Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

678 (2010) மூன்று பெண்களின் கதை



பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் , அடக்குமுறைகள் , அடிமைத்தனம் எல்லாம் ஆரம்ப காலத்தில் இருந்தே இன்று வரை தடுக்கமுடியாத பலவனவாகவும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன . உலகில் எதோ ஒரு பகுதியில் ஒவ்வொரு மணி நேரத்திற்கு சிலர் பாலியல் கொடுமைகளாலும் , அல்லது அடக்குமுறையினாலும் கொல்ல படுகிறார்கள். அவங்களுக்கென ஒரு சுதந்திர வாழ்க்கை இல்லை . எகிப்து நாட்டு மக்களின் பண்டைய காலத்தில் கடன் தொல்லை தாங்க முடியாமல் . அல்லது குடும்ப சூழ்நிலையாலும் வீட்டில் உள்ள பெண்களை வேறொருவரிடம் விற்றுவிடுவார்கள் .


இனி அந்த பெண்ணை இவர்களால் சந்திக்க முடியாது அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் கொஞ்சம் கூகிளை புரட்டி பார்த்தல் கண்ணில் "தாரை தாரையாக" கண்ணீர் ஊற்றி விடும் அந்த அளவிற்கு பெண்களின் மீதான கொடுமைகளை அடிக்கி கொண்டே போகலாம் . அதிலும் குறிப்பாக ஈரான் , இஸ்லாமிய நாடுகளில் அவங்களுக்கு இருக்கும் பிரச்னைகளை பார்த்தால் கொடுமைக்கு மேல் கொடுமையாக இருக்கும் . அவங்க விருப்பபடி மனமகனை தேர்வு செய்துகொள்ள முடியாது . அதற்கு அனுமதியும் கிடையாது. வீட்டிலே இருக்க வேண்டும் , குடும்ப வேலைகளை பார்த்துகொண்டு . அதற்கு மட்டும் பயன்படுதிகொள்ளும் ஒரு மெசினாக அவர்கள் இருக்க வேண்டும் . வெளியே வரகூடாது , வீட்டுச் சிறையில் ஒரு கைதியாகவே வைத்து விடுவார்கள் .









பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சொன்னாலே அவர்களுக்கு பல பிரச்னைகள் வரும் என்றும் , குடும்ப சூழ்நிலையில் , பல வாழ்வாதார சிக்கலுக்குள் இருந்து போராட வேண்டி இருக்கும் என்பதற்காகவே " பாலியல் தொந்தரவுக்கு " எதிராக வழக்கு தொடுக்க படாமலே இருந்தது எகிப்தில் . முதன் முதலில் இந்த திரைப்படம் தான் அதனை பதிவு செய்தது , இணையத்தில் தேடினால் யார் அந்த பெண் என்று தெரியும் . படத்தை பற்றி பார்ப்போம் . பார்தபத்ர்க்கு முன்னால் நிச்சயமாக சத்தியமாக பார்க்க வேண்டிய படம் . ஏன் பார்க்க வேண்டும் என்பதை சுருக்கமாக சொல்லி விடுகிறேன் .




பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வழக்கை பதிவு செய்ததை முன்வைக்கும் முதல் திரைப்படம் , உலகிலே பெண்கள் தான் மிக எளிமையானவர்கள் , உடல் வலிமை அளவில் பலம் குறைந்தவர்களாக காணப்படும் பெண்கள் மன வலிமை மிகுந்தவர்கள் தான் இவ்வுலகிலே அதிகம்.அப்படிப்பட்ட பெண்களின் வாழ்வாதார வாழ்க்கை சூழலில் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து வந்த திரைப்படம் தான் 678. சிறந்த திரைபடத்திற்கான விருதையும் . மேலும் பல உலக திரையரங்குகளில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளது , குறிப்பாக திரைக்கதை பற்றி சொல்லியே ஆக வேண்டும் . உண்மை சம்பவங்களின் தொகுப்புகளை வைத்துகொண்டு இப்படி திரைக்கதை யில் நம்மை இறுதி வரை இழுத்து செல்லும் திரைப்படங்கள் மிகவே குறைவு . இந்த திரைபடம் நிச்சயம் திரைப்பட திரைக்கதை எழுத்தாளர்களுக்கு பயன்படும் . Mohamed Diab ஒரு மிக சிறந்த படத்தை (படைப்பை) கொடுத்து இருக்கிறார் . படத்தை பற்றி பார்ப்போம் .

திரைபடத்தில் மூன்று பெண்கள் , வெவ்வேறு சூழலில் அவங்க சமூகத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அவர்களை பற்றின கதைதான் .
ஒரு வக்கிர வெறியெடுத்த வெறியனால் வீட்டை விட்டு வெளியை வரும் போதே தாக்க படுகிறாள் ஒரு பெண் . காரினுள் இருந்து கையை வெளியே நீட்டி அவளின் மார்பகத்தை இழுத்து பிடித்து கொண்டே சிறுது தூரத்தில் தூக்கி போடுகிறான் ஒருவன் . இதில் பாதிகப்பட்ட பெண்ணை பற்றியும்

குடும்ப சூழலில் வசித்து வரும் பெண் , வங்கியில் வேலை பார்பவர்கள் தினமும் வேலைக்கு செல்லும் போது எதிர்கொண்டு வரும் பிரச்சனனையும் , வீட்டை விட்டு வெளியே வந்தாலே பின்னாடி என்ன தொந்தரவுக்கு உள்ளாக போறமோ ? என்று பயந்து பயந்து வாழ்கையை நடத்தி கொண்டிருக்கும் ஒரு பெண்ணை பற்றியும் .
. கணவனோடு கால்பந்தாட்ட விளையாட்டு போட்டி பார்க்க செல்லும் ஒருவள் அந்த கூட்டத்தில் சிக்கி காட்டு மிராண்டிகளால் சூறையாட படுகிறாள் . இந்த மூன்று பெண்களின் கதைதான் இந்த திரைப்படம் .வெவ்வேறு சூழலில் மூன்று பெண்களும் பாதிக்கபடுகிறார்கள் . அது என்ன ? எப்படி ? லாம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் . இதோடு திரைப்படத்தை பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு வாருங்கள் விரிவாக பேசுவோம் .

ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே திரைக்கதை அமைப்பு நம்மை வெகுவாக கவர்ந்து விடும் . குறிப்பாக டைம் லூப் சார்ந்த திரைப்படங்களின் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு சல்யுட் அடிக்க விரும்புவேன் . நான் பார்த்த டைம் லூப் திரைப்படங்கள் எதுவுமே என்னை ஏமாற்றியது இல்லை . சரி இந்த திரைபடத்தின் திரைக்கதையை பற்றி பேசுவோம் . ஒரு திரைபடத்தை பார்க்கிறோம் என்றால் தேவை இல்லாத காட்சி என்று ஏதாவது வந்துவிட்டால் எதுக்காடா இது சம்மந்தமே இல்லாமல் அப்படின்னு பொலம்பிட்டே இயக்குனரை திட்டுவேன் . இதுல ஆரம்பத்துல ஒரு செம்பு கம்பியில ஒரு சிலையை செய்வது மாதிரி காட்டினாங்க இது எதுக்கடா ன்னு யோசிச்ச எனக்கு பின்னாடி பதில் கிடைத்தது . அதே போல முதல் பெண்ணை பற்றிய கதை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் . பிறகு அடுத்த பெண்ணை பற்றி கதை துவங்கிகிறது அந்த கதை முடிந்த முறை மீண்டும் எங்கு விட்டமோ அங்கிருந்து நகர்கிறது . இப்படி இந்த படத்திலே நிறைய காட்சிகளின் மூலம் நம்மை வியக்க வைக்கிறார்கள் .


இதுபோன்ற உண்மை நிகழ்வுகளை முன்வைத்தும் , சமூகத்திற்கு கருத்து சொல்வது போன்ற படங்கள் எடுப்பவர்களையும் அரசு தடை செய்திருக்கிறது . இந்த திரைப்படம் எகிப்து நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை அப்படியே பதிவு செய்துள்ளது . நிச்சயம் தவறமால் பார்க்க வேண்டிய திரைப்படம் . அனைத்து உறவுகளும் கட்டாயமாக பார்க்கவேண்டும் . நமது குழுவில் ஒருநாள் நிச்சயம் இந்த திரைப்படத்தை பற்றிய கலந்துரை நடத்தப்படும் . தவறாமல் கலந்துகொள்ளுங்கள்

நன்றி

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

MOEBIUS ( 2013 ) கொய்யால அறுத்தே புடுவேன்

 எனக்கு  நல்லா  நியாபகம்  இருக்கு  காலேஜ்  சேர்ந்த  முதல்  வருசத்துலையே  இந்த  படத்தை  நான்  பார்த்தேன்  வெளில  ஒரு   சத்தம்  கூட  போடாம அந்த  முழு  படத்தையும்  பார்த்து  முடித்தேன் . அதை  எனக்கு  கொடுத்தவர்  இப்ப  ஆள்  அட்ரஸ் எங்க  இருக்கார்  ன்னு   தெரியல  . அதே  மூன்றாம்  ஆண்டு  வந்த  உடன் எங்க  வகுப்புல  பாக்காத  பசங்களே  இல்ல எல்லாரையும் பாக்க  வச்சாச்சு  எங்க  காலேஜ்  ல  பல  டிபார்ட்மென்ட்   க்கு  ட்ராவல்  ஆச்சு  அதுலாம்  வேற  கதை . மக்களே  இது  ரீவீவ்  அல்ல  அப்படி  ஏதாவது  தங்கள்  கண்களுக்கு  தென்பட்டால்  கம்பெனி  பொறுப்பல்ல .




இப்ப  நம்ப  கிம்  கி  டுக்  படத்தை  பற்றி  பேசுவோம் . இந்த  படத்தை  யாராச்சும்  பாக்லாமா?  என்று  கேட்டால்  வேற  லெவல்  படம்  பாருங்கன்னு  சொல்லுவேன் . "வேற  லெவல்" , "வேற  லெவல்"  ன்னு  சொல்லுறீங்களே  அப்படி  என்னதான்யா  இருக்கு! . சொல்லும் , சொல்லி  தொலையும்.  ன்னு  நண்பர்  ஒருவர் கேட்டு  இருக்கார் . பாஸ்  இது  உங்களுக்கு  மட்டும்  இல்லை  நிறைய  பேரு  கேட்டு  இருக்காங்க  ஆக  அல்லாருக்கும்  எனக்கு  புரிஞ்ச  அந்த  அவா  வை லைட்  ஆக  சொல்லி  விடுகிறேன்  .


இந்த  தலைப்பை  பார்த்த  வுடன்  நமக்கு  என்னா  தோணும்  இது  ஒரு  பேண்ட்   (கைக்கு  போடும்  பேண்ட்)   வகை    அதுதான் நினைவுக்கு  வரும் . இங்க  அந்த  பேண்ட்டுக்கும் படத்துக்கும்  சம்மந்தம்  இல்லை அத  மறந்துடுங்க  . இது  ஒருவிதமான டிராமா  கதை  அதிலும்  குடும்பத்தில்  நடப்பதால்  "குடும்ப  டிராமா"  ன்னு  நம்பளாவே   வச்சுக்கலாம்  . பாசு  அதுக்குன்னு  பச்சை  புள்ளங்க  இருக்கும்  பொது  படத்தை  போட்டுராதீங்க  ஒரு  18 , 20 வயசு  கடந்து  இருக்கோணும்    சொல்லிபுட்டேன் , அப்புறம்  அது  இதுன்னு  சண்டைக்கு  வரப்படாது . ஆமா  இந்த  படம்  யார்  பாக்லாம் . நீங்க  கிம்  கி  டுக்  படங்களை  ரசிப்பவரா  இருந்தால்  இந்த  கேள்வியை  கேக்க  மாட்ட்டீங்க .


 இருந்தாலும்  சொல்லுறேன்  . இந்த  படத்தை  கேரளா  திரைப்படவிழாவில்  திரையிட்டார்களாம்  , திரை அரங்கே  நிறைந்து  இருக்க  பெண்களும்   நிறைந்து  இருக்க , கிம்  கி  டுக்  உம்  திரைப்பட  விழாவுக்கு  வர  . படம்  திரையிடபட்டதாம் , ஆரம்பத்தில்  தொடங்கிய  ஆரவாரத்துடனே  இறுதி  வரை கை  தட்டலும்  கூச்சல்களுமாக  நகர்ந்து  இருக்கிறது.  என்பது  படத்தை  பார்த்த  ஒரு  கேரளா  காரர்  எழுதி  இருப்பதை  இணையத்தில்  மூலம்  படித்து  தெரிந்துகொண்டேன் . சிலர்   அதிர்ச்சிக்கு  உள்ளாளனர் , சிலர் மிரண்டும்  போயினர் ன்னு  சொல்லி  இருந்தார் . கொரியன்    நாட்டிலயே  தடை  செய்ய  கேரளாவில்  திரைப்படவிழாவில்  அரங்கம்  நிறைய  ஆரவாரத்துடன்  திரையிடப்பட்டு  இருக்கிறது  என்றால்  பார்த்துகொள்ளுகளேன்.

கதைய  எங்கருந்து  எப்படி  ஆரம்பிக்கலாம்,  எப்படி  சொல்லலாம்  ன்னு  நிறைய  நண்பர்கள்   படத்தை  பற்றி  சொல்லவே  யோசிக்கிறோம்.  ஆனா  அவர்  ஒவ்வொரு  முறையும்  ஒரு  படி  மேலே  ஏறி வித்தியாசமான   படங்களை  வெளி  விடுகிறார் . நண்பர்  ஒருவர் இந்த  படத்தை  பற்றிய  விமர்சனம்  ஒன்றில்  கமென்ட்  இட்டு  இருந்தார்  "இதுமாதிரி  ஒரு  படம்  நமது 100 வருட   தமிழ்  சினிமாவில்   இன்னும்  வரவில்லை"  என்று  சொன்னார் . 100 வருஷம்  இல்லை  இன்னொரு  300 வருஷம்  ஆனாலும்  டவுட்  தான் .


 அப்படியே  ஒருவேளை  முயற்சி  பண்ணி  இருந்தாலும்  சொல்றதுக்கு  ஒன்னும்  இருக்காது . அப்புறம்  அய்யய்ய  சொல்லுபவர்கள் , என்னடா  இதுலாம்  ஒரு  படம்  ன்னு  பதிவெழுத  வந்துட்டான்  ன்னு  சொல்லுபவர்கள் , நான்  ரொம்ப  நல்லவன்  ன்னு  முகமுடி  அணித்து  கொண்டிருக்கும்  நல்லவர்கள்  .  இன்னும்  தனக்கு  தானே  முடி  சூடா  மன்னன்  என்று  அவார்ட்  கொடுத்து  கொள்ளும்  நல்லவர்கள்  விலகி  கார்ட்டூன்  எதுனாச்சும்  பாருங்க . அப்படிப்பட்டவர்கள்  இதோடு  விலகி  பொழப்பை  பார்ப்பது  நலம் .


இது  ஒரு  ஊமை  படம்  என்பதால் . திரையில்  வரும்  முக்கிய  கதாபாத்திரங்கள்  மூவர்  யார்  என்று  புரிந்துகொள்ளவே  இன்னொரு  முறை  பார்த்தேன் . கொரியா  நாட்டில்  முதல்  திருமணத்திற்கு  பின்   ஒரு  சிலர்   கணவனுடன்  உறவு   முடிந்த  பிறகு  மற்ற  ஆண்களை  தேடி  விபச்சாரி  ஆக வும்  அல்லது  வேறொரு  திருமணமும்  செய்துகொள்வார்கள் . இதே  தான் ஆண்களும்  ஆண்  அவன்  விபச்சாரிகளிடம்  செல்பவனாக  மாறி  விடுவான் . ஆண்விபச்சாரி  ஆக  முடியாதே ;) .  ஆக  இந்த  இடத்திலேயே  நம் சூழலுக்கு  ஏற்ற  படம்  இல்லை  என்று  தெரிந்து  விடுகிறது , இங்கு  கதையில்     அப்பா  , அம்மா , அவங்களுக்கு  ஒரு  18 வயது  பையன்  (எல்லாம்  ஒரு  மனக்கணக்கு தான்) . தன்னுடைய  கணவன்  வேறொரு  பெண்ணுடன்  உறவு  கொண்டிருப்பதை  பார்க்கிறாள் .


தன்னுடைய  மகனும்  பார்த்து  விடுகிறான் . இதுவே  நம்ப  ஊரா  இருந்தா . கூட்டுரா சொல்வதெல்லாம்  பொய்   மேல  வெக்காத   கை நிகழ்ச்சிய  . இல்லாட்டி  நஜங்கள்  இது  உண்மைக்கான  தேடல் அப்படின்னு  கிளம்பி  அமர்கள  படுத்திடுவாங்க . அங்க  அந்த  வீட்டுக்காரம்மா நைட்டு  இவன்  படுதுருக்கும்  பொது  அவனோட ஆண்  உறுப்பை  அறுக்க  ஒரு கத்தியை  எடுத்துகிட்டு  ரூமுக்குள்  நுழைந்து  கிட்ட  தட்ட  நெருங்கி  விட்டால்.  அவன்  எப்படியோ  சுதாரிக்க . பக்கத்துக்கு  ரூமில்  தூங்கி  கொண்டு  இருந்த தன்னோட  மகன் . இவனும்  கொஞ்ச  நேரத்துக்கு  முன்னாடி  சுய  இன்பம்  கண்டு  கொண்டு  இருப்பான். அதையும்  பார்த்துவிட்டு  தான்  தாய்  செல்லுவாள்  அவனோட  ரத்தம்  தானே  இவன்  அப்பன்  புத்தி  தானே  மகனுக்கும்  வரும்  ன்னு  உலகத்துலேயே  எந்த  அம்மாவும்  செய்யாத  காரியத்தை  இந்த  அம்மா  செஞ்சிபுட்டு  அத  ஜெல்லி  சுவிங்கம்  மாதிரி  போட்டு  மென்று  விடுறாங்க . அறுத்தே  புடுவேன்  ன்னு  சொல்லி  கேட்டு  இருக்கிறேன் இதில்  தான்  பார்த்தேன்


அலறடித்து கொண்டு  கத்துகிறான் . இவனை  அவங்க  அப்பா  மருத்துமனையில்  சேர்த்து  அப்போதைக்கு  சிகிச்சை  கொடுத்து  காப்பாற்றி  கொண்டு  வந்து  விடுறாங்க . அதுக்கப்புறம்  அதுவே  இல்லாம பையன்  பல  கஷ்டம்  படுறான் . பையனுக்கு  இப்படி  இருப்பதை  தந்தையினால்  ஏற்று   கொள்ள  முடியவில்லை . அதுவே  இல்லாம  இனி  எதுவும்  இல்லை  . ஆனா  அதுக்குன்னு  இவர்  ஒரு  முயற்சில  இறங்குகிறார் . அதை  தன்னுடைய  மகனுக்கும்  சொல்லுகிறார் . இவர்  எப்படி  அதில்  இறங்கினார் . அந்த  பையன்  என்ன  ஆனா? , ஆக்சுவல் ஹா  இது  எதனை  முன்  வைக்கிறது  எல்லாம்  நான்  சொல்லி  பார்ப்பதை  விட  பார்த்து  விட்டு  வந்தால்  விளக்கமாக  பேசுவோம் . ஆரம்பத்துல  இருந்து  முடிவ  வர  நானே  சொல்லிட்டா  நீங்க  என்னத்த பாப்பீங்க .  யாரும்  முயற்சி  செய்யாதீங்க தோழரே ;)


கண்டிப்பாக  நிச்சயமாக  சத்தியமாக  . பெரியோர்களுக்கான படம் அதை  எல்லாம்  கொஞ்சம்  பார்த்துகொள்ளுங்கள் .  என்னை  கேட்டால்  இரண்டு  விதமான  பதில்  தருவேன்  வேற  லெவல்  படமும்  ன்னு  சொல்லுவேன்  . என்னை  சற்றே  திகைக்க  வைத்த   படமுன்னும்  சொல்லுவேன் ;) .       திருமண  மாணவர்கள்  மனைவி   உடன்  பார்ப்பதை  தவிர்த்து  கொள்ளுங்கள் .  பாதுகாப்பு  முக்கியம்  அமைச்சரே .

நன்றி

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

Duel (1971) துரத்தும் டேங்கர் லாரி

ஒரு  மாதத்திற்கு  முன்பு  ஏற்காடு  ல்  இருந்து  இறங்கும்  பொழுது  நானும்  எனது  நண்பனும்  வண்டியை  முந்திக்கொண்டு  சைடு  எடுத்து  சென்றோம்  எங்களுக்கு  முன்பே  பல்சரில்  சென்ற  ஒரு  படுபாவி  சைடு  எடுக்கும்  போதே  அந்த  லாரிக்காரனை  பார்த்து  நடுவிரலை  உயர்த்தி  காட்டிவிட்டு   தான்  சென்றான். அந்த  லாரிக்காரர்  இவன்  செய்த  இந்த  சேட்டையால்  எங்களை  அங்கிருந்தே துரத்த  ஆரம்பித்து  விட்டார்.  இதில்  வேறு  வண்டிகாரன் செய்த  கடுப்பை  எங்கள்  மேல்  காட்டினான் . ஹாரனை  விடாமல்  அழுத்தி  அழுத்தி  எங்களை  பயமுறுத்தி  பள்ளத்துக்கு  அருகில் எங்களை  சொர்கத்துக்கே   அனுப்பி  இருப்பார் . எந்த  சாமி  புண்ணியமோ  தெரியவில்லை  தப்பித்து  வந்துவிட்டோம் .  இந்த  திரைப்படத்தை    சமீபத்தில்  பார்த்த  பொழுது  எனக்கு  நினைவுக்கு வந்து  விட்டது சரி கதை   க்கு  வருவோம் .





  ஆம்  இங்கு  லாரிக்கு  பதில்  ஒரு  டாங்கர்  ட்ரக் . பைக்கு  பதில்  கார் . கதையின்  தொடக்கத்தில்  மெதுவாக  சென்று  கொண்டிருக்கும்  ட்ரக் ஐ    சைடு  எடுக்கிறார் . யாருடா  இவன்  நம்பலே  முந்திக்கொண்டு  போகிறானே  என்று  ட்ரக்  உம் போட்டி  போட்டு  கொண்டு  சைடு  எடுக்கிறது . இப்படி  மாறி  மாறி  சைடு  எடுத்துக்கொண்டே  இருந்தால்  வேலைக்காகாது என்று  ட்ரக் ட்ரைவர்  இவரை  இடித்து  தள்ள  வேகத்தை  மிரட்டுகிரார். மரணத்தின்  விளிம்பு  வரை  சென்று  தப்பிக்கும்  கார்  காரர்  இவனிடம்  இருந்து  உயிர்  தப்பி . ஓட்டலுக்கு  செல்கிறார் .

 ஏழரை  அங்கும்  வந்துள்ளது   அந்த  பத்து  நிமிஷம்  மிரளுது . மீண்டும்  அங்கிருந்து  கிளம்பும்  இவரை  அதே  ட்ரக்  துரத்த   ஆரம்பிக்கிறது . ிஆரம்பத்தில்லி  இருந்தே  படம்ரு  வேகமாக  செல்கிறது  என்றால்ந்து  இதற்கு  மேல்  இன்னும்  கொஞ்சம்  ஸ்பீட்  ஏற்றி  கொண்டு  செல்கிறது . இறுதியில்   இவர்  தப்பித்தாரா ? இல்லையா ?  யார்  இந்த  ட்ரக்  ட்ரைவர் . யார்  இந்த  ஓட்டுனர்  என்பதெல்லாம்  படத்தை  பார்த்து  தெரிந்துகொள்ளுங்கள் .

அவசியம்  அனைவரும்  பார்க்க  வேண்டிய  நல்ல  திரைப்படம்  தான் , ஒரு  விதமான  விறுவிறுப்பு  கலந்த த்ரில்லான  அனுபவமாக  இருக்கும் . இயக்குனர்  பற்றி  பலர்  நிறைய  சொல்லி  இருக்கிறார்கள்.  நான்  ஒன்னும்  புதிதாக  சொல்ல  போவதில்லை . இவருடைய  முதல்  படமாக  சொல்லப்படும்  இந்த  படத்திலே  அவர்  சிக்சர்  அடித்து  இருக்கிறார். இன்னமும்  இவருடைய  பல  படங்கள்  புகழ்பெற்றவையே.

முக்கியமாக  கேமரா , ஒளிப்பதிவை பற்றி  சொல்லியே  ஆக  வேண்டும் . அப்போது  இருந்த  டெக்கனாலஜியை வைத்துகொண்டு  எப்படி  எல்லாம்  ரவுண்டு  கட்டி  அடிக்க  முடியுமோ  அப்படி  அடித்து  இருக்கிறார்கள் . அதிலும்  படத்தில்  பின்னணி  இசை  அவ்வளவே  இல்லை  . நான்  ஹெட்  போன்  போட்டு  கொண்டு  பார்க்கும்  பொழுது  கேமரா  நகர்வும்  அதவாது  அந்த  முதல்  காட்சி  இந்த  ட்ரக்  சவுன்ட்  லெப்ட்   சைடு  காதுல  தொடங்கி  ரைட்  சைடு  வந்து  நிக்குது . சவுன்ட்  இயற்கை  சத்தமே  என்றாலும்  அதற்கான  பலனை  பார்க்கும்  பொது  நம்மை  உணர  செய்து  இருக்கிறார்கள் .
வருங்கால  ஒளிபதிவாளர்கள் . திரைக்கதை  அமைப்பாளர்கள் இந்த  படத்தை  நிச்சயம்  பார்க்க  வேண்டும்  என்று  பரிந்துரைக்கிறேன் .



இந்த  படம்  மாதிரியே  கான்செப்ட்  வைத்துள்ள  பாஸ்ட்  அன்ட்  furious புகழ்  , நடிகர் பவுல்  வாக்கர்  நடித்த  ஒரு  படம்  . joyride என்று  முதல்  பாகம் மட்டும்  நான்  பார்த்து  இருக்கிறேன்  , நன்றாக  இருக்கும்  இதையும்  தவறமால்  பார்த்து  விடுங்கள்  .  மற்றுமொரு  அட்டகாசமா  படமான  wildtales ல்  மூன்றவாது   குறும்படமாக  இடம்  பெற்றிருக்கும்  ஒரு  குறும்ப்படமும்  இதே  கான்செப்ட்  தான்  இங்கு  காரும்  காரும்  விளையாட்டில்  குதிப்பார்கள் . வேற  லெவலில்  இருக்கும் . இந்த  படத்தை  சமீபத்தில்  எனது  நண்பர்களுக்கு  காட்டின  பொழுது  யார்ரா  இவனுங்க  லூசு  பயலுக  ன்னு  சொன்னாக . ஆக்சுவல்  ல  இவங்களுக்கு  இதோட  கான்செப்ட்  புரியாம  இருந்து  இருக்கலாம் . நீங்க  கண்டிப்பா  பாருங்க  மிக  சிறந்த  படம் .


நன்றி

#சிவஷங்கர் 

0 உங்கள் கருத்து:

Trash (2014) தப்பிக்க போராடும் சிறுவர்கள்

சிறுவர்களை  வைத்து  எப்படி  படம்  எடுக்க  வேண்டும்  சொல்லி  தரும்  TRASH

இப்படி  கதைக்குள்  கதையை கொண்ட கதை அமைப்பும் ,  அதில்  மறைந்து  இருக்கும்   ட்விஸ்ட்க்களும்    அதை  அவிழ்விக்க போடும்  திட்டங்களும் .  அதனால்  வரும்  சிக்கல்களோடு தப்பிக்க  போராட   போரட்டத்தை பல  திருப்புமுனைகளோடு    விறுவிறுப்பாக கொஞ்சம்  கூட  தொய்வில்லாமல்    படம்  முழுவதும்  சுவாரசியமான  நிகழ்வுகளாகவே  இருந்தா  எப்படி  இருக்கும்  . அப்படி  ஒரு  அட்டகாசமான  திரைப்படம்  தான் Trash. இறுதி  வரை  பின்னணி   இசையும் SOUNDTRACK ம் வேற  லெவல் . கண்  இமைக்காமல்  பார்க்க  கூடிய  படம் .







இப்படி  ஒரு  கதைகளத்தில்  அசத்தி  இருப்பவர்கள்  மூன்று  சிறுவர்கள் ஆம் 
பதினான்கு  வயதுடைய  மூன்று  சிறுவர்கள்  தான்  படத்தின்  நாயகர்கள் பிரம்மிக்க  வைத்துவிட்டார்கள், ஷாட்  பை   ஷாட் . படத்தை  பார்த்து  முடித்த  பிறகு  மூவரை  பற்றி  இணையத்தில்  தேடினால்  இவர்களுக்கு  இதுதான்  முதல்  படமாம் . நம்பவே  முடியவில்லை  . நடிப்பில்  எல்லாரையும்  தூக்கி  சாப்ற்றுவாங்க போல . இவர்களுக்கு  உதவியாக  நடித்திருக்கும்  சர்ச்  பாதரும் , அவருடைய  மகளும் சிறுது  நேரம் அப்ப அப்ப  வந்தாலும்  அசத்தல்  படத்தை  நிச்சயமாக  பாரத்தே  தீர  வேண்டும்  . படத்தை  பற்றி  சொல்கிறேன் .  

குப்பை  மேட்டில்  வாழ்பவர்கள் , மற்ற  மனிதர்களை  போல  சராசரி  வாழ்க்கை  வாழ  முடியாத  இவர்கள் தினமும்  அங்கு  வந்து  கொட்டும்  குப்பைகளின்  மூலம் கிடைக்கும்  பொருள்களை   வைத்து   வருமானத்தை  ஈட்டி  வாழ்கையை  நடத்துபவர்கள் . கிட்ட  தட்ட  உறவினர்கள்  என்று  சொல்லிக்கொள்ள  யாருமில்லாதவர்கள் தான்  அதிகம்  . அப்படி  மூன்று  சிறுவர்களில்  ஒருவனான ஒருத்தனுக்கு  ஒரு  பர்ஸ்  கிடைக்கிறது  . அதில்  பணமும்  இருக்கிறது  . அதை  எடுத்தவுடன்  தன்   நண்பனுக்கு  தெரியபடுத்துகிறான் . பிறகு  ஒரு  பெரிய  பிரச்சனை  வருகிறது .

அந்த  பர்ஸை   கண்டுபிடிக்க  போலீஸ்   அந்த  இடைத்தை  நெருங்குகிறது .   அதிலிருந்து  ஓட்டம்  தொடருகிறது , ஜம்பிங்   ரேசிங் பிளானிங்  ட்விஸ்ட்ங் த்ரில்லிங்ன்னு   விறுவிறுப்பு  குறையாமல்   இறுதி  வரை  அதே  மின்னல்  வேகத்தோடு  தான்  கதையும்  திரைக்கதையும்  பயணிக்கிறது   ..   என்ன  ஆனது ?  தப்பித்தார்களா இல்லையா ?  அந்த  பர்ஸ்  யாருடையது ?  அதனால  வந்த  பிரச்சனை  என்ன  ?  எல்லா  கேள்விக்கும்  பதில்கள்  படத்தில்  சொல்லி  இருப்பார்கள்  பார்த்து  தெரிந்துகொள்ளுங்கள் .

சமீபத்தில்  திருச்சி  சென்ற  பொழுது  ஒரு  லோக்கல்  தொலைகாட்சியில்  பைசா  என்ற  தமிழ்படத்தை  பார்க்க  நேர்ந்தது . இதே  கான்செப்ட்  தான்  ஹீரோ  குப்பை  பொறுக்குபவர்  அவருக்கு  ஒரு  பேக்   கையில்  கிடைகிறது , அதனால்  ஒரு  பிரச்சனை  அவரை  துரத்த  அதிலிருந்து  தப்பித்தாரா  ?  இல்லையா  என்பதுதான் . நன்றாக  வந்திருக்க  வேண்டிய  படம்  படத்தின்  முன்னோட்டம்  மட்டுமே  எனக்கு  பிடித்தது  . TRASH ன்  கதைக்களம் கதையமைக்க  பட்டிருக்கும்  விதம்  வேறு . இந்த  கான்செப்ட்  ஐ  கொண்டு  எப்படி  வேண்டுமாலும்  கதை  அமைக்கலாம்  . எனக்கு  Trash   மறக்க  முடியாத  ஒரு  திரைப்படமாக  அமைந்திருகிறது . மீண்டும்  மீண்டும்  பார்க்க  தோன்றுகிறது . 


நாவலை  மையபடுத்தி  எடுக்கப்பட்ட  இந்த  திரைப்படம்  திரைப்படவிழாகளில்  திரையிடப்பட்டு  பல  விருதுகளை  வென்றும்  பரிந்துரைக்க  பட்டும்  இருக்கிறது  . என்னுடைய  நண்பர்கள்  அனைவரும்  இந்த  படத்தை  பார்க்க  வேண்டும் . நல்ல  படங்களை  தவற  விட  வேண்டாம் இதுபோல  படங்கள்  தமிழில்  வரவேண்டும்  தமிழ்  ரசிகர்களையும்  கவர  வேண்டும்  என்பது  என்னுடைய  ஆசை .  வருங்கால  இயக்குனர்களே  நிறைவேற்றுங்கள் . இந்த  திரைப்படம்  என்னுடைய  நண்பர்  ஒருவர்  எனக்கு  கொடுத்தார்  அதில்  நான்  பார்த்தேன். நீங்க  எங்கயாவது  தேடி  எப்படியாவது  பார்த்துவிடுங்கள் .

நன்றி 

#சிவஷங்கர்.

0 உங்கள் கருத்து:

Ottaal (2015) ஒரு சிறுவனின் கதை

வங்கா  என்ற  குறுங்கதையை மையபடுத்தி  எடுக்கப்பட்ட  ஒரு  அழாகான  கேரள  திரைப்படம் . நிச்சயமாக  அனைவரும்  பார்க்கவேண்டும் . பல  திரைப்படவிழாகளில்  கலந்துகொண்டு  வெற்றிகளை  சூடிய பாராட்டை  பெற்ற  திரைப்படம் 


கேரள அழகியலோடு  சேர்ந்து இயற்கையான  பல  கதாபாத்திரங்களை முன்னிறுத்தி . சமூகத்தில்  இன்னனும்  இப்படி  இருந்துகொண்டு  இருக்கிறது  என்று  முடித்திருக்கிறார்  இயக்குனர் , சமூகத்தில்  என்று  சொன்னவுடன்  பல  சிந்தனைகளை  நினைக்க  வேண்டாம் . இந்த  திரைப்படம்  சொல்லும் . நான்  சொல்லி  உங்கள்  எதிர்பார்ப்பை  வீணடிக்க  விரும்பவில்லை .

வாத்து  மேய்க்கும்  வயதானவர் அவருக்கு ன்னு  உறவு  என்று ஒரு  சிறுவன் . இருவரும் ஒரு  கிராமத்தை  வந்தடைகின்றனர் . அந்த  மாதிரி  ஒரு  கிரமாத்தில்   ஒருநாளாவது  இருக்க  வேண்டும் . அப்படி  சகல  அழகியலும் பொருந்திய  ஊர் . கள்ளங்கவடம் இல்லா  மனிதர்கள்  . ஒவ்வொரு  காட்சியயும்  வர்ணித்து  கொண்டே  இருக்கலாம். சிறுவன்   தாத்தாவிடம்  பேசும்  காட்சிகள்  அவனுடைய  அன்பான  மனசு . வசனங்கள்  என  பார்க்கும்  ஒவ்வொன்றையும்  செதுக்கி  இருக்கிறார்கள்  என்னால்  மறக்க  முடியாத  ஒரு  படமாக  இருக்க  போகிறது  . அனைவருக்கும்  அப்படிதான்  என்பதில்  மாற்று  கருத்து  இல்லை .

  அப்படி  ஒரு  அருமையான  சூழல் .   அவர்கள்  இருவருடன்  மட்டும்  இல்லாமல்  அங்கு  வசிக்கும்  நிறைய  நபர்களை  முன்  நிறுத்தி  செல்வார்கள்  உதரானத்திற்க்கு  அவன்  தோழன்,பெயரில்லா  நாய்  , போஸ்ட்  மென் , தினமும்  மீன்  தூண்டில்  போட்டு  மீன்  புடிக்கும்  முதியவர் .  பாடிக்கொண்டே  வேலையே  செய்பவர் , வழிகாட்டி என  மனதில்  இருந்து  நீக்கமறா  நினைவில் நிற்கிறது . 







இதுதான்  கதை  என்று  சொல்லிவிடலாம் . ஆனா சொல்ல  மனம்  ஒத்துழைக்க  வில்லை  பார்த்து  விடுங்கள்  நல்ல  திரைப்படம் . 2015 ஆம்  ஆண்டே திரைப்பட  விழாக்களில்  கலந்துகொண்டது , திரைக்கு  தற்போது  நவம்பர்  ஆண்டு தான்  வந்தது  அதே  சமயம்  இணையத்திலும்  அபிசியலாக வெளியிடப்பட்டது . பார்த்துவிட்டு  தங்கள்  கருத்துக்களை  பகிருங்கள் .

நன்றி 



#சிவஷங்கர்


0 உங்கள் கருத்து:

Kristy (2014) துரத்தும் கொலைகாரர்கள்



கதை  ஓரளவிற்கு  நல்ல  கதை  தான்  . முக்கியமாக  திரைகதையில்  அசத்தி  இருக்கிறார்கள் . திரைக்கதை   எழுத  கற்றுத்தரும்  படங்களில்  இந்த  படத்தையும்  சேர்த்துக்கொள்ள  விரும்புகிறேன் . படத்தை  பற்றி  பார்ப்போம்  அதிக  கதாபாத்திரங்கள்  இல்லாமல்  அசத்தலான  ஒரு  திரைப்படத்தை  கொடுத்து  இருக்கிறார் இயக்குனர் Oliver Blackburn . 




கல்லூரியில்  படித்துகொண்டிருக்கும்  ஜஸ்டீன், கல்லூரி  விடுமுறை  நாளில் தன்னுடன் தங்கி  இருக்கும் தோழி    வீட்டுக்கு  போகின்றதால் , அவளோட  காரை  விடுதியில்  இருக்கும்  ஜஸ்டீனிடம்  கொடுத்துவிட்டு  போகிறாள் . இவளும்  அதை  எடுத்து  சென்று  தனக்கு  தேவையானதை வாங்க    ஷாப்  க்கு  செல்கிறாள் , அங்கு  ஒரு  விசித்திரமான  தோற்றமுள்ள  ஒரு  பெண் , "உன்னோட  தலைமுடி  அழகா  இருக்கு" . "உங்கிட்ட  அழகான  கார்  இருக்கு" . "நீதான்  கிறிஸ்டி"  உன்ன  கொலை செய்ய   போறேன்  ன்னு  சொல்லுறாள் . இவளுக்கு  ஒன்றுமே  புரியவில்லை . அங்கிருந்து  கிளம்புகிறாள்  போகும்  வழியில்  இந்த  விசித்திர  பெண்  சில  இடையூறு   கொடுக்க , அங்கிருந்து  வீட்டுக்கு  செல்கிறாள் .

 அதற்கு  பிறகு  வேகம்  பிடிக்க  ஆரம்பிகிறது  கதை . இந்த  விசித்திர  பெண்  அவளை  கொல்ல   அவளுடைய  விடுதிக்கே மூன்று  முகமுடி  அணிந்த  நபர்களுடன்  வருகிறாள் , .விடுதி  பாதுகாப்பாளர் அருகில்  இருக்கும்  நண்பன்  ன்னு  பழியாகுறாங்க . இறுதியில்  அங்கிருந்து  அவள்  தப்பித்து  சென்றாளா  இல்லையா? யார்  இந்த  கிரிஸ்டி ?  என்பது  மீதி கதை கிளைமாக்ஸ் .  ஒரு  நல்ல  பிளானிங்  movie திருப்புனையாகட்டும்  ட்விஸ்ட்  ஆகட்டும் ஒரு  நல்ல  படமே . எதிர்பார்ப்பை  பூர்த்தி  செய்தது , குறிப்பா  திரைக்கதையும்  காட்சி  அமைப்பும் .


இந்த  கதை  என்னவோ  சிம்பிள்  ஆக  தான்  இருக்கிறது  என்று  நம்  மனம்  சொல்லும் . இது  எதுக்கு  போய்  பார்த்துகொண்டு  ன்னு  அதில்  தான்  இந்த  படத்தின்  திரைக்கதை  எழுத்தாளர்  இது  படமாக  அல்லாமால்  ஒரு  பாடமாக  எடுத்திருக்கிறார் . திரைத்துறைக்கு  வரவிற்கும்  நண்பர்கள்  இந்த  படத்தினை  கட்டயாம்  பார்க்க  வேண்டும்  . காரணம்  என்னவென்றால் ஆரம்பத்தில்  ஒரு  காட்சி   வைக்கிறோம்  இது  எதுக்குடா  தேவையே  இல்லாம  அப்படின்னு  நினைப்போம்  அனா  பின்னாடி  ஒரு  திருப்பு  முனையா  இந்த  காட்சி  அமையபோகுது  ன்னு  சொல்லாம  சொல்லுகிறார்கள் . இப்படி  படத்தில்  அடிக்கி  கொண்டே  பார்க்கலாம் . படமாக  பார்க்க  விரும்புபவர்களுக்கு  ஒருமுறை  பார்க்க  கூடிய  படமே . தவறமால்  பார்த்து  வையுங்கள்  நேரம்  வீணடிக்க  படாத  ஒரு  நல்ல  த்ரில்லர்  படமே  ஏன் பரவலாக  பேச  படவில்லை  ன்னு  தெரில . 
நெட்ப்ளிக்ஸ்   வைத்திருப்பவர்கள்  அதில்  பாருங்கள்  நல்ல  தரத்தில்  ஹெட்போன்   போட்டு பார்க்கும்  அனுபவம்  வேறு, இல்லையென்றால்  youtube  லும்  இருக்கிறது  . இரவு  நேரங்களில்  இது  போல  த்ரில்லர்  பார்ப்பது  நலம்  ஏன்னா  நான்  அப்போ  தான்  பார்த்தேன்  . ஒரு  விறுவிறுப்போடு  கலந்த  த்ரில்லரையும்   பார்க்கும்  நமக்கு  சிறு  பயத்தையும்  தந்துவிடுகிறது .படத்துக்கு  ரேட்டிங்  கீட்டிங்  லாம்  பார்த்து  தான்  பார்ப்பேன் என்று  நினைபவர்கள்  . தயவு  செய்து  கிளம்புங்கள்  காத்து  வரட்டும் .

நன்றி 

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

Tracers (2015) தடைகளை தாண்டோடுபவன்

இந்த  திரைப்படத்திற்கு கதை  ஒன்றும்  பலமாக  இல்லை , நான்  பார்க்க  முக்கிய  காரணம்  பர்க்கூர் என்கிற  அந்த  விளையாட்டுக்கு  தான் , பாரிஸ்  நகரில்  பொழுதை  போக்க இளைஞர்களில் இருந்து  எல்லோரும்  பில்டிங்  க்கு  பில்டிங்  தாவி  தாவி  சாகசம்  பண்ணுறது  தான் அந்த  விளையாட்டு  . ஆனா  போகிற  போக்கில்  கொள்ளை  அடிப்பதற்கும் , சில  பல  கைமாற்று  வேலைக்காகவும்  இந்த  பர்க்கூர் ஐ  தெரிந்துகொண்டு சிலர்   கலந்து  கட்டி  அடிக்கின்றனர் .   இந்த  வகையில்  எனக்கு  மிகவும்  பிடித்த  படம்  என்றால் District 13 சீரீஸ்  தான் . கதையிலும்  அசத்தி  இருப்பார்கள் .





இந்த படத்தை எப்போது  பார்த்தாலும்  முதல்  முறை  பார்க்கிற  அனுபவம்  போல  தான்  இருக்கும் . அதில்  நடித்த David belle அசத்தி  இருப்பார் . நிச்சயமாக  நீங்க  District 13 1,2 ஐ  பார்த்திருக்க  வேண்டும் .இந்த  படத்தை  பற்றி  எழுதினால் கிட்ட  தட்ட  ரெண்டு  மூணு  பக்கம்  போகும் , அந்த  நடிகரை  பற்றியும்  நிறைய  சொல்லலாம் அதை பற்றி  பிறகு  சொல்லுகிறேன் .  சமீபத்தில்  கூட  ஒரு  பெண் இந்த  பர்க்கூர்  பில்டிங்க்கு பில்டிங்    அசத்திய   காட்சிகள்  இணையத்தில்  வைரலானது , பக்கமாக  வந்த   மலையில்  சைக்கிளில் வித்தை  காட்டிய  ஒருவரின்  வீடியோ அனைவரையும்  அச்சுறுத்தியது .  சரி  இந்த  படத்தை  பற்றி  பார்ப்போம்  .


ஹீரோ ஒரு கொரியர் பாய் , அவன்  வேலையே  அதுதான்  . சைக்கிளில்  முந்திக்கொண்டு  செல்லுவதில் கெட்டிக்காரர் , ஒருநாள்  எதிர்பார்த்த  விதமாக  ஒரு  பெண் இவள்  மீது  மோதுகிறாள் அங்கிருந்து  நட்பு  வளர்கிறது .  இவனுக்கு  கடன்  பிரச்சனை  வேறு  இருக்கிறது  அவன்  வேற   அடிக்கடி  வந்து  இருக்கிறத  பிடுங்கி  கொண்டு  போறதும் . வார்னிங்  கொடுத்து  போகுறதும்  வழக்கம் . முதல்ல  மோதுன  பெண்  செய்யும்  அந்த  பர்க்கூர்  பார்த்து  அதை  கற்றுக்கொள்ள  முயல்கிறான் . பிறகு அவங்க  டீம்  ல  சேர்ந்து  கொண்டு  கொள்ளை  அடிக்கிறான் . சிக்கலில்  சிக்கிகொண்ட  இவன் எப்படி  தப்பிக்கிறான்  . இறுதியில் தன்னுடைய  கடனை  அடைத்தானா  இல்லையா ?  என்பதெல்லாம்  மீதி கதை .

கொள்ளையடிக்கும்  காட்சிகளையும் , திட்டம் தீட்டும்   காட்சிகளையும்  சுவாரஸ்ய  படுத்தி  இருந்தால்  இன்னும்  விறுவிறுப்பாக  இருந்திருக்கும் .
கதை  சுவாரஸ்யம்  இல்லை  என்பது  பார்க்கும்  பொது  எனக்கும்  புரிந்தது . இருந்தாலும்  அந்த  பர்க்கூர்  காட்சிகளுக்ககவும்  தப்பிக்கும்  காட்சிகளுக்காகவும் தாரளாமாக  பார்க்கலாம்  . நெட்ப்ளிக்ஸ்   வைத்திருப்பவர்கள்  அதில்  பார்க்கலாம் . youtube ல் 25  பணம்  கட்டி  HD   தரத்தில்  பார்க்கலாம் . மேலேயே   சொல்லிவிட்டேன் இது  எல்லோருக்கும்  பிடிக்கும்  படமா  ன்னு  சொல்ல  முடியாது , நான்  பார்க்கூர்  காட்சிகளுக்காக பார்த்தேன் . பிறகு  நோட்டை  கொட்டை ன்னு  சண்டைக்கு  வந்தா  கம்பெனி  பொறுப்பாகாது. கேமரா  ஏங்கில்களில்    லாம்  அசத்தி  இருப்பார்கள் . வருங்கால  கேமரா   மேன்கள் நீங்கள்  இந்த  படத்தை  தாரளாமாக  பார்க்கலாம்  இணையத்தில்  அந்த  மேக்கிங்   பற்றி பாருங்கள்



நன்றி

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

Tunnel (2016) உயிர் வாழ போராட்டம்

 A Hard Day (2014) திரைப்படத்தின்  மூலம்    வெகுவாக  கவர்ந்த  இயக்குனரின்   அடுத்த  படமான  Tunnel .  முன்னோட்டத்தை  மட்டும்  பார்த்துவிட்டு  திரைப்படத்திற்காக காத்திருந்தேன் , சமீபத்தில்  கோவா  திரைப்பட  விழாவில்  இந்த  திரைப்படத்தை  பார்த்த  நண்பர்  ஒருவரிடம்  கேட்டேன்  படம்  சிறப்பு  ஆனால்   பொறுமை  அவசியம்  என்றார் . பிற  மொழி  திரைப்படங்கள்  என்றாலே பொறுமை  அவசியம்  தானே " பொறுமை  கடலினும்  பெரிது"  . எப்படியோ  இணையத்தில்  வந்த  வுடன்  தரவிறக்கி  வைத்துவிட்டேன் . இன்றுதான்  ஒருவழியாக  பார்க்க  முடிந்தது .




Tunnel By So Jae-Won , நாவலை  மையபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும் .  இந்த  திரைப்படம்  Disaster வகையை  சார்ந் த்ரில்லர்  டிராமா  .  Tunnel தரைக்கு  அடியில்  செல்லும்    பாதை அல்லது  குகை  பாதை அல்லது  தொடர்வண்டி  பாதை , தண்ணீர்  வழி   பாதை  ன்னு  அனைத்திற்கும்  பொருந்தும் , ஒரு  கிலோ  மீட்டரில்  தொடங்கி  அதிகபச்சமாக  40 கிலோ  மீட்டருக்கு  மேல்  ரயில்  tunnel  பாதைகள்  அமைக்க  பட்டுள்ளன , இணையத்தை  நாடினால்  அதனை  பற்றி  முழுமையாக  தெரிந்துகொள்ள  முடியும் . கதைக்கு  வருவோம் .

படத்தின்  தொடக்கத்திலேயே ஒரு  பெட்ரோல்  பங்க் ல ஒரு  சிறு  கோபத்தோடு  தண்ணீர்  பாட்டிலை  வாங்கி உள்ளே   தூக்கி  போட்டுட்டு  அந்த  இடத்தை  விட்டு  நகருகிறார்  .     தன்  மகளுடைய  பிறந்தநாள்   கேக்கை  வாங்கிகொண்டு  வீட்டிற்கு சென்றுகொண்டு  இருக்கிறார் . தொலைபேசியில்  உரையாடிக்கொண்டே   Tunnel ஐ  கடக்கும்  பொழுது  இடையில்  ஏற்பட்ட  அதிர்வுகளால் , அப்படியே  சரிந்து  விழுகிறது இரண்டு  நுழைவு  வாயிலுக்கு  இடையில்  மாற்றிகொல்கிறார் ..

 தொலைபேசியில் மூலம்   எமர்ஜென்சி யை  தொடர்பு கொள்கிறார் , ஒருவாரம்  ஆகும்  இதனை  அப்புற  படுத்தி  இவரை  காப்பாற்ற . அதுவரை  இருக்கும்  தண்ணீரை   பயன்படுதுகொண்டு  இருக்குமாறு  சொல்கிறார்கள் , இவரை  காப்பாற்ற  உள்ளே  சென்றவர்கள்  மீண்டும்  அந்த  தீடீர்  அதிர்வுகள்  வந்ததால்  தப்பித்து  வெளியே  வருகின்றனர் . , உள்ளே  ஒருவர்  இருக்கிறார்  எப்படியாவது  காப்பாற்றிட  வேண்டும்  என்று  பல  முயற்சிகளை  கொடுத்து  பார்கின்றனர் . எவ்வளவு  முயற்சி  கொடுத்ததும்  , உள்ளிருப்பவரை  காப்பாற்றுவது  மாதிரி  தெரியவில்லை .

 உயிர்  வாழ்வதற்கு  அவரும் , அவரை  காப்பாற்ற  இவர்களும்  போராடும்  இரண்டு  மணி  நேரம்  போராட்டம்  தான்  இந்த  திரைப்படம் . இரண்டு  மணி  நேரம்  திரைப்படம்  தான்  , அவரை  காப்பாற்றினார்களா ? என்ன  ஆனது  என்பதெல்லாம்  மீதி  கதை .  நடிகராக  நடித்திருப்பவரும் , அவருடைய  மனைவியும் , துணை  காத்தாப்பாத்திரமான  ஒரு  அதிகாரியும்  அட்டகாசமான  நடிப்பை  வெளிப்படுத்தி  உள்ளனர் . திரைப்படவிழாகளில்  திரையிடப்பட்ட , இந்த  திரைப்படத்தை  தவற  விடவேண்டாம்  பார்த்தல்  உங்கள்  நேரம்  வீணடிக்க  பாடாது  என்பதில்  மாற்று  கருத்து  இல்லை . 

பொதுவாக  இந்த  திரைப்படங்கள்  உண்மை  கதையை மையபடுத்தி  எடுக்க  பட்டவையாக  இருக்கும்  , இது  நாவலின்  திரை  வடிவம் , பார்க்கும்  பொழுது  அப்படியே  உண்மையாகவே  இருந்தது . கொரியன்  மொழியில்  இந்த  மாதிரி  திரைப்படத்தை  பார்ப்பது  இதுவே  முதல்  முறை .  ஆங்கிலத்தில்  இதுபோல  சில  படங்கள்  வந்துள்ளன  . அதில்  என்னை  வெகுவாக  கவர்ந்த  127 hours, buried,break,all is lost. போன்ற  திரைப்படங்கள்  ஒரே  ஒரு  கதாபாத்திரத்தை  வைத்து  திரைப்படம்  முழுக்க  நம்மையும்  கூடவே  அதிர  செய்வார்கள்  .

அப்படி  பட்ட  திரைப்படங்களின்  வரிசையில்  இந்த  கொரியத்  திரைப்படத்தையும் வைக்க  விரும்புகிறேன் . பரபரப்பான கதையில்  சுவாரஸ்யங்களை  சொல்ல  வில்லை  பாருங்கள்  நீங்களே புரிந்துகொள்வீர்கள் .கண்டிப்பாக  அனைவரும்  பார்க்க  வேண்டும் . பார்த்துவிட்டு  தவறாமல்  உங்களுடைய  கருத்துக்களை  பகிர  வேண்டுகிறேன்

நன்றி

#சிவஷங்கர்


0 உங்கள் கருத்து:

A Bittersweet Life (2005) ஒரு விசுவாசியின் கதை

A Bittersweet Life , சமீபத்தில்  நான்  பார்த்த  கொரியன்  படங்கள்  தொகுப்பில்  இந்த  இயக்குனரின்  மூன்று  படங்கள்  இடம்  பெற்று  இருந்தன , மூன்றும்  மூன்றுவிதமான வகையில்  சுவாரஸ்யமான  முறையில்  கதை  சொல்லல் , விறுவிறுப்புக்கும் பஞ்சம்  இல்லாத  அந்த  படங்கள்  என்னை வெகுவாக   கவர்ந்து  விட்டன  இயக்குனருடைய  மற்ற  படங்களை  பார்க்க  வேண்டும்  என்கிற  எதிர்பார்ப்பை  இந்த  படங்கள் செய்துவிட்டன . A Bittersweet Life (2005) க்கு  வருவோம்  கதையின்  தொடக்கத்திலே  மரக்கிளைகள் அசைவுகளோடு ஒரு சில வரிகளுடன்  தொடங்கும். சீடன்  குருவிடம்  பேசுவது  போல  அது  என்னன்னு  பாக்கும்  பொது  தெரியும் . 





ஹீரோ தனது  முதலாளிக்கு  விசுவாசியாக  இருப்பவர் , அவரிடம்  சேர்ந்ததில்  இருந்தே  அவர்  சொல்லும்  வேலைகளை  மறுக்காமல்  செய்பவர் . ஒரு  நாள்  தான் வெளியூர்  செல்ல  போவதாகவும் . எனக்கு  ஒரு  காதலி  இருக்கா , சின்ன  பொண்ணு நான்  இல்லாத  நேரத்துல  அவளை  தேடி  ஒரு  இளைஞன்  வரமாதிரி  இருக்குது . நான்  வெளியூர் போயிட்டு  வரேன்  அதுக்குள்ள  அவங்க  ரெண்டு  பேரையும்  நீ  சந்திச்சா  எனக்கு  உடனே  கால்  பண்ணு  இல்லைனா  அவங்கள  கொன்று  விடு  ன்னு  சொல்லிவிட்டு  செல்கிறார் .

இவர்தான்  விசுவாசமான  ஆள்  ஆச்சே . அந்த  பெண்ணை  சந்திக்கிறான் , பாஸ்  உங்களோட  இருக்க  சொன்னார்  ன்னு  அங்க  போறார் , அந்த  பெண்  அதெல்லாம்  ஒன்னு  தேவை  இல்லைன்னு  சொல்லிடுறா , பார்க்க  ரொம்ப  சின்ன  பொண்ணா  இருக்கிறாள் . ஓரிரு  நாளில்  இவங்க  ரெண்டு  பேரையும்  சேர்த்து  பார்த்து  அந்த  அவள்  காதலனை   அடித்து  அவனுடைய  பாஸ்க்கு  போன்   செய்ய  தயாராக  இருக்கிறான் . இருந்தாலும்  இவளை  கொள்ள  அவனுக்கு  மனம்  வரவில்லை , அவர்களை  அப்படியே  விட்டு  விடுகிறான் . அவனை  இனி  நான்  உன்ன  இங்க  பாக்க  குடாது  என்கிற  மாதிரி  சொல்லி  விடுகிறான் .

இந்த  தகவல்  பாஸ்  க்கு  செல்ல , இத்தனை   நாள்  எனக்கு  விசுவாசியா  இருந்தவன்  . நான்  சொன்னதை  செய்யாம  விட்டுட்டான் , ன்னு  அவன  கொலை  செய்ய  சொல்லுகிறார் , அதே  மாதிரி  அவனை  அடித்து  சித்தரவதை  செய்து , கையை  உடைத்து மண்ணில்  புதைகின்றனர் . ஆரம்பத்தில்  எந்த  அளவு  சுவாரஸ்யம்  இல்லாமல்  கதை  நகர்ந்ததோ  அதை  விட  இரண்டு  மூன்று  மடங்கு  வேகம்  பிடித்து  நகரும்  , அவனுடைய  முதலாளியை  எதிர்த்து கிளம்புகிறான்  ? அவன்  எப்படி  தப்பித்தான் ? என்ன  நடந்தது ?  யார்  அந்த  பெண் ?  எல்லா  கேள்விக்கும்  படத்தில்  பதில்  இருக்கு .


கண்டிப்பாக  , நிச்சயமாக  ஆக்சன்  gangster விரும்பிகளுக்கு  மிகவும்  பிடிக்கும் . பின்னனி  இசையும்  கதாபத்திரங்களும்  கச்சித மாக  இருக்கிறது . இந்த  இயக்குனருடைய  மூன்று  படங்களிலும்  அந்த  நடிகரை  பார்க்கிறேன்  அட்டகாசமான   நடிப்பு , இயல்பாகவே  பொருந்துகிறார் , ஆல்   ஓவர்  ஒரத்  மூவி  கண்டிப்பா  பாக்லாம் .

நன்றி 

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

My Magic (2008) வித்தைக்காரனின் மகன்

தந்தைக்கும்  மகனுக்கும்  உள்ள  அன்பையும்,  பாசத்தயும்  வெளிபடுத்தும். ஒரு  சில  படங்களை  பார்த்திருக்கிறேன் . இது  என்னை  கொஞ்சம்  யோசிக்க  வைத்துவிட்டது.இந்த  படத்திற்கு  கதை  சொல்வதில்  விருப்பம்  இல்லை  இருந்தாலும்  ஒரு  சிறு  தகவலை  தந்துவிடுகிறேன் , கேட்டுவிட்டு  இது  மாறி  எத்தன  படம்  பார்த்திருப்பேன் , இது லாம்  ஒர்த்   ஹா  என்ற  கேள்விகளை  எழுப்ப  வேண்டாம் . படத்தை  பாருங்க நிச்சயம்  இது  கொஞ்சம்  மாற்று  திரைப்படம்  தான் .






 . குடிகார  தந்தை  தினமும்  குடிக்காமல்  வீட்டுக்கு  வருவதில்லை , இவனுடைய  மனைவி  இவரோடு  இல்லை . இவருடைய  மகன்  தினமும்  அம்மாவிற்காக  காத்திருக்கிறான் , அம்மா  எப்ப  பா வருவாங்க  அம்மா  எப்ப  பா  வருவாங்கன்னு  கேட்டுகிட்டே இருக்கான்  . ஒரு  சிங்கபூர்  கிளப் ல் வேலை  பார்க்கும்  இவர் . தினமும்  அங்குள்ளவர்களுக்கு  எதோ  ஒரு  வித்தை   காட்ட்டி  விட்டு  செல்கிறார் . பிறகு  அங்கு  பெரிய  பாஸுக்கு   வித்தைகாட்டுகிறார் , அதில்  வரும்  பணத்தை  தன்   மகனிடம்  கொடுக்கிறார் .  .ஒருநாள்  வெகுசித்தரவதைக்கு க்கு  ஆளாகிறான் , என்ன  செய்கிறான் ? தன்னுடைய  மனைவி   என்ன  ஆனா? தன்னுடைய  மகனின்  விருப்பத்தை  நிறைவேற்றினானா ? என்பதெல்லாம்  படத்தை  பார்த்து  தெரிந்துகொள்ளுங்கள் .


மிக  சிம்பிள்  ஆன  கதைதான் , இந்த  படத்தை  பற்றிய  மேலும்  சிறப்பான  தகவல்கள்  என்னவென்றால் , சிங்கப்பூர்  நாட்டில் வெளிவந்த  தமிழ்  திரைப்படம் , முதல்  முதலில்  இந்த  நாட்டில்  இருந்து  கேன்நீஸ் திரைப்பட  விழாவிற்கு  சென்ற  திரைப்படம் . ஆஸ்கார்  விருதுக்கு  பரிந்துரைக்கு  அனுப்பி  வைக்க  பட்ட  திரைப்படம் . மேலும்  திரைப்பட  விழாக்களிலும் , கலந்து  கொண்டு  விருதுகளையும்  வென்ற  திரைப்படம் . 

 இயக்குனர்  சீன  நாட்டை  சேர்ந்தவர் . அவருடைய  திரைப்படங்கள்  ஒவ்வொன்றும்  ஏதாவது  ஒரு  திரைப்பட  விழாவை  தொட்டுவிடுவது  வழக்கம் போல. எனக்கு  இணையத்தில்  தேடியதில்  நிறைய  தகவல்கள்  கிடைத்தன . அவருடைய  மற்ற  படங்களையும்  பார்க்க  தரவிறக்கி  வைக்கிறேன் .

நடிகராக  நடித்திருக்கும்  அவர்  ஒரு  மெஜிசியன்  என்பதால்  அசத்தி  இருக்கிறார் . சிறுவன்  இயல்பான  நடிப்பில்  கவருகிறான் . சிறந்த  நடிகருக்கான  விருதை  வென்ற இப்படத்தை  நேரம்  அமையும்  பொழுது  தவறாமல்  பார்க்கவும்  எந்த  விதத்திலும்  நேரம்  வீணடிக்க  படாது . இல்லை  எனக்கு  கதை  ஈர்க்கவில்லை  என்றாலும்  அதில்  வரக்கூடிய  மேஜிக்  காட்சிகளுக்காக  கண்டிப்பாக  பார்க்கலாம்  .

நன்றி 

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

Cold Eyes (2013) திருடன் போலீஸ் ஆடுபுலி ஆட்டம்

எல்லா  கதைகளிலும்  கட்டம்  கட்டி அடிக்கும்  கொரியத்  திரைப்படங்களில் ,

 

சமீபத்தில்  அட்டகாசமான ஒரு  திரைப்படத்தை  பார்க்க  நேர்ந்தது . கொள்ளையடிக்க  கொள்ளையன்  எப்படி  திட்டம் போடுகிறானோ , அதே  அளவு  அவனை  பிடிக்க  போகும்  அதிகாரியும்  பக்கவாக  ஒரு  திட்டத்தை  போட்டு  செயல்படுத்துவார் , அதுதான்  இங்க  மெயின்  கான்செப்ட்  அப்படி  ஒரு  முரட்டுத்தனமான  கொள்ளையனை   பிடிக்க  இவர்கள்  மேற்கொள்வதே  மீதி  திரைப்படம் .


ஒரு  படத்தின்  முதல்  ஆரம்ப  தொடக்கத்தை  வைத்தே  நம்மை  கவர்ந்து  விடுவார்கள் கொரிய  இயக்குனர்கள் . இது  ரீமேக்  படம்  என்று  கேள்விபட்டேன்  , அதை  பார்த்தவர்கள்  படத்தை  பற்றி  சொல்லுங்கள் .  , முழு  படத்தயும்  உக்காந்த  இடத்தை  விட்டு  எழாமல்  என்னை  முழுவதுமாக  காணவைத்தது இந்த  கட்டம்  கட்டி  அடிக்கும்  ஆட்டம்  , ஒரு  சில  இடங்களில்  கொஞ்சம்  மெதுவாக  நகர்கிறது  , ஆனாலும்  ஏதாவது  ஒரு  வேகத்தை  கூட்டிக்கொண்டு  போவதாக  தெரிகிறது 


இந்த  திரைப்படத்திற்கு  கதை  சொல்ல  துளியும்  ஆர்வம்  இல்லை. கதை  தெரிந்துகொண்டு  பார்க்க விரும்புபவர்கள்  இணையத்தை  நாடிக்கொள்ளவும் .  வங்கி  கொள்ளை  அடிக்கும்  திரைப்படங்களை  ரசிப்பவர்களும் ,  த்ரில்லர்  ஆக்சன்  விரும்பிகளும்  கண்டிப்பாக  பார்க்க  வேண்டும் . ஆஹா  ஓஓஹோ  அட்டகாசம்  என்று  சொல்ல  வில்லை  என்றாலும்  தாராளமாக  ஒருமுறை  பார்க்கலாம் .


நன்றி 

#சிவஷங்கர் 

0 உங்கள் கருத்து:

The Good, the Bad, the Weird புதையலை தேடி

படத்தோட  தலைப்பிற்கு  தகுந்த  மாதிரியே மூணு  கதாபாத்திரம் ,  1966 ல  வந்த  ஒரு  படத்தோட  கொரியத்  தழுவல்  தான்  இது , சமீபத்தில்   என்னை   மிரட்டிய  I SAW THE DEVIL  இயக்குனரின்   மற்றொமொரு  அட்டகாசமான  வெஸ்ட்ரன்  படம்  இது , இதற்க்கு முன்  வெஸ்ட்ரன்  படங்களை   பார்த்த  மாதிரியே  ஏதும்  நினைவில்  இல்லை , தமிழில்  ஒரு வெஸ்ட்ரன் கான்செப்ட் ல  அரவேக்காட்டு  படம்  பார்த்த  நினைவு  வந்தது   .


அதுல  கூட  ஒரு  நல்லவன்  கெட்டவன்   கான்செப்ட்  அனேகம்மா   இங்கிருந்து  உருவினதா  கூட  இருக்கலாம் , சோ  எனக்கு  வெஸ்ட்ரன் படங்களை  பார்க்காததால்   எனக்கு  அந்த  படங்களின்  மேல்  ஈர்ப்பு  வரதில்லை  கிட்டத்தட்ட  கிடப்பில்  போடப்பட்ட  படத்தை  ஒருவழியா  பார்த்து  முடித்துவிட்டேன் . நேரத்தை  வீணடிக்காத    விறுவிறுப்பான    ஆக்சன்  அதே  நேரத்துல  காமெடி  கலந்த  ஒரு  தேடல்  தான்  கதை .








இதில்  வில்லனாக  நடித்திருப்பவர்  ,   I SAW THE DEVIL  ல்  படு  பக்கவா  நடித்தவர் , இவரோட  மற்ற  படங்களை பார்க்க  வேண்டும்  ன்னு  நினச்சேன்   . இதுல  அவர்  பண்ணிருக்கும்  கேரக்ட்டர்  செம்ம  சூப்பர் . கெட்டப்   ல  இருந்து  ஹேர்  ஸ்டைல்  வரைக்கும்  அசத்தி  இருக்கிறார் , அதே  போல  மெம்மரீஸ்  ஆப்   மர்டர்  படத்தில்  நடித்த . லோக்கல்  போலீஸ்  இதுல  செம்மையான  ஒரு  ரோல்  செய்து  இருக்கார்  முரட்டு  காமெடியன்  .

பாதிக்கு  மேல் அவர்  செய்கிற  சேட்டையில்   தான்  நகருகிறது , ஆரம்பத்துல  அவர்  வந்ததுல  இருந்து  முடியுற  வரை  சிரிப்புக்கும்  உத்தரவாதம் , மூணு  பேருல  இவர்  பெர்பெக்ட்  சூட் .  இன்னொருவரும்  நான்  பார்த்த  ஒரு  சில  கொரிய   படங்களில்  அவரை  பார்த்திருக்கிறேன் , மூன்று  முன்னணி  நடிகர்களை  வைத்து  அசத்த்தோ  அசத்து ன்னு  பட்டய  கிளப்பி  இருக்கிறார்  இயக்குனர் . 

பல  புராண  கதையெல்லாம்  சொல்ல  மாட்டேங்கேங்க  அதெல்லாம்  நீங்களே  பார்த்து  தெரிஞ்சுக்கொள்ளுங்கோ .  சிம்பிள்  ஹா  இன்னா  நா இன்னா  ன்னு  சொல்லுடுறேன் . படத்தோட  கதை  என்னன்னேன்னா  ரயில்  ல  திருட  போகுற  நம்ப  காமெடியனுக்கு  ஒரு  பபுதையளோட வரைபடம்  கிடைக்கிறது  ,  அதெப்படி  கிடைக்கிதுன்னு  பாருங்க  . ஆனா  இந்த  புதையல்  மேப்  க்காக  இரண்டு  பேரு  பிளான்  போட்டு  வந்திருப்பாங்க . அதுக்குள்ள  தலைவர்  கைக்கு  கிடக்க  அவர்  அத  எடுத்துகொண்டு  கிளம்பிடுறார் , அந்த  ஒரு  மேப்  காக  லோக்கல்  திருடர்ஸ்ஸ் , அப்புறம்  ஊருல  பெரிய  தலைக்கட்டுஸ்  அவன்  இவன்  ன்னு  கிளம்ப  ஆரம்பிக்கிறான்  , இறுதியில் அது  யாருக்கு  கிடைத்தது ? முதல்ல  திருடுன  நம்ப  காமெடியன்  என்ன  பண்ணார்  ?  என  அட்டகாசமாக  சிறப்பான  சிரிப்புடன்  சொல்லி  இருப்பாங்க , டோன்ட்  மிஸ்  இட் வொர்த்  பார்  வாட்சிங் .
 

பார்த்தே  ஆக  வேண்டிய  திரைப்படமா  என்ற  கேள்விக்கு  , பார்த்தல் நேரம்  வீணடிக்க  படாது  என்ற  பதிலை  இந்த  படத்திற்கு  சொல்லிக்கொள்ள  விரும்புகிறேன் .  யாரும்  எதிர்பார்க்க முடியாத  அளவுக்கு  இருக்கும்மா  ?  இருக்கலாம் , பிளாஷ்  பேக்  ட்விஸ்ட்  லாம்  சொல்லி  இருக்கங்க  , எத்தனையோ  உருப்படி  இல்லா  படங்கள்  பார்க்கும்  மத்தியில்  இந்த  படத்தை  தாரளாமாக  பார்த்து  ரசிக்கலாம்  . பார்த்தவர்கள்  தங்கள்  கருத்துக்களை  சொல்லுங்கள்  .  எனக்கு  பார்க்க  வேண்டிய  நல்ல  வெஸ்ட்ரன்  படங்களை  பரிந்துரையுங்கள்  . நான்  இதோட  ஒரிஜினல்  வெர்சன் யும்  கூடிய  விரைவில்  பார்க்கிறேன்  . 

நன்றி 

#சிவஷங்கர்  

0 உங்கள் கருத்து:

100 சிறந்த புத்தகங்கள் -Writer S.Ramakrishnan

 விஜய் டிவி நிகழ்ச்சியில் நான் குறிப்பிட்ட சிறந்த 100 புத்தகங்களின் பட்டியல் பற்றி பலரும் மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டிருக்கிறார்கள், அவர்களின் விருப்பத்திற்காக மீண்டும் இதைப் பதிவிடுகிறேன் இந்தப்பட்டியல் முற்றிலும் எனது ரசனை சார்ந்தது, அதிலும் முதன்மையாகப் படைப்பிலக்கியம் சார்ந்தது. இவையின்றி பல முக்கியமான புத்தகங்கள் உள்ளன என்பதை நான் அறிவேன்,இது தரவரிசையில்லை. புதிய வாசகன் கற்றுத் தேர வேண்டியது என நான் கருதும் ஒரு பட்டியலாக எடுத்துக் கொள்ளவும்இவை முழுமையாக எங்கே கிடைக்கும் என பலமுறை வாசகர்கள் கேட்டிருக்கிறார்கள் .சென்னை நியூபுக்லேண்ட்ஸ் வடக்கு உஸ்மான் சாலை தி நகர் கடையிலும் கோவை ராஜவீதியில் உள்ள விஜயா பதிப்பகத்திலும் கிடைக்க்கூடும் •• 1) திருஅருட்பா – மூலமும் உரையும் 2) மகாபாரதம் – கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள் 3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு 4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் 5) கம்பராமாயணம்– மர்ரே ராஜம் பதிப்பு 6) திருக்குறள் – மூலமும் உரையும் 7) அபிதாம சிந்தாமணி – சிங்காரவேலு முதலியார் 8)சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு 9) மணிமேகலை – மூலமும் உரையும் 10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள் 11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள் 12) தமிழக வரலாறு – தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள் 13)பாரதியார் – கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு 14)பாரதிதாசன் கவிதைகள். 15)ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – 12 தொகுதிகள் 16)பெரியார் சிந்தனைகள் – ஆனைமுத்து தொகுத்தவை. 17)திருப்பாவை – மூலமும் உரையும் 18)திருக்குற்றாலகுறவஞ்சி – மூலமும் உரையும் 19)சித்தர் பாடல்கள்– மூலமும் உரையும் 20)தனிப்பாடல் திரட்டு. 21)பௌத்தமும் தமிழும்– மயிலை சீனி வெங்கடசாமி 22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு 23)கு.அழகர்சாமி சிறுகதைகள் முழுதொகுப்பு 24)மௌனி கதைகள் 25)சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு 26)ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு 27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு 28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு 29)வண்ணதாசன் சிறுகதைகள் முழுதொகுப்பு 30)பிரபஞ்சன் சிறுகதைகள் முழுதொகுப்பு 31)அசோகமித்ரன் சிறுகதைகள் முழுதொகுப்பு 32)ஆதவன் சிறுகதைகள் முழுதொகுப்பு 33)லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் முழுதொகுப்பு 34)தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுதொகுப்பு 35)ஆ.மாதவன் சிறுகதைகள் முழுதொகுதி 36)விடியுமா குப.ராஜகோபாலன் சிறுகதைகள் 37)ராஜேந்திரசோழன் சிறுகதைகள் 38)நீர்மை ந.முத்துசாமி சிறுகதைகள் 39)சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள் 40)பாவண்ணன் சிறுகதைகள் முழுதொகுப்பு 41)சுஜாதா சிறுகதைகள் முழுதொகுப்பு 42)பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள் 43)முத்துலிங்கம் சிறுகதைகள் முழுதொகுப்பு 44)கந்தர்வன் சிறுகதைகள் முழுதொகுப்பு 45)சுயம்புலிங்கம் சிறுகதைகள் 46)மதினிமார்கள் கதை – கோணங்கி 47)வெயிலோடு போயி – தமிழ்செல்வன் 48)இரவுகள் உடையும் பா.செயப்பிரகாசம் 49)கடவு – திலீப்குமார் சிறுகதைகள் 50)நாஞ்சில்நாடன் சிறுகதைகள் முழுதொகுப்பு 51)புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம் 52)புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி 53)கரைந்த நிழல்கள் – அசோகமித்ரன் 54)மோகமுள் – தி.ஜானகிராமன் 55)பிறகு – .பூமணி 56)நாய்கள் நகுலன் 57)நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம் 58)இடைவெளி – சம்பத் 59)ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் 60)வாசவேஸ்வரம் – கிருத்திகா 61)பசித்த மானுடம் கரிச்சான்குஞ்சு 62)கோபல்லகிராமம் – கி.ராஜநாராயணன் 63)தலைமுறைகள் – நீல பத்மநாபன் 64)பொன்னியின் செல்வன்– கல்கி 65)கடல்புரத்தில் – வண்ணநிலவன் 66)நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன் 67)சாயாவனம் சா.கந்தசாமி 68)கிருஷ்ணபருந்து – ஆ.மாதவன் 69)காகித மலர்கள் ஆதவன் 70)புத்தம்வீடு. – ஹெப்சிபா யேசுநாதன் 71)வாடிவாசல் -சி.சு.செல்லப்பா 72)விஷ்ணுபுரம் – ஜெயமோகன் 73)உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன் 74)கூகை – சோ.தர்மன் 75)ஆழிசூழ்உலகு– ஜோசப் டி குரூஸ் 76)ம் – ஷோபாசக்தி 77)கூளமாதாரி – பெருமாள் முருகன் 78)சமகால உலகக் கவிதைகள் – தொகுப்பு பிரம்மராஜன் 79)ஆத்மநாம் கவிதைகள் முழுதொகுப்பு 80)பிரமிள் கவிதைகள் முழுதொகுப்பு 81)கலாப்ரியா கவிதைகள் முழுதொகுப்பு 82)கல்யாண்ஜி கவிதைகள் 83)விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு 84)நகுலன் கவிதைகள் முழுதொகுப்பு 85)ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு 86)தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு 87)தேவதேவன் கவிதைகள் முழுதொகுப்பு 88)ஆனந்த் கவிதைகள் முழுதொகுப்பு 89)பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு 90)சமயவேல் கவிதைகள் முழுதொகுப்பு 91)கோடைகால குறிப்புகள் சுகுமாரன் 92)என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் – மனுஷ்யபுத்திரன் 93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள் 94) ரத்த உறவு– . யூமா வாசுகி 95)மரணத்துள் வாழ்வோம் – கவிதை தொகுப்பு 96)சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா. 97)தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு.– கி.ராஜநாராயணன் 98)தமிழக நாட்டுபுறபாடலகள் – நா.வானமாமலை 99)பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவம் கட்டுரைகள் 100)கண்மணி கமலாவிற்கு – புதுமைபித்தன் கடிதங்கள்

#shared from web 

0 உங்கள் கருத்து:

I Saw the Devil (2010) ரத்தமாய் தெறிக்கும் யுத்தம்

இரத்தமும்   வெறியுமாய்  பழிவாங்கும்  எண்ணம்  கொண்ட  நிறைய  படங்களை  பார்த்திருக்கிறேன்.  ஆனால்  இதுபோன்ற  ஒரு  படத்தை  பார்பது  இதுவே  முதல்  முறை , இத்தனை   நாள்  தவறவிட்டதற்கு  எனக்கு நானே  எதாச்சும்  கொடுதுக்குகறேன், எல்லோரும்  மனதிற்குள்  இப்படி  ஒரு  படம்  வாராதா?  என்று  ஒரு  மனக்கோட்டை  கட்டுவார்கள்  , அப்படி  விவரம் தெரிஞ்ச    வயசில்  இருந்தே நான்  ஒரு  மனக்கோட்டை  கட்டினேன் , அதில்  ஹீரோவுக்கு  என்ன  பலம்  இருக்கிறதோ ? அதே  பலம்  வில்லனுக்கும்  இருக்க  வேண்டும்  , 

சரிக்கு  சமாமாக மோதும்  இவர்கள்  சண்டையை  பார்ப்பதில்  அவ்வளவு  ஒரு  வெறி , எப்படி  இந்த  எண்ணம்  மனதிற்குள்  வந்தது  ன்னு  யோசிக்க  ஆரம்பிச்சு விடீன்களா . காலங்காலமாக  நாம்  பார்க்கும்  படங்கள்  எல்லாமே  ஹீரோ  அடிப்பார்  மீதி  எல்லாம்  அடி  வாங்குவாங்க , இன்னவரைக்கும்  அதே  தான்  நடந்துகொண்டு  வருது , ஹிந்தி  ல  ரா  1 வந்த  புதிசுல கூட  சொன்னாக  ஹீரோக்கு  என்ன  பலமோ  அதை  விட  அதிக  பலம்  வில்லனுக்கு  தான்  ன்னு  பார்த்த  எனக்கு  ஏமாற்றமே  மிஞ்சியது . 





தன்னுடைய  மனைவியை  கொன்ற  ஒருவனை  தேடி  கொலை  பண்ண  துடிக்கும்  ஒருவனின் பழிவாங்கல்  கதைதான் , இன்னும் சுருக்கமாக    பழிக்கு  பழி  வாங்கவேண்டும்  என்று  வெறியுடன்  களமிறங்கும்  ஒருவனின்   கதைதான் இது , நம்மூரில்  பழிக்கு  பழி  வாங்க  வேண்டும்  என்றால்  இந்த  ஆண்டு  வெளிவந்த  ஒரு  டாப்  நடிகரின்(பெயர்  தெரியாது)  படங்களை   போலதான் கிட்ட  தட்ட , எல்லா  படங்களும்  இருக்கும் , இப்படிதான்  ஒருவனை  பழிவாங்க  வேண்டும்  என்றொரு  பார்முலா  வைத்து கூட்டி  , கழித்து   , பெருக்கி  , வகுத்து  பழிவாங்குவாங்குவாங்க  அப்பா  செம்மல்ல ? எப்படி  பழிவாங்கி   இருக்கான்  பாரு  போடு  ஜெய்  ஜெய்  ன்னு  கூவலிட்டு  கொண்டிருகிறார்கள் . நாம்  நிறைய  கற்றுக்கொள்ள  வேண்டும்  என்பது  என்னுடைய  தனிப்பட்ட  கருத்து   மட்டமான  படம்  என்று  சுட்டிகாட்டவில்லை .  

இப்படி  பல  ஏமாற்ற  படங்களுக்கு  பிறகு ஒரு  சில  படங்கள்  ஓரளவுக்கு  என்னுடைய  எதிர்பார்ப்பை  பூர்த்தி  செய்து  இருந்தன  , மொத்த   ரணகளத்தையும்  இந்த  கொரியன்  திரைப்படம்  கொடுத்து  விட்டது .  படத்தை  பற்றி  பார்பதற்கு  முன்னால்  இந்த  திரைபடத்தை இதயம்  பலவீனமாவர்கள் ,. துண்டு  துண்டாக உடலை  வெட்டி  வீசுவான்  இதுபோன்ற  காட்சிகளை  பார்த்தா  சிலர்  அப்பவே  டிக்கெட்  வாங்கிருவாங்க  , ஆக  இளகிய  நெஞ்சம்  படைத்தவர்களும் , தாங்கிக்கொள்ள  கூடிய  மனம் இல்லாதவர்களா  , தயவுசெய்து  இத்தோட   முடித்துகொள்வது   நலம் .  எதையும்  தாங்கி  கொள்ளும்  இதயம்  படைத்தவர்களாக  இருந்தால்  நோ  ப்ராப்ளம் . இதற்க்கு  மேல்  படத்தை  பற்றிய  சில  விசியங்களை  சொல்ல  போகிறேன் . சுவாரசியமான  விசயங்களோ  இல்லை  எதிர்பார்ப்புகலையோ  சொல்லி  உடைக்க  போவதில்லை , என்ன  மேட்டர் , நான்  ஏன்   பார்த்தேன் , உங்களுக்கு  ஏன்   பரிந்துரைக்கிறேன்? என்னை  வெகுவாக  கவர்ந்தது  யார் ? 

ஹீரோ  ஒரு  காவல்  அதிகாரி , அவளுடைய  மனைவி காரில்  வந்துகொண்டு  இருக்கிறாள்   பனி  பெய்து  கொண்டிருக்கும்  பொழுது  ஒரு  ஓரமாக  காரை  நிறுத்துகிறாள்  தனது  கணவனிடம்  தொலைபேசியில்  பேசிக்கொண்டு  இருக்கிறாள் . அங்கு  தீடீரென்று  வரும்  ஒருவர்  தாறுமாறாக  அடித்து  நொறுக்கி  ரத்தத்தை  தெறிக்க  இழுத்து  செல்கிறாள்  , அதிலயே  உயிர்  இழந்திருக்க வேண்டும் , தன்னுடைய  வயிற்றில்  குழந்தையை  சுமக்கும்  இவளுக்கு  இன்னும்  கொஞ்ச  நேரம்  உயிர்  ஊசலாடி  கொண்டு  இருந்தது . என்னை  கொன்னுடாத என்னுடைய  வயிற்றில்  குழந்தை  இருக்கு  ன்னு  சொல்லும்  போது  பார்க்கிற  நமக்கு  கண்ணுல  தண்ணி  வந்துடும் , அனா  வில்லன்  அதை  எல்லாம்  பொருட்படுதமல் அடித்தே  கொள்ளுகிறான் , பார்க்கிற  நமக்கு  இதிலிருந்தே  வில்லன்  மேல்  கடுங்கோபம்  ஆகி  விடும்  பார்க்கும்  நமக்கே  இப்படி  என்றால் ,  கணவனுக்கு  கோபம்  வராதா  என்ன ? கடுங்கோபம்  அடையும்  ஹீரோ   ,   இவனுக்கு  சாவை  விட  அதற்கும்  மேலான  சாவை  கொடுக்க  வேண்டும்  என்று  முற்படுகிறான் ..  இவன்  ஒரு   சைக்கோ  கொலைகாரன்  பெண்களை  விரும்பி  கொல்றவன்  , காம கொடூரன் , கற்பழித்து துண்டு  துண்டாக  வெட்டி  கொள்பவன் . 


ஹீரோ  அப்பாவி  மாதிரி  முக  பாவனங்கள்  , ஆனால்   மிரட்டும்  வெறி , கொலைமிரட்டல்  இவனுடைய  கண்களில்  மட்டும்  தெரிகிறது , தன்னுடைய  மனைவியை  கொன்றவனை  தேட  ஆரம்பிக்கிறான் , முதலில்  ஒருவன்  இந்த  முதலாவது  ஆளை  கொள்ளுறத  யப்பா  சாமி .. அடுத்து  ரெண்டாவது  ஒருவனை  தேடுறான் , அடுத்தது   மூன்றாவது  இவனை  தேட  ஆரம்பிக்குறான்   படத்தின்  தொடக்கத்தில்  இருந்தே  சற்று  வேகமாக  கிளம்பும்  , பிறகு  அசர  வேகம்  , பிறகு  புயல்  வேகத்தில்  கதை  கிளம்பும் , மிரட்டல்  மிரட்டல்  தான் , எப்படியோ  ஒருவழியாய்  இவனை  கண்டுபிடிக்கிறார் . அப்போதும்  ஒரு  பெண்ணை  கடத்திவந்து  கொலை  செய்ய  வைத்திருக்கிறான் . ஆளை  பிடித்து  மரண  பிரட்டு  பிரட்டுகிறார்  ஹீரோ ,  கையை  உடைத்து  விட்டு  இதுதான்  சின்ன  ஆரம்பம்   இன்னும்  இருக்கு  ன்னு  விட்டுட்டு  போயிறார் , மறுபடியும்  மருத்துவமனைக்கு  செல்லும்  வில்லன்  சில்மிஷம்  வேலையை  காட்ட  அங்கும்  வந்து  அடித்து  துவம்சம் ,, உன்ன  அவ்ளோ  சீக்கிரம்  கொள்ள  மாட்டேன்  இன்னும்  வெறித்தனமா  கொள்வேன்  ன்னு  கால்  சொல்லிகிறார் .


அடுத்து  இவன்  செல்லும்  இடமெல்லாம்  எப்படியோ  கண்டுபிடித்து   ஒவ்வொரு  முறையும்  முரட்டு  அடி  அடிக்கிறான்  , இந்த  அடிக்கெல்லாம்  செத்தே  போயிருவான்  ன்னு  நம்ப  நினைப்போம்  ஆனா சாவடிக்கள .  பிறகு  கால்  நரம்மை  கட்  செய்யும்  சொல்லவே  எனக்கு  ரணகளமா  இருக்கு , இதற்கு  முன்னால்  நான்  ஹாஸ்டல் அது  இதுன்னு  பல  SLASHER படங்கள்  பார்த்து  இருந்தாலும்  என்னக்கே  ஒரு  மிரட்டலாக  தான்  இருந்தது .. இப்படியே  விட்டு  விட்டு  புடிக்கும்  அவனை  மேலும்  சீண்டி  பார்த்து  உச்ச  கோபத்தை  அடைய  வைக்கிறான் , ஏன்தான்   இவன  விட்டோமொன்னு  இறுதியில்  அவனை  என்ன  செய்தார் ? பழிவாங்கினாரா ?  எப்படி  வில்லன்  இருக்கும்  இடங்களை  கண்டுபிடித்தான் ?  எல்லாம்  என்ன  என்பது  பரபரப்பான  இறுதி கிளைமாக்ஸ் . 

என்னை  கவர்ந்த  ஒரு  காட்சியை  பற்றி  சொல்லி  விடுகிறேன் , ரத்தம்   தெறிக்க டேக்ஸ்யில்  இருவரை    வில்லன் குத்திக் கொள்வான்   கண்ணே  சிவந்து  போவிட்டது  எனக்கு . வில்லனாக  நடித்திருக்கும்  , OLD   BOY   புகழ்  பெற்ற  நடிகர் மின்  சிக்  ஷோய்   கொக்க  மக்கா  ஏன்னா  நடிப்பு  மரண  மிரட்டல்  , அப்படியே  அந்த  காதாபாதிரமாவே  வாழ்ந்துட்டார் , ஹீரோ  சரிக்கு  சமம் , இப்படி  ஒரு  திரைபடத்தை  தந்த  இயக்குனருக்கு  கோடி  பாராட்டுக்கள் . பல  விருதுகளை  வென்ற  திரைப்படம்  . ஒரு சில  ஆபாச  காட்சிகள் , கொடூரமாக  ரத்தம்   தெறிக்கும்  காட்சிகள்  அதிகமாகவே  இருப்பதால்  தயவுசெய்து  அதற்கு  தகுந்தார்  போல்  பார்த்துகொள்ளவும்  , குழந்தைகள்  இருக்கும்  பொழுது  சுத்தமாக  பார்க்கவே  வேண்டாம் . 

பதிவை  எழுதி  கொண்டு  இருக்கும்  பொழுது  இரண்டு  படங்கள்  நியாபகத்திற்கு  வருகிறது  ஒன்னு  ஹிந்தி  படம் , இனொன்னு தமிழ் , ஹிந்தி  படத்தில்  வெறும்  பாட்டை  மட்டும்  கேட்டு  விட்டிருக்கலாம்  , தெரியமா பார்த்துட்டேன் . தமிழ்  படம்  சமீபத்தில்  அதவாது  2015ல்  தமிழில்  வந்த  முதல்  பத்து   இடத்திற்குள்  அடங்கிய  படம் , 2010 ஆம்  ஆண்டு  வந்த  இந்த  படத்தின் பயன்படுத்த  பட்டிருக்கும்  டெக்னாலஜியை , நாம  2015  ல்  மாற்றி  பயன்படுத்தி  இருக்கிறோம் . ஆக இந்த  இரண்டு  படமும்  நினைவுக்கு  வந்தன  , அது  என்ன படம்  பேருன்னு  மறந்துட்டேன்  , நீங்களும்  மறந்திடுங்க  அது  எல்லாம்  நமக்கு  தேவை  இல்ல  இப்ப  நீங்க  த்ரில்லர்  , ஹாரர் , சீரியல்  கில்லர் , சைக்கோ  கொலைகாரன்  படங்களை  பார்பவர்கலாக  இருந்தால்  இந்த படத்தை  உடனடியாக  பார்த்து  விடுங்கள் . FRAME BY FRAME, ஷாட்  பை  ஷாட்  படம்  அட்டகாசம் . 

நன்றி 

#சிவஷங்கர் 




0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger