கக்கூஸ் ஆவண திரைப்படம்
உலகளவில் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் "நம் இந்தியாவில்" ,நம் இந்தியாவில் .... உயிரிழப்பையும் கூட எளிதில் கடந்து செல்வது ஒரு இயல்பான காரியம் ஆகி விட்டது. தற்போதுள்ள காலகட்டத்தில் என்னதான் பல டெக்னாலஜிகள் , கண்டுபிடிப்புக்கள் வந்து கொண்டே இருந்தாலும் . நாம் வாழும் இந்த சூழல் நாகரிமான சூழல் தானா? என்பதனை அனைவரும் அவரர் வீட்டு கண்ணாடியில் பார்த்து கேட்டுக்கொள்ளவும் . அன்றாட வாழ்வில் என்றாவது ஒருநாள் உங்கள் வீட்டி கழிவுகளை அகற்றி இருகீர்களா? . ஒரு வேலை அகற்றி இருந்தால் நான் சொல்ல வரும் வார்த்தைகள் உங்களுக்கு புரியும் .
நம் வீட்டு கழிவுகளை அகற்றும் போதே நமக்கு சோதனையாக இருக்குமே . ஊர் கழிவயே அகற்றும் தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட பழங்குடி சமுதாயத்தை சேர்ந்தோர்களின் வேதனைகள் பற்றி சற்று சிந்தித்தது உண்டா ? எங்காவது பணியில் ஈடுபட்டி இருக்கும் துப்புரவு பணியாளர்களை கண்டாலே பத்து அடி தூரத்துக்கு முன்னாடியே மூக்கை பொற்றி கொண்டு செல்லுபவர்களே . நம் நாற்றத்தை தான் அவர்கள் சுத்தபடுத்தி கொண்டிருகிரார்கள் என்று உணர்ந்தது உண்டா ? இப்படி உண்ணும் , உண்ணாமலும் இந்த சமுதாயத்தில் நாம் தான் இப்படி வாழ்ந்து விட்டோம். நம் குழந்தைகளாவது கவலை தெரியாமல் வாழ வேண்டும் என எண்ணி இதனை, மக்களுக்கு நம் நாட்டிற்க்கும் செய்யும் சேவையாக , மலக்குழிகளில் இறங்கு உயிரை விட்டவர்களை பற்றி தெரியுமா ?
அவங்க நம்ப கண்டுபிடிப்புகளா என்ன ? இல்ல மெசின்களா ஊர் கழிவுகளை அகற்ற ? இந்த கொடூரமான வாழ்க்கை முறையில் வாழும் நாம் எப்படி நாகரிக வாழ்க்கை என்று மார் தட்டி சொல்லிக்கொள்ள முடியும் . பிறப்பால் தாழ்த்தபட்டோர் மட்டுமே இதில் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் . ஏன் அவங்க எல்லாரும் மனிதர்கள் இல்லையா ? இந்த கொடுமைகலோடு சேர்த்து பிஞ்சு குழந்தைகளை இப்போது இருந்தே பள்ளிகளில் கட்டாய வேளைகளில் உற்படுத்துகிறார்கள் . சமீபத்தில் முகநூலில் ஒரு வீடியோ பகிரப்பட்டது எந்த ஊர் என்று தெரியவில்லை ஒரு அரசு பள்ளியில் பயிலும் மாணவ , மாணவி சிறார்கள் தங்கள் பள்ளி பாத்ரூம் கழிவுகளை சுத்திகரிக்கும் வேலை செய்துகொண்டு இருக்கின்றனர் , சிலர் குப்பைகளை அகற்றுவது போன்றும் இருந்தது .
மற்றொருவர் வேலைவாங்கி கொண்டு நின்றுகொண்டு இருப்பது போன்ற வீடியோ ஒன்று பகிரபட்டது , இதை பார்த்த அனைவருமே இவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கக் வேண்டும் . இதனை ஷேர் செய்யுங்க சேர் செய்யுங்க ன்னு பகிர்ந்தார்களே தவிர முன் நின்று குரல் கொடுக்க யாரும் வருவதில்லை . ஒன்னாம் வகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் வரை அதில் முதல் பக்கத்தில் மூன்று வாசகம் இருக்குமே யாரவது படித்து இருக்கீங்களா ? அதனை சொல்லிகொடுக்க வேண்டிய ஆசிரியரே இப்படி செய்வது நாகரிமான பண்பாடான சூழலா என்ன ? எதற்கெடுத்தாலும் கொடி தூக்கி கொண்டு வரும் கூட்டம் அவர்களுக்கு இது எல்லாம் கண்ணில் படாதா என்ன ? இல்லை தாழ்த்தபட்டோர்கள் அந்த வேலை செய்தவர்க்காகவே பிறந்தவர்களா என்ன ?
இப்படிப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையையும் . அவர்களை பற்றிய நமக்கு தெரியாத உண்மைகளையும் இந்த ஆவண படத்தில் ஆவணப்படுத்தி உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் #DIVYABHARATHI
அறிவியல் உலகில் வளர்ந்து வந்து கொண்டு இருக்கும் நம் நாடு , விண்வெளிக்கு செயற்கை கோள்களை அனுப்பி கொண்டிருக்கும் நம் அறிவியல் நாடு , நம் நாட்டு மக்களுக்காக ஒரு இயந்திரத்தை இன்னும் கண்டுபிடிக்க வில்லையா என்ன ? அன்றாடம் நாம் தினமும் செய்யும் செலவுகளே 300, 400 என்று அதிகரித்துகொண்டே செல்லுகிறதே . அந்த துப்புரவு பணியாளர்களின் ஒரு நாள் தினக் கூலி எவ்வளவு தெரியுமா ? இந்த லச்சனத்தில் பாரத இந்தியா , வல்லரசு இந்தியா , மாற்றம் அது இது ன்னு பேசி கொண்டு இருகிறோம் .
இனியாவது முன் வாருங்கள் . என்னனமோ சட்டம் இயற்ற பட்டதாகவும் நடைமுறைக்கு வந்ததாகவும் கூற படுகிறது . அது எல்லாம் நிரந்தரமான உண்மை தான என அனைத்தையும் இந்த ஆவணத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் ..
நன்றி
#சிவஷங்கர்
0 உங்கள் கருத்து:
Post a Comment