட்டயாமாக பாக்கவேண்டும் என்று காத்திருந்தேன் இன்றுதான் பாக்கமுடிந்ததுகண்டிப்பா இந்த கதைக்காகவும், ஆக்சன் காகவும் குறிப்பா சல்மான் பேசுற வசனங்கள் அத்தனைகாகவும் கண்டிப்பா படத்தை பாருங்க ஆன்லைன்லயு இருக்கு.இந்த வருடம் வெளிவந்த இந்திய படங்களில் இதுதான் என்னோட டாப் ஒன்..

நன்றி

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger