Post Comment

MY SITE NEWS :


அனைவருக்கும் வணக்கம் !

Unforgettable (2016) வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு திரைப்படம்

 ஒரு  புத்தகத்தை  எடுத்து  படிக்கும்  பொழுது  ஆர்வத்தில்  கிட்ட  தட்ட  முடிக்கும்  நிலையை  தொடும் நேரத்தில்   எனக்குள்  ஒரு  பதட்டம்  நிலவும் . ஐயோ  கதை  முடிந்து  விட  போகிறதோ!!  கதை  முடிந்து  விட  போகிறதோ !!!. என்று  மனதுக்குள்  எழும்  படபடப்பால்  சில  நேரம்  விட்டுவைத்து  மற்றொரு  நாள்  அந்த  புத்தகத்தை  தொடர்ந்து  படித்ததும்   உண்டு ..  அப்படி  ஒரு  இயல்பான  அனுபவத்தையும்  இதுபோன்ற  ஒரு  கற்பனை  சூழலை  என்னுள்  தந்துள்ள  உன்னதாமான  படைப்பு  தான்  இந்த  Unforgettable  .

தலைபிற்கு  ஏற்ற  மாதிரி  பார்க்கிற  ஒவ்வொரு  பார்வையாளனின்  எண்ணத்தில்  ஆழப்படிந்த , அல்லது  மறக்கமுடியாத நினைவுகளை  கல்வெட்டாக  செதிக்கி  வைத்துள்ளது , தண்ணீரில்  மூழ்கிய  என்னுடைய  தாஜ்மஹால் <3 .="" nbsp="" p="">
திரைப்படம்  தொடங்குவது  ஒரு  ரேடியோ  ஒலிபரப்பு துறையில் . அங்கு  பணிபுரியும்  ஒருவர் , தனது  நிறைய  முக்கியமான  ப்ரோக்ராம்  எல்லாம்  தள்ளி  விட்டு  ஒரு  கதை   சொல்லுவார் ?  அதென்ன  கதை ? ஐந்து  நண்பர்கள் பற்றிய  ஒரு  கதை  , அதில்  இரண்டு  பெண்கள்  , மூன்று  ஆண்கள் ,  பிறப்பிலே  ஊனமான  ஒரு  பெண் ,

அவள்  மீது  அனைவரும்  அன்பு  கடந்த  பாசத்தினை  வைத்திருந்தனர் , மகிழ்ச்சிக்கு  பஞ்சம்  இல்லாத  அவர்களின்  நட்பில் , சிறு  சிறு  சண்டைகள் அவ்வபோது  வருவதுண்டு ..   அவளுடைய  ஊனமான அந்த  கால் குணமடைய  தினமும்  அங்குள்ள  மருத்துவமனைக்கு  செல்வதுண்டு ,, அவளுடைய  கால்   குணமடைந்ததா ?   இந்த  கதையை  தொடக்கத்தில்  ஏன்  சொல்லுகிறார் ? அந்த  ஐவரும் ? எல்லா  கேள்விகளுக்குமான  பதில்  படத்தில்  உள்ளது  நிச்சயமாக  காணவேண்டிய  உன்னத  படைப்பு ..  தண்ணீரில்  மூழ்கடிக்கும் நினைவுகளாக :) .



எல்லாத்தையும்  விட  பல  காட்சிகளை  காட்சிபடுத்த   பட்டிருக்கும்  விதத்தை  பார்க்கும்  பொழுது , நான்  இறப்பதற்குள்  இதுபோன்ற  இடங்களுக்கு  ஒருமுறையாவது  செல்லவேண்டும்  என்ற  ஏக்கத்தினையும்  எதிர்பார்ப்பையும்  பன்மடங்கு  உயர்த்தி  விட்டு  போகிறது , ஒரு சில   படங்கள்  பார்க்கும்  பொழுது  இதுபோன்ற  எண்ணம்  எழுகிறது என்றாவது  ஒருநாள்  செல்வேன் . நிறைய  காட்சிகள்  என்னை  கவர்ந்தன  எல்லாவற்றையும்  சொல்லிவிட  ஆசைதான் , நீங்களே  பார்த்து  தெரிந்துகொள்ளுங்களேன் .

படத்தின்   இடையில்  ஒரு  மழையில்  நனைந்துகொண்டு  அவளும்  அவளுடைய  நண்பனும்  பேசிக்கொள்ளும்  காட்சி  வேறொரு  உலகத்திற்கு  அழைத்து  சென்றது  போல்  இருந்தது . இதுபோன்று ஒரு  திரைப்படம்  பார்த்து  வெகுநாள்கள்  இருக்கும் ..  என்னுடைய  லிஸ்ட்  ல்  என்றென்றும்  இருக்கும்  படமாக  இந்த  படத்தினை  வைக்கிறேன்

 .தவறமால்  பார்த்துவிடுங்கள்  , பார்த்தவர்கள்  தங்கள்  கருத்துக்களை  பகிருங்கள் .

நன்றி

#சிவஷங்கர்




1 உங்கள் கருத்து:

Where to Invade Next (2015) எட்டு நாடுகளில் பயணம்

தொடர்ந்து  டாக்குமெண்டரி  படங்களாகவே  இயக்கி  வரும் அட்டகாசமான  மனிதரின்  மற்றுமொரு  நல்ல  திரைப்படம்  தான்  Where to invade next. 2015 ஆம்  ஆண்டு  வெளிவந்த  இந்த  டாக்குமெண்டரி யை  Michael Moore இயக்கி  நடித்திருக்கிறார், நிறைய  திரைப்பட  விழாக்களிலும்  மேலும்  விருதுகளையும்  வென்று  இருக்கிறது .

 





 பல ஆவண  திரைப்படங்கள் மூலம்   மக்கள்  மத்தியில்  நிறைய  பேச  பட்டு  இருக்கிறார்  .  உயரிய   விருதுகளை  வென்ற  இவருடைய Bowling for Columbine (2002) ஆஸ்கர்  விருது  வென்றது  குறிப்பிடத்தக்கது . நேரம்  அமையும்  பொழுது  அதனையும்  பார்த்து  வையுங்கள் .

இவரை  பற்றிய  மேலும்  ஒரு  உதறி  தகவல்  ஒரு  சிறு  புத்தகத்தில்  இருந்து  கிட்டியது  உலகில்  தாக்கத்தை  ஏற்படுத்த  கூடிய  100 மனிதர்கள்  பட்டியலில்  இவரும்   ஒருவர் .  படத்தை  பற்றி  எல்லாம்  சொல்லிவிட  ஆர்வம்  இல்லை  மேலோட்டம்  என்ன  என்பதை  மட்டும்  சொல்லி  விடுகிறேன் .


அவரது  நாட்டில்  நடந்துகொண்டிருக்கும் பொருளாதார  சிக்கல்கள் , பிரச்சனைகள்  மற்ற  நாடுகள்  எப்படி  மேற்கொள்கின்றனர்  , என்பதை  அறிவதற்காக  அவர்  எட்டு  நாடுகள்  பயணம்  செய்கிறார் , அதில் நம்மை  சிந்திக்கும்   வைக்கும்  அளவுக்கு  மக்கள்  ஊக்க  படுத்தும்  வசனங்கள் , காட்சிகள்  , சொல்லும்  கருத்துக்கள்  எல்லாம்  ஜாலியாகவும் , கருத்துள்ளவயாகவும் அமையும்  என்பதில்  எந்த  மாற்று  கருத்தும்  இல்லை .

இணையத்தில்  இந்த  படம்  பார்க்க  கிடைகிறது  நேரம்  அமையும்  பொழுது தவறாமல்  பார்த்து  வைக்கவும் , அவரோடு  நீங்களும்  எட்டு  நாட்டுக்கு  பயணம்  செய்து  தெரிந்துகொள்ளுங்கள்  ;) , ஏற்கனவே  பார்த்தவர்கள்  தங்கள்  கருத்துக்களை  சொல்லுங்கள்

நன்றி  

0 உங்கள் கருத்து:

Walesa man of hope (2013) நம்பிக்கை நாயகன் வாலேசா



வாலேசா  என்பவருடைய  வாழ்கையில்  நடந்த  கதைதான் இந்த  திரைப்படம் , ஒரு  சாதாரண  மனிதன்  எப்படி ?   போலந்து  நாட்டு  அரசின்  அதிபர்  ஆகினார் என்பது  ஒன்  லைன்.  இதனை  தவிர  வேறொன்றும்  தெரிந்துகொள்ளாமல்  பாருங்கள்  நிறைய  சுவாரஸ்யங்கள்  உங்களுக்கு  காத்திருகிறது .


நிறைய  இடங்களின்  என்னை  வெகுவாக  ஈர்க்க  வைக்கிறார்  இயக்குனர் ,   வாலேசா க்கு   மொத்தம்  6  குழந்தைகள் , பிரச்சனைகள்  வருகின்ற  பொழுது  இவர்  வீட்டை  விட்டு  செல்லும்  முன்பு  கையில்  அணிந்திருக்கும்  வாட்சையும் , மோதிரத்தையும்.  கலட்டி  வீட்டில்   வைத்து   விட்டு  மனைவியிடம்  அடிக்கடி  ஒரு  வசனத்தை  சொல்லிவிட்டு  போகிறார்  ,


ஒருமுறை  குழந்தை  கையில்  இருக்கும்  பொது  கைதி  செய்ய  படுகிறார்  , குழந்தையுடன்  காவல்  நிலையத்தில்  இருக்கிறார்  அந்த  குழந்தை  கத்திகொண்டே  இருக்கிறது  அதன்  பிறகு  ஒரு  காட்சி
 அந்த  இடங்களில்  லாம்  எழுந்து  கை  தட்டலாம்  என்றே  தோன்றியது .  உக்காந்து  மட்டும்  கை  தட்டிவிட்டேன் .






திரைப்படத்தை  பார்க்க  தொடங்குவதற்கு  முன்பு  இயக்குனரை  பற்றி  தெரிந்துகொள்ளலாம்  ன்னு  மொபைலை  கையில்  எடுத்தேன் , உலகில்  மிக  சிறந்த.   மிக  முக்கியமான  இயக்குனர்களில்  ஒருவர்   Andrzej Wajda இந்த  படம்  வெளிவந்த   பொழுது  அவருக்கு  வயது  87 ,

 தற்போது  90 , அவருடைய  கடைசி  படம்  அடுத்த  வருடம்  வெளிவருகிறது , அதற்கு  முன்பே  திரைப்பட  விழாகளில்  வெற்றிகரமாக  கொண்டாடிக்கொண்டு  வருகிறது .    வருத்தமளிக்க  கூடிய  செய்தி  என்னவென்றால் இதை  பார்க்க  இயக்குனர்  இல்லை .  இந்த  வருடம்  காலமானார்  .


உயரிய  பல  விருதுகளை  வென்ற  இவர்  இதுவரை  56 படங்களை  இயக்கி  இருக்கிறார் ,  . இவருடைய  இயக்கத்தில்  நான்  பார்க்கும்  முதல்  படம்  இதுதான்  என்று  நினைக்கிறன் .  கடைசி  படத்தின்  முன்னோட்டத்தை   சமீபத்தில்  பார்த்தேன்    அவர்  இன்னும்  வாழ்ந்திருக்க  வேண்டும் .  , அவர் படங்கள்  மூலம்  அவர்  வாழ்வார்  :(


நன்றி

தவறவிடமால்  பாருங்கள்  சிறப்பம்சமாய்  இருக்கும்  , சில  இடங்களில்  சிரிக்கவும்  வைக்கும்




0 உங்கள் கருத்து:

October (Ten Days that Shook the World) (1928) உலகை குலுக்கிய பத்து நாள்கள்

"உலகை  குலுக்கிய  பத்து நாள்கள்"  என்ற  புத்தகத்தின்  திரைப்பட  வடிவமே  இந்தப்படம்  , விவரம்  தெரியாமல்  நிறைய(சார்லி  சாப்ளின்)  மௌன  படங்கள்   பார்த்திருக்கிறேன் , இப்போது  இந்த  உலகை  குலுக்கிய  பத்து நாள்களை  பாதிக்கு  மேல்  புரிந்துகொள்ள  முடியாமல்  போனை  நோண்டிக்கொண்டு   பார்த்துகொண்டு  இருந்தேன் , 


ஆரம்பத்தில்  நகர  நகர  துப்பாக்கி  சூடு  , மக்கள்  ஓட்டம்  , கழகம் , புரட்சி , ன்னு  பர  பரப்பாக  நகரும்  , எனக்கு  நினைவில்  நிறைய  காட்சிகள்  இல்லை , நான்  சரியாக  கவனித்திருக்க  வில்லை  பொறுமை  இல்லை  என்பதே  சரியாக  பொருந்தும் . என்னுடைய  நினைவில்  இருப்பதை  வைத்து  ஒரு  அறிமுகத்தை  சொல்கிறேன் . 

சோவியத்  அரசு  ஆட்சி காலத்தில்  தயாரிக்க  பட்ட  இந்த திரைப்படம் 1928 ஆம்  ஆண்டு  செர்ஜி ஜசன்ஸ்டைன் என்பவரால்  இயக்கப்பட்டது , மக்கள்  புரட்சி  ஆரம்பம்  ஆகிறது , நகரத்திற்கு  மற்றவர்கள் வரக்குடாது  என்று  உத்தரவிடுகின்றனர் .  பிறகு  அங்கு  ஒருவர்  வருகிறார்? பிறகு  என்ன  மாற்றம்  நிகழ்ந்தது ? என்ன  மாற்றம்  ஆனது  என்பதெல்லாம்  மீதி ?? 

ஒவ்வொரு  காட்சியும்  டாக்குமெண்டரி  போல்  காட்சிபடுத்த பட்டிருக்கும்  , கிட்ட  தட்ட  அதுவே  தான்  , கொஞ்சம்  வேகமாக  செல்வது  போல  இருக்கிறது .  ஒவ்வொரு  முறையும்  டக்  டக்  என்று  போய்  விட்டது .  மீண்டும்  ஒருநாள்  நேரம்  கிடைக்கும்  பொழுது  இதனை  இணையத்தில்  தேடி  பொறுமையாக  பார்க்கவேண்டும்  என்று  நினைக்கிறன் . 

ஏற்கனவே  யாரவது  பார்த்து  விளக்கமாக  எழுதி  இருந்தால் மற்றவர்களுக்கும்  பகிருங்கள் , பார்க்காதவர்கள்  இணையத்தில்  இருக்கிறது  பாருங்கள் 




நன்றி 





0 உங்கள் கருத்து:

Wild Tales (2014) வக்கிர உணர்வும் பழிவாங்கும் வெறியும்


ஆமா  இந்த  திரைப்படம்  யாரு??  யாரு??  பாக்கணும் ..  எல்லாரும் . உறுதியாக  பாக்கணும் ,   கண்டிப்பாக  பார்க்கவேண்டும்  என்று  சொல்லிவிட்டேன்  ஏன்  பார்க்கவேண்டும்  என்பதனையும்  சொல்லி  விடுகிறேன் .





 நம்மை  வெகுவாக  கவர்வது  குறும்படங்கள்  தான்  எத்தனையோ  படங்கள்  இருந்தாலும்  ,  என்னை  அதிகமாக  கவர்பவை  குறும்படங்கள்  தான்  அதில்  எந்த   மாற்றுகருத்தும்  இல்லை  , அப்படி  அசத்தலான  ஆறு  குறும்படங்கள்  சேர்ந்த  ஓரு தொகுப்பு தான்  இந்த   திரைப்படம்  WILD TALES.

ப்ளாக்காமெடி த்ரில்லர்  வகையில் Damián Szifron  
 இயக்குனர்,  நம்மில்  மறைந்து  இருக்கும்  பல  வக்கிர  எண்ணங்களையும் , பழிவாங்கும்  எண்ணங்களையும்.  வெவ்வேறு  கோணங்களில் வித  விதமான  தொடர்பான  ஆறு  கதைகளின்  மூலம்   தெளிவு படுத்திக்காட்டுகிறார் .   அதிலும்  மூன்றாவது  கதை  மாஸ்டர்  பீஸ் .. தலைபிற்கும்  கதைக்கும்  பொருந்துகின்ற  மாதிரி  மிரட்டலான  கதாபாத்திரங்கள்  தான் , 

1.PASTERNAK
 யார்  இந்த  PASTERNAK ??  முதலில்  விமானத்தில்  ஒரு  பெண்ணுக்கும்  இன்னொரு  இசை  விமர்சகருக்கும் ஒரு  சிறு  கலந்துரை , 

பிறகு  விமானத்தில்  வரும்  அத்தனை  பேரும்   அதில்  கலந்து  கொள்கின்றனர் ..  தீடீர்  ன்னு  ஒரு  ஷாக்  அது  என்ன  ஷாக் ?  என்ன  கலந்துரை  ?  ஏன்?  என்ற  கேள்விகளுக்கு  பதில்  முதல்  பத்துநிமிடத்தில்   உள்ளது   இது இசையில்  பின்னி  பெடல்  எடுத்து  இருப்பாங்க ..

2.THE RATS 
ஆளே  இல்லாத   ரெஸ்டாரன்ட்  க்கு  ஒருவன்  வருகிறான் , இவன்.  அங்கு  வேலைபார்க்கும்  பெண்ணின்  குடும்பத்திற்கு  விரோதி. என்பதை  அவள்  பார்த்த  வுடன்  கண்டுனர்கிறாள்  , அதனை  அவள்   சமையல்  செய்பவளிடம்  சொல்கிறாள் , பிறகு  சமயலாலி   ஒரு  திட்டம்  தீட்டுகிறாள்????   
என்ன  திட்டம்  தீட்டினார்கள் ??  என்ன  நடந்தது  என்பது  மிரளவைக்கும்  மீதி கதை .   சமையல்  செய்கிற  மேடம் தான்  மிரட்டல்  . 
மூன்று  முறை  சிரித்தேன்(நீங்களும்  பாக்கும்  பொது  சிரிப்பீங்க)  , பிறகு  விறுவிறுப்பை  கிளப்பி  விட்டார்கள் , 


3. THE STRONGEST
மாஸ்டர்  பீஸ்  என்னை  வெகுவாக  கவர்ந்த  கதை .  ஒரு  ஹைவே  ரோடு  அதுல  ரெண்டு  காரு , அதுக்குள்ள  ரெண்டு  பேரு , இவங்களுள்ள  வீம்பு இறுதியில்  என்ன  ஆனது ??  
இதை  மட்டுமே  சொல்ல  விரும்புகின்றேன்  வேறெதையும்  தெரிந்துகொள்ளாதீர்கள் . 

 நாம்  பயணம்  செய்யும்  பொது  நிறைய  சேஷ்டைகளை   செய்வோம்.   . உதாரனத்திற்கு  ஒருவனை  முந்தி  விட்டு  நான்தான்  எல்லாம்,  கைய   ஆட்டி  காமிகிறது    , எதோ  ஒரு  கெத்தா   ஒரு  வேலைய  காற்றது , அப்படி  ரோட்டில்  நடக்கும்  ஒரு  கதை  தான்  , நிச்சயமாக  சொல்லுறேன்  நீங்க  பார்க்கும்  முன்பு  என்ன  வேணாலும்  யூகித்து  கொள்ளுங்கள்  ஆனால்  அது  நடக்காது  , இது  முழுக்க  முழுக்க  வேறு  பார்த்து  உணரவும் :) 

4.LITTLE BOMB
தன்னோட  மகளின்  பிறந்தநாளுக்கு  சரியான  நேரத்தில்  செல்லமுடியவில்லை, அதற்கு  முக்கிய  காரனமாய்  ஒரு  பிரச்சனை அமைகிறது ,  பல  பிரச்சனை  வர  , ஒருகட்டத்தில்  பொங்கி  எழுகிறார்  , ? அதென்ன   பிரச்னை ? சத்தியமா  இதுவும்  நீங்க  யூகிக்க  மாதிரி  இல்லை   வேறு  ஒரு  நல்ல  கதை .  பாருங்கள் 

5. THE PROPOSAL
கர்ப்பிணி  பெண்  ஒருத்தரை  காரில்  இடித்து  விடுகிறார்  ஒருவர் , இடித்து  விட்டு  நிக்காமல்  சென்று  விடுகிறான் .  இடித்தவனை  போலிஸ்  தேடுகிறது  என்ன  ஆனது என்பதை  பார்த்து  தெரிந்துகொள்ளுங்கள் , இதில்  நடித்திருக்கும்  அப்பா  கதாபாத்திரம்  அட்டகாசம் , வழக்கமாக  ஒரு  பணக்கார  வீட்டு  பையன்  இப்படி  செய்திட்டான்  என்ன  நடக்கும் அப்படின்னு  நினச்சி  தான்  பார்த்தேன் நடந்தது என்னவோ  அதான்  அனா   கதைபடுத்த  பட்டிருக்கும்  விதமும்  இறுதியும்  கண்ணில்  தண்ணீர்  வரவைத்து  விட்டது . 

6. UNTIL DEATH TO US PART 
இந்த  கதை  தான்  கொஞ்சம்  இழுத்த  மாதிரி  இருக்கு ன்னு  பார்த்தேன்  ஆத்தாடி  ஆத்தாடி  குரும்படத்துகுள்ள எம்புட்டு  வேலை  காட்றாங்க .  சிரிக்கிறதா  சீரீசா  பாக்குறதா  , எங்க  போய்  எங்க   வந்து  விடுவாங்க  கதைய . பக்கவா  இருக்கிறது  நடிகையின்  தேர்வு , மூன்றாவது  படம்  என்னை  வெகுவாக  கவர்ந்தது  மீதி  அனைத்துமே  அட்டகாசம் . 

ஆக  ஆறு  கதைகளிலும்  எதையுமே  உங்களால்  யூகிக்க  முடியாது  அந்த  அளவில்  தான்  இருக்கும்  , மிரட்டலான  இசை , அட்டகாசமான  நடிப்பு . மிக  சிறந்த  இயக்கம் , கண்டிப்பாக,  நிச்சயமாக,உறுதியாக , உடனடியாக   இன்னும்  என்ன  என்ன  இருக்கு  ஆ!!!  இறப்பதக்குள் பார்த்துவிட  வேண்டிய  கட்டாயமான  திரைப்படம் . 

திரைப்பட  விழாக்களிலும்  மற்றும்  சிறந்த  அயல்  நாட்டு  திரைப்பட  பிரிவில்  கலந்துகொண்ட  , மேலும்  பல  விருதுகளை  அள்ளிய  திரைப்படம் பத்துக்கு  பத்து  கண்ண  மூடிக்கொண்டு  போடலாம் . பார்த்தவர்கள்  தங்கள்  கருத்துகளை  சொல்லுங்கள் , பார்க்காதவர்கள்  உடனடியாக  பாருங்கள் . 
நன்றி . 










2 உங்கள் கருத்து:

JIMMY'S HALL (2014) வரலாற்றையும் ஒருவருடைய வாழ்க்கை கதையையும்

வரலாற்றையும்  ஒருவருடைய  வாழ்க்கை  கதையையும்  சொல்வது  தான்
  




அமெரிக்காவில்  இருந்து  ஜிம்மி  தனது தாயகமான அயர்லாந்துக்கு  வருகிறான் , தனது  தாயை  சந்தித்து  பிறகு  அந்த  ஊரில்  ஒரு  அரங்கை  நிறுவ  வேண்டும்  என்பது  இவனுடைய  ஆசை , அதென்ன  அரங்கம் ??? மற்றவர்களுக்கும்  ஆடவும்  , பாடவும் , புத்தகம்  படிக்கவும் , கலந்துரை  செய்யவும் , கற்றுகொடுக்கவும்  அதுவும்  இலவசமாக , என  அவனுடைய  ஆசை  நல்ல  ஆசையாக  தான்  இருக்கிறது , இதன்  மூலம் தெரியாத  நிறைய  தகவல்களை  தெரிந்துகொள்ளலாம் என    அரங்கை  நிறுவுகிறான் . 

அரங்கில்  பாட்டு  சொல்லிகொடுத்து  கொண்டு  இருக்கும்  பொழுது  தீடீரென்று  ஒரு  குழு  வந்து  தகராறு  செய்ய  ஆரம்பிகிறது.  ஜிம்மி  கைதி  செய்ய வந்திருப்பாக  சொல்கிறார்கள் , அங்கிருந்து  அரங்கில்  இருந்தவர்கள்  ஜிம்மியை    வெளியே  அனுப்பி  விடுகிறார்கள்.

இவனுக்கு  நிறைய  எதிர்ப்பாளர்கள்   கிளம்ப  ஆரம்பிரார்கள் , இருந்தாலும்  இளைஞர்கள்  உதவியுடன்  அந்த  அரங்கம்  செயல்படுத்த  பட்டு  கொண்டு  வருகிறது ,  கைதி  செய்யபடுகிறான் , பிறகு  என்ன  ஆனது  என்பதை  பார்த்து  தெரிந்துகொள்ளுங்கள் . இறுதியாக  என்ன  ஆனது  என்ன  ஆகி  இருக்கும்  என்பதை  நேரம்  அமைந்தால்  பார்த்து  வைக்கவும் ..

திரைபடவிழாக்களில்  கலந்து  கொண்டு  வெற்றி  பெற்று  இருக்கிறது ,  எனக்கு  ரொம்ப  பொறுமையாக  படம்  நகருவது  போன்று  இருந்தது   .  பொறுமை  அவசியம்  பார்த்துவிட்டு  உங்களுடைய  கருத்துக்களை  சொல்லுங்கள் , பார்த்தவர்கள் கருத்துரை இடுங்கள் . 

நன்றி 


0 உங்கள் கருத்து:

Dheepan (2015) போராளியின் வாழ்க்கையும் போராட்டமும்

 இலங்கையில்  இனபோரட்டம்  நடந்து  கொண்டு  இருக்கிறது , அங்கிருந்து  பிரான்ஸ்  நாட்டிற்கு  மூன்று  பேர்  வேறோருவர்களுடைய  பார்போர்ட்  மூலம்  வருன்கின்றனர் , இந்த  மூன்று  பேருக்கும்  முன்  பின்  யாரையுமே  தெரியாது  .








சிவதாசன் என்பவர்  தீபன்  என்பவரின்  பெயரிலும் , யாழினி  அவன்  மனைவியாகவும்  அவங்களுக்கு  குழந்தையாகவும் சிறுமி  ஒருத்தி  மூவரும்  இங்கிருந்து  அங்கு  செல்கின்றனர் .

யாழினி  அவள்  தன்னோட  உறவினர்  இருக்கும்  லண்டன்  க்கு  செல்வதாக  சொல்கிறாள் , இருந்தும்  அங்கே  வசிகின்றனர் , அவனுக்கு  ஒரு  வேலையும்  கிடைகிறது , அவளுக்கு  ஒரு  வீட்டில்  வேலை  கிடைகிறது . 

இலங்கையில்  தான்   இனப்போர்  அது  இதுன்னு  போராட்டத்தை  கடந்த  அவங்களுக்கு,  அங்கயும்  பிரச்சனைகள்  வர  ஆரம்பிக்கிறது  இறுதியில்   என்ன  ஆனது   என்பது  மீதிகதை ,

யாதர்த்த  நடிப்பின்  மூவரும்  நம்மை  கவர்கின்றனர் , படம்  முடிந்த  பிறகும்  பல  காட்சிகள்  நினைவில்  இருக்கும் , 99% இலங்கை  தமிழ்  தான்  பேசுவார்கள் ஆகவே  பார்பவர்களுக்கு  சப் டைட்டில்  பிரச்சனை  இருக்காது . . கொஞ்ச தான்  பிரெஞ்சு  ஆங்கிலம்  லாம்.

நிச்சயமாக  பார்த்தே  ஆக  வேண்டுமா  என்று  சொல்லும்  அளவுக்கு  இல்லாவிட்டாலும் , ஒரு  இயல்பான  கதையாக  பார்க்க  வேண்டும் . இந்த  படத்தை  இயக்கிய  இயக்குனருக்கு  இந்த  படம்  ஒரு  முக்கிய  படமாக  அமைந்ததாகவும் , நிறைய  பாராட்டுக்குள்  குவிந்ததாகவும்  தெரிவித்தார் .
நன்றி 


0 உங்கள் கருத்து:

Celluloid Man (2012) திரைப்படக் காதலர் பி.கே. நாயர்

                   செல்லுலாயிட் மேன்

பரமேஸ் கிருஷ்ணன் நாயர்  கேரளா  மாநிலத்தில்  பிறந்த  இவருக்கு  சினிமா  மேல்  அளவு  கடந்த  ஈர்ப்பு  , ஈர்ப்பு   என்பதை  விட  காதல்  என்று  சொல்வதே  சரியாக  பொருந்தும்.    அவருடைய  சிறுவயதில்  திரைப்படங்களில்  மேல்  எழுந்த  காதல்  தான்  ,  பின்னர்  திரைப்பட  கழகம் , குழுமம்  என்றாக  உருவானது .  திரைப்படங்களை  சேகரிப்பதிலும்   இவருக்கு  காதல்  அதிகம் தான் . 







நினைத்து  பாருங்கள்  நமது  இந்திய  படைப்புக்கள்   எத்தனை   நம்மிடம்  இருக்கிறது  என்று ,  சினிமா  தயாரிக்க  பட்ட  காலங்களில்  இருந்து  பல  படங்கள்  வெளிவந்துள்ளதுன.  அதில்  சொற்பமே  இந்திய  சினிமாவிடம்  உள்ளது ..   பிறகு  இவர்  சேகரித்த  படங்கள்  அதிகம் . இந்திய  படங்கள்  மட்டுமல்லாது  பல  உலக  படங்களையும்  தேடி  தேடி  சேகரித்து  இருக்கிறார் , இந்த   படத்தின்  முன்னோட்டதினை  பாருங்கள்  அதிலே  தெரியும் . 

 பாதுகாப்பது  மட்டும்  இல்லாமல்  நிறைய  பேருக்கு  திரையிட்டு  காட்டி  இருக்கிறார் . ஒவ்வொரு  முறையும்  திரைப்படம்  பார்க்கும்  பொழுது  அதிலிருந்து  கருத்துக்களை  ஒரு  நோட் ல்  எழுதி  கொண்டு  இருப்பார் .. இந்த  ஆவன  படத்தில்  அவரை  பற்றி  பிரபலங்கள்  சொல்லும்   கருத்துக்கள்  ஒவ்வொன்றும்  சினிமா  விரும்பிகளை  ஈர்க்க  செய்கிறது ..


தமிழில்  பழைய  அறிய  திரைப்படங்களை  சேகரிக்க  வேண்டும்  என்று  வலியுறுத்தி  உள்ளார் . வருத்தமான  செய்தி  என்வென்றால்  இவர்  இந்த  வருடம்  மார்ச்  மாதம் இறைவனை  நோக்கி  சென்று  விட்டார் , சினிமா  படங்களை  விரும்பும்  ஒவ்வொருவரும்  இவரை  பற்றி  தெரிந்துகொள்ள்  வேண்டும்  என்று  சொல்ல  விரும்புகிறேன் . 


நேரத்தை  அமைத்து  கொண்டு  இந்த  டாகுமெண்டரி ஐ  விரைவில்  பார்த்துவிடுங்கள் , இதில்  நிறைய  அறிய  படங்களின்  சில  சில  காட்சிகள்  இடம்பெற்றுள்ளன , நான்  திருப்பூர்  திரைப்பட  விழாவில்  பார்த்தேன் , DVD அல்லது வேறுஎங்காவது  பார்க்க  வாய்ப்பு  கிடைத்தால்  தவறாமல்  பயன்படுத்தி  கொள்ளவும் . பல  திரைப்படவிழாவில்  கலந்து  கொண்டுள்ளது .


இந்த  ஆவண  படத்தில்  இருந்து  நிறைய  தெரிந்து கொண்டேன்  , அவருடைய  வாழ்க்கை  வரலாறு  படம் வரவேண்டும் , திரைபடத்தின்  மேல்  காதலை  வளர்க்க  செய்யுங்கள் 
நன்றி 



0 உங்கள் கருத்து:

Ek Din Pratidin (1979) ஒரு நாளும் ஒவ்வொரு நாளும்

Ek Din Pratidin (1979)  இயக்குனர்  மிர்னல்  சென்
1980 ஆண்டு  கென்னிஸ்  திரைப்பட  விழாவில்  திரையிடப்பட்டது , நாவலை  முன்வைத்து இயக்கி  இருக்கும்  இந்த  திரைப்படம்  நமது  சமுதாயத்தில்  நிலவும்  முக்கியமான  ஒன்றை  தெளிவாக  சொல்கிறது. நிச்சயமாக  பார்க்க  வேண்டும்  , ஏன்  பார்க்க  வேண்டும்  என்பதை  சுருக்கமாக  சொல்லி  விடுகிறேன் .

ஒரு  சாதாரண  குடும்பத்தில்  வசிக்கும்  பெண்  அவள்  சம்பாத்தியத்தில்  தான்  குடும்பமே  இயங்குகிறது  அவளுக்கு  இரண்டு  தங்கைகள்  , ஒரு  தம்பி , தினமும்  வேலை  முடித்து  விட்டு  சரியாக  இந்நேரமெல்லாம்  வீடு  திரும்பி  விடுவாள் , இன்று  இவ்வளவு  நேரம்  ஆகியும்  வர  வில்லை , தாயும்  தந்தையும்  நேரம்  ஆக  ஆக  மனசு பதற  ஆரம்பிக்குது ,


, வீட்டில்  ஒரு  பெண்  காணமல்  போகிறாள் , அக்கம்  பக்கத்தினர் , உறவினர்கள் , ஊருக்கு  நாலு  பேர்  என்று  சொல்வார்களே  அந்த  நாலு  பேர் என  ஆளுக்கு  ஒரு  கதை  கட்டி  விடுவார்கள் ,  ஊர்காரங்க  என்னனமோ  சொல்ல படபடப்பு  அதிக மாகுது  காவல்  துறைல  புகார்  கொடுக்குறாங்க ??  இறுதியில்  என்ன  ஆகி  இருக்கும்  என்பதை  பார்த்து  தெரிந்துகொள்ளுங்கள் .

திரைப்படம்  முன்வைக்க  பட்டிருக்கும்  கருத்து   வேறு  அதை  பார்த்தல்  தான்  புரிந்துகொள்ள  முடியும் , நான்  அதை  சொல்ல  மாட்டேன்  பார்த்துவிட்டு  நீங்கள்  வந்து  என்னிடம்  சொல்லுங்கள்  எதை  முன்வைத்துள்ளது  என்பதை ,
அந்த  காலத்திற்கு  தகுந்தார்  போல்  ஒரு  கதை , அந்த  காலத்திற்கு  மட்டும்  அல்ல  இந்த  காலத்திற்கும்  பொருந்தும்  .

நான்  இந்த  திரைப்படம்  பார்த்து  கொண்டிருக்கும்  போதே  என்  மனதிற்குள்  இன்னொரு  திரைப்படம்  வந்து  சென்றது, தமிழில் சில நேரத்தில் சில மனிதர்கள் என்ற  திரைப்படம்.    மிக  சிறந்த  படங்களில்  ஒன்று , இது  ஏன்   நினைவில்  எனக்கு  வந்திருக்க  வேண்டும்  என்பதை  நீங்கள்  இந்த  படத்தையும்  கட்டயாம்  பார்த்து  தெரிந்துகொள்ள  வேண்டும் .


நன்றி

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

Mustang (2015) அல்லல் பட்டு கொண்டிருக்கும் பெண்களின் விடுதலைக்காக



சமூகத்தில்  பெண்களுக்கு  இருக்கும்  பிரச்னைகளை  அடுக்கிகொண்டே  போகலாம் , அப்படி  துருக்கியில்  வசிக்கும்  பெண்களின்  சுதந்திரத்தை  முன்  வைத்து Deniz Gameze  இயக்கி  இருக்கும்  படம்  தான்  Mustang, நிறைய  திரைப்பட  விழாக்களில்  திரையிட  பட்டு  பல  விருதுகளை  குவித்துள்ளது  திரைப்படம் .



திரைப்படத்தை  பார்த்து  முடித்த  பிறகு  இந்த  கதையை Deniz Gameze  இயக்குனர்  முன்வைக்க  காரணம்,  என்ன?  என்று?  கொஞ்சம்  கூகுளை  நாடினேன் , எனக்கு  கிடைத்த  தகவல்கள்  கொஞ்சம்  அதிர்ச்சி யாகவும்  இருந்தன , அந்த  நாட்டில்  வசிக்கும்  80% சதவிகதம்  பெண்களுக்கு  கல்வி  அறிவு  இல்லை  , அந்த  80 % சதவிகித  பெண்களும்  15 வயதிற்குள்  திருமணம்  செய்துகொண்ட  சிறுமிகள் .


அதை  விட  அவர்கள்  மேல்  திணிக்க படும் ஆதிக்கமும்  வன்முறையாழும்,  கிட்ட  தட்ட  ஒரு லட்சம்  பேரு  ஒரு  வருடத்தில்  உயிர்  இழந்து  கொண்டு  இருகின்றனர் ,  அதிலும் 15 to 20 வயதுகுள்ளானவர்கள்  தான்  அதிகம் .
உங்களை  ஒரு  பெண்ணாக  நினைத்துகொள்ளுங்கள்  15 வயதிற்குள்  திருமணம் , எந்த  ஆணிடமும்  பேச  கூடாது , முகத்தில்  கண்களும்  வாயும்  மட்டும்  தான்  தெரியவேண்டும்.  மீதி  எல்லாம்  துணிகளினால்  முழுவதும்  கவரபட்டிருக்க  வேண்டும் , எங்கேயும்  செல்ல  கூடாது , சிறுவயது  திருமணம்.  படிப்பை  பாதியில்  நிறுத்துதல். கல்வி  அறிவின்மை , இப்படி  பல  விசியங்களை  உங்கள்  மேல்  திணித்தால்  என்ன  செய்யவீங்க  .?

இந்த திரைப்படத்தில்   ஐந்து  பெண்ககளை  முன்வைத்து  நகருகிறது ,  தன்னுடைய  பாட்டியுடன்  வசித்து  வரும்  இவர்கள். வசிக்கும்    பகுதிக்கும்  நகரத்திற்கும்  நடந்தே  போகணும்  நா  பொழுதாகிவிடும் , அப்படி  ஒரு  ஊரில்  வசித்துக்கொண்டு  இருக்கும்  இவர்களுக்கு  எந்த  ஒரு  சுதந்திரமும்  இல்லை  ,  பள்ளிக்கி  சென்று  கொண்டு  தான்  இருந்தார்கள் , நிறுத்த  படுகிறார்கள்  , ரூமை  விட்டு  வெளி  வரமுடியாத  சூழல் இவர்கள்  அங்கிருந்து  வெளிய  செல்ல  முடியாதவாறு  என்ன  என்ன  செய்ய முடியுமோ  அதனையும்  செய்ய  படுகிறது  ? இறுதியில்  என்ன  ஆனது  என்ன  ஆகி  இருக்கும்  ?? பார்த்தே  ஆக  வேண்டும்  என்று  நான்  சொல்லிவிட்டு  போய்  விடுவேன் , பார்த்தல் தான்  தெரிந்துகொள்ள  முடியும் .

இன்னும்  துருக்கியில்  அல்லல்  பட்டு  கொண்டிருக்கும்  பெண்களின்  விடுதலைக்காக  தான்  நான்  என்னுடைய  இந்த  படத்தை  இயக்கி  இருக்கிறேன் , என்று  Deniz Gameze ஒரு  நிகழ்ச்சியில்  சொல்லி  இருக்காங்க , பாருங்கள்  நாம்  வசிக்கும்  நாட்டில்  இன்னும்  எதனை  அல்லல்கள்  இருக்குன்னு  தெரிந்துகொள்ளுங்கள்

நன்றி

#சிவஷங்கர்  

0 உங்கள் கருத்து:

Spartacus (1960) பாட்டாளி வர்கதிற்காக பாடுபட்ட மிகச்சிறந்த வீரன்


பண்டையகால வரலாற்றில் பாட்டாளி வர்கதிற்காக பாடுபட்ட மிகச்சிறந்த வீரன் , என்று போற்றப்படும் Spartacus என்ற அடிமை. வீரனான கதைதான் இந்த திரைப்படம் ..
பல மொழிகளில் மொழிமாற்றம் செயப்பட்ட , அதிகம் விற்பனை செய்ப்பட்ட Spartacus என்ற நாவலை படமாக இயக்கி இருக்கிறார் குப்ரிக் . ஹாலிவுட் ல் ஒரு ஆகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக போற்றபடுபவர் குப்ரிக் , அவர் இயக்கத்தில் நான் பார்க்கும் முதல் படம் தான் இது ..
கம்பீர உடல் அமைப்பு ஏற்ற மாதிரி பொருந்துகிற நடிகர் . அடிமை பட்டு கிடந்த இவர் .. ஒருநாள் தன்னுடைய சக ஆளிடம் சண்டை இட நேரிடுகிறது. அதில் ஒன்று சாகடிக்க வேண்டும் இல்லை சாகவேண்டும் என்ற நிபத்தனை , தேர்வு செயப்பட்ட வனுடன் மோதி தோல்வியின் விழும்பில் இருக்கிறார் , ஆனால் இவரை கொள்ளாமல் இவர்களை ஏவி விட்டர்களை கொள்ள முற்படும் பொது அவரை கொன்று விடுகின்றனர் , தன்னுடைய நண்பர்களில் ஒருவன் எனக்காக அவன் உயிரை வி்டுகிறான். பொறுத்தது போதும் Spartacus கோபம் அதிகரிக்க , ஒருநாள் அங்கிருந்து அத்தனை அடிமைகளும் தப்பித்து தனக்கென தனி இடத்தில் வசிக்கின்றன , அந்த கூட்டத்திற்கு Spartacus தலைமை பொறுப்பில் அத்தனை பேருக்கும் சண்டை கற்று கொடுக்கிறார் ,


Spartacus தலைமையிலான வீரர்களுக்கும் , ரோம நாட்டு படை வீரர்களுக்கும் போர் ஆரம்பம் ஆகிறது ?? இதில் Spartacus அணி வென்றால் அவர்கள் மேலும் அவர்களுடன் அடிமை பட்டு கிடக்கின்ற அவர்கள் நாட்டு மக்களை மீட்டெடுத்து தன் சொந்த நாட்டிற்கு செல்லலாம் , தோற்றால் ஒட்டுமொத்தமாக அத்தனை பேர் உயிரையும் இழக்க நேரிடும் இறுதியில் என்ன ஆனது என்பது மீதி கதை ?? நிச்சயமாக நீங்கள் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக நான் முக்கியமான கதாபாத்திரம் திருப்பு முனைகளை பற்றி சொல்லவில்லை எல்லாம் காரணம் இருக்கு .. வசனங்கள் அனைத்தும் மிரள வைக்கிறது,  இசையில்  மூழ்கடிக்க  செய்யும்  அதிலும்  கூட்டமே  ஸ்பார்டகஸ்  ஸ்பார்டகஸ்  என்று  கத்தும்  போது நம்மையும்  அறியாமல் ஒரு  அதீத  அனுபவம் கிடைக்கும் , ஜெயில்  இருந்து  தப்பிக்கும்  காட்சிகள்  என  ஒவ்வொரு  சீனும்  சிறப்பு  அட்டகாசமான திரைப்படம்,நிறைய  விருதுகளை  அள்ளி  குவித்து  இருக்கிறது  , பார்த்தவர்கள்  தங்கள்   கருத்துக்களை  பகிர்ந்துகொள்ளுங்கள்  , பார்க்காதவர்கள்  பார்த்துவிட்டு  வாருங்கள்  படத்தை  பற்றி  பேசுவோம் 
பாருங்கள் நன்றி

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

Raman Raghav 2.0 (2016) சைக்கோ கொலைகாரன்



(#) வழக்கம் போல அனுராக் காஷ்யப் <3 span="">மிரட்டிருக்கும் படம். என்ன காரணம் ன்னு தெரில நிறைய பேருக்கு பிடிகல அதெல்லாம் நமக்கெதுக்கு நான் கதைக்கு வரேன்..ஆரம்பத்தில் இது 1960 ஆம் ஆண்டு வாழ்ந்த ராமன் ராகவ் என்கிற சைக்கோ கொலைகாரன். தொடர் கொலைகளை பண்ணியவர் ன்னு ஆரம்பிப்பாங்க ஆனா இது அவரை பற்றிய படம் இல்லை ன்னு சொல்லிடுவாங்க.. இது வேற பக்கா.

(#) பகவான் பகவான் ன்னு சொலிகிட்டு ஒவ்வொருத்தரா பலியாக்குகிறார் நவாசுதின் . எதுக்கு செய்றார் ஏன் செய்றார் ன்னு சொல்லமாடன் தொடர்ந்து கொலையா பண்ணுறார் , அதை விசாரணை செய்ய ஒரு போலீஸ் ஆபீசர் (போதைக்கு அடிமையானவர்) நவாசுதின் சித்திக்கை பிடித்தாரா? அவருக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா..? இல்ல என்னதான் ஆனது என்பதை கட்டாயம் நீங்கள் பார்த்து தான் தெரிந்துகொள்ள வேண்டும்..

(#) ஆரம்பத்தில் இருந்தே மிரட்ல்லா தான் நகருது அதுவும் சேப்டர் பை சேப்டர் ஹா வரவும் அடுத்து என்ன என்கிற எதிபார்ப்பு பறக்கிறது..உண்மைலேயே பெரிய பலமே ஒளிபதிவும் நவாசுதின் நடிப்பும் தான்,சித்திக். நடிப்பில் பின்னி பெடலெடுத்து வாழ்ந்திருக்கிறார். நிறைய காட்சிகளை குருபிட்டு சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் இருந்தாலும் நீங்களே பாருங்கள் உங்களுக்கு புரியும்..

(#) கொஞ்சம் மிரட்டலான காட்சிகள் இருக்கிறது அனுராக் ரசிகர்கள் , மற்றும் THRILLER சைக்கோ கொலைகாரன் படங்களை பார்பவர்கள் கட்டாயம் பார்த்திருக்க வேண்டும் மற்றவர்கள் விருப்பம் இருந்தால் பார்க்கவும் கண்டிப்பாக பார்க்கலாம் ஒருமுறையாவது பார்த்து வையுங்கள் பக்கா படம்..எதிர்பார்க்க முடியாத அளவுக்கு கிளைமாக்ஸ் ல ட்விஸ்ட் இருக்கு ...

(#) சேப்டர் பை சேப்டர் ஹா இருப்பது சூப்பர்.. அலுப்பு தட்டவில்லை ,, அந்த போலிசை பார்த்து வாயில் புகை விடும் காட்சிலாம் உண்மைலேயே சைலென்ட் மிரட்டலா இருக்கு..
பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் .. பார்க்காதவர்கள் பாருங்கள்.. முடிந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்றி

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

UGLY (2013) நம்மை சுற்றி இருக்கும் அசிங்க முகங்கள்



ஒரு சில படங்களை பார்க்கும் பொழுது இப்படி ஒரு படத்தை இத்தனை நாளா மிஸ் பணிட்டோமே ன்னு நம்மேல நமக்கே பெரிய ஆதங்கம் வரும், எனக்கு இந்த படத்தை பார்க்கும் பொது அதோடு சேர்ந்து( ஆரம்பத்தில் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில்), கொஞ்சம் கடுப்பும் ஆனது.படம் பார்த்த முடித்த பிறகு அந்த கடுப்பான காட்சிகள் நினைவிற்கு வரவே இல்லை மீதி வரக்கூடிய கதை அப்படி என்னை மறக்கடிக்க செய்திருக்கிறது/

அப்படி என்னாதான் கதை ன்னு பார்த்தீங்கன்னா. காணமல் போன தன்னுடைய மகளை கண்டுபிடிக்க காவல் துறையில் புகார் கொடுக்க வருகிறார் தந்தை.. தன்னுடைய குழந்தையை கண்டுபிடித்தாரா? இல்லையா ?என்பது மீதி கதை.. இதில் நடித்திருக்கும் காவலர் அந்த குழந்தை ஒட்டுமொத்தமாக அத்தனை பெரும் கிரேட்..

ஒன்னும் புரியாத கதை போல தான் தெரியும்.பாருங்கள் எத்தனை அசிங்கமான முகங்கள் நம்மை சுற்றி இருப்பார்கள் என்று புரியும்.. ஒவ்வொரு காட்சியும் சிறப்பு என்பதால் நான் எந்த ட்விஸ்ட் உம் சொல்லவில்லை கதையின் ஆரம்பம் என்ன? நகர்வு என்ன ?விறுவிறுப்பு என்ன ?சிறப்பான காட்சிகள் என்ன? திருப்புமுனைகள் என்ன? என எதையுமே தெரிந்துகொள்ளாமல் பார்த்தல் ஒரு திரைப்படமாக அது உங்களை கவரும்

நானே இரண்டு வருடம் முடிந்த பிறகுதான் பார்த்திருக்கிறேன் . எத்தனையே மொக்கை படங்கள் ஹிந்தியில் பார்த்து நேரத்யும் Data வையும் வீணடித்திருக்கிறேன்.. இந்த படத்தை எப்படி தவர் விட்டேன் ன்னு தெரியவில்லை ..

எதிர்பார்க்க முடியாத காட்சிகள், படத்தின் பின்னணி இசை இருக்கிறது ஆனால் இல்லை ,, யூகிக்க முடியாத முடிவு, நான் சொல்வது என்னவென்றால் Review ஏதும் பார்க்கமால் படத்தை பார்க்கவும் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம் தான்...

எப்படி கதை அமைத்து எப்படி கேஸ்ட் அமைத்து, எப்படி திரைக்கதை அமைத்து,. எப்படி நகர்த்தி,.எப்படி முடிக்கவேண்டும், என்பதை இயக்குனர் தெளிவாக சொல்லி இருக்கிறார்.. அனுராக் <3 span="">
உங்களுக்கு தெரியுமா? இந்த இயக்குனரின் இயக்கத்தில் நான் பார்க்கும் இரண்டாவது படம் இதுதான் கிட்ட தட்ட இவர் படங்கள் மாஸ்டர்பீஸ் தான் . மீதி படங்களையும் விரைவில் பார்ப்பேன் .. இறுதியில் கதை முடிந்து பேரு போட ஆரம்பிச்டுவாங்க நான் பேரு முடிஞ்சு வேற ஏதாவது இருக்கா ன்னு பார்தேன். சில காட்சிகள் முழுமையாக முடிக்கபடா விட்டாலும் சிறப்பான படம் ..


கண்டிப்பா பார்க்காதவங்க விரைவில் பாருங்க, நண்பர்களுக்கும் பகிருங்கள்

#நன்றி

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

Udaan (2010) தம்பியும் அண்ணனும் உண்மை கதை




<3 span=""> சிறப்பான படம் அனுராக் <3 span="">
தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவு .ஒரு சிலருடைய வாழ்கை சிறப்பாக அமைந்துவிடுகிறது, நான் சொல்வதை மட்டும் தான் கேர்க்கனும், நான் சொல்வதை மட்டும் தான் செய்யணும், ன்னு அடிமைப்பட்டு வாழும் வாழ்க்கை இன்னும் சிலர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரின் உண்மை கதை தான் இந்த உதான் ,

<3 span=""> அனுராக் அவருடைய வாழ்க்கை கதை என்று விக்கி சொல்லுகிறது. அனைவருமே திறமையாக நடித்து இருக்கிறார்கள், ஹீரோவாகட்டும், சிறுவனாகட்டும், தந்தை ஆகட்டும். சிறி சிறு கதாபாத்திரங்கள் கூட சிறப்ப.

<3 span=""> தாயை இழந்த மகன் ..எனக்கு எழுத்தாளர் ஆகணும் ன்னு ஆசை நான் அதைதான் படிப்பேன் ன்னு சொல்லும்போது, நீ எழுதி ஒன்னும் கிழிக்க வேணாம் சோறு திங்கணும் நா நான் சொல்வதை கேளு ,.மெக்கனிக்கல் படிக்க என்ட்ரெண்ஸ் எக்ஸாம் எழுத சொல்லுறார்.அது வரைக்கும் இவருடைய பேக்டரியில் வேலை பார்க்க சொல்லுறார்.இவருக்கு ஒரு தம்பி இருப்பதே வீடு வந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது , தந்தை  சொல்வதுதான்  எல்லாம் , தனிப்பட்ட  சுதந்திரம்  இல்லை  ,  என்ன  தான்  ஆகிறது ??  ஒரு உணர்வு மிக்க கதை பாருங்கள் நிறைய விசியங்களை பார்ப்பதால் மட்டுமே உணர முடியும். படத்தை  பற்றி  எல்லாம்  தெரிந்துகொண்டு  பார்பதற்கு  பாக்காமலே  இருக்கலாம் .. எனக்கு  முழு  விமர்சனம்  வேண்டும்  கட்டுரை  வேண்டும்  என்றா இணையத்தில்   தேடி  படித்துகொள்ளுங்கள்

<3 span=""> அனைவராலும் பாராட்ட பட்ட படம் ஆனால் எதிர்பார்த்த அளவு திரையில் ஓடவில்லை, ஒரு சாதரான வணிகரீதியான வெற்றி பெற்றது.ஏழு வருடங்களுக்கு பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தியன் சினிமா என்பது குறிப்பிடத்தக்கது.அது மட்டும் இல்லாமல் மேலும் சில திரைப்படவிழாவிலும்,தோஹா திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட பெருமைக்குரியது.

<3 span=""> இத்தாலி நாட்டில் குழைந்தைகள் திரைப்படபிரிவில் கலந்து சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றது .56th Filmfare Awards மொத்தம் உள்ள அத்தனை விருதுகளையும் குவித்தது, சிறந்த கதைக்காகவும், திரைக்கதைகாகவும் அனுராக் <3 span=""> .2010 வெளிவந்த படங்களில் மிக நல்ல சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.

<3 span=""> மிக நல்ல படங்களும் தவறவிடபடுகின்றன, நேரம் கிடைத்தால் கட்டயாம் இந்த படத்தை பார்க்கவேண்டும்.
இப்படிப்பட்ட படங்களை பொறுமையுடன் பார்ப்பது அவசியம் , அப்படி பார்க்க முடியாதவர்கள் Trailer ஓடு மட்டும் நிறுத்திகொள்ளுங்கள்,ஏற்கனவே படத்தை பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை பகிருங்கள்

#கமெண்ட்ஸ் எதிர்பார்க்க படுகிறது


நன்றி

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

Bombay Talkies (2013) நான்கு விதமாய் கதை சொல்லல்




<3 span=""> ஒரே படம் நான்கு கதைகள் , நான்கு இயக்குனர்களும் இந்தியில் சிறப்பான படங்களை தந்துகொண்டிருப்பவர்கள்.
இந்தி சினிமாவின் நூறாவது ஆண்டை கொண்டாடும் விதமாக இந்த திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

<3 span=""> முதல் கதையை பார்த்து முடித்தேன் பிடித்தது , இரண்டாவது கதையை பார்க்க பார்க்கவே பிடித்தது, மூன்றாவது கதை சூப்பர், பைனல் அனுராக் கலக்கிவிட்டார் கிரேட் ,நான்கும் பக்கா நல்ல படம் எனக்கு மிகவும் பிடித்திருகிறது.

<3 span=""> எளிமையான நடிப்பின் மூலம் நம்மை கவர வைக்கிறார்கள் , ஆரம்ப கதையான Ajeeb Dastaan Hai Yeh இயக்கிவர் Karan Johar ஷாருக்கானின் நெருங்கிய நண்பர், அவரை வைத்து வெற்றி படங்களையும் சிறப்பான படங்களையும் கொடுத்தவர். கதையை சொல்லமாட்டேன் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும். :D

<3 span=""> ரெண்டாவது கதை Star - (Nawazuddin Siddiqui) பட்டய கிளப்பி இருக்கிறார் . இயக்கியவர் Dibakar Banerjee ,இது குறுங்கதையான சத்யஜித் ஸ்டோரி யை மையபடுத்தி எடுக்கப்பட்டது.கதையின் மையக்கரு என்னேனா எல்லாத்தையும் விட தன்னுடைய மகள் மேல் வைத்திருக்கும் அந்த பாசம். ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக இருக்கும்.கண்டிப்பா பாருங்க உங்களுக்கும் கட்டயாம் பிடிக்கும் .Oye Lucky! Lucky Oye! , Detective Byomkesh Bakshy! போன்ற நல்ல படங்களை இயக்கிவர்,

<3 span=""> மூன்றாவது படம் Sheila Ki Jawaani வேற லெவல் கான்செப்ட் சூப்பர். சிறுவனின் நடிப்பை பாராட்டியே ஆகவேண்டும். பன்னிரண்டு வயது சிறுவன் கத்ரின்னா ரசிகன், அவங்க அப்பா அவனை ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ் மேன் ஆக்கி பாக்கணும் ன்னு ஆசைபடுறார், அனா பையன் உடைய ஆசை வேற லெவல் அது என்னன்னு நீங்க படத்தை பாருங்க. <3 span=""> Zindagi Na Milegi Dobara , Talaash போன்ற சிறப்பான படங்களை இயக்கிவர்.

<3 span=""> பைனல் Murabba (Fruit Preserve) மாஸ்டர்பீஸ் இயக்குனர் அனுராக் <3 span=""> , செண்டிமென்டிலும், பாசத்திலும் உருக்கிய படம்..உத்தரப்ரதேசதில் இருக்கும் விஜெய் தனது தந்தை உடல் நிலை மோசமாக இருக்கும் நிலையில் அவரது கடைசி ஆசையை நிறைவேர்த சொல்லி கேற்கிறார் , என்ன ஆசை என்று பாருங்கள் , அனுராக் <3 span=""> என்று சொன்னாலே போதும் கிட்ட தட்ட எடுத்தவை எல்லாமே மாஸ்டர் பீஸ் படங்கள் தான்.



<3 span=""> நான்கும் கண்டிப்பாக உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வொர்த் .. <3 span="">
நேரம் கிடைத்தால் கட்டயாம் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் , எனக்கு பிடித்திருக்கிறது பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் :)

நன்றி

#சிவஷங்கர்

0 உங்கள் கருத்து:

எதையாவது தேடி பெற விரும்பினால்

Blogger